அறிவோம் அறிவியலை — எலுமிச்சை கனி
எலுமிச்சை பழம் கண் திரிஷ்டி கழிப்பதற்கு மட்டும் பயன்படுத்துவதில்லை. எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி,ராஜ கனி என்று சித்தர்களால் அழைக்கப்பட்டது.இதற்க்கு தெய்வ கனி, தேவ கனி, பித்த முறி மாதர் என்ற பெயர்களும் உண்டு. இது இந்தியர்களின் இதயக்கனி என்றே நான் கூறுவேன். மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் விட எலுமிச்சைக்கு அதிகம் உண்டு, எதிர்மறை ஆற்றல்களை அகற்றும். அதனால் தான் சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் எலுமிச்சை. கோயில்கள், பெரியவர்களை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கும் போதும் எலுமிச்சை கனி தரப்படுகிறது.இந்த அதிசிய கனி எல்லா காலங்களிலும் கிடைக்க கூடியது, எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது.
பல அதிசயங்களை கொண்ட அதிசியகனியினை பற்றி இங்கு காண்போம். எலுமிச்சை பழத்திற்கு உயிர் இருப்பதாக நமது வேத சாஸ்திரங்கள் சொல்கின்றன. முக்கனிகளுக்கு இல்லாத சிறப்பு எலுமிச்சை கனிக்கு உண்டு. எலுமிச்சையை குற்றம் இல்லாத கனி என்பர். ஆம், மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை.
எலுமிச்சையின் சிறப்பு, எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததால் தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் எனவும் பரவலாக கூறப்படுகிறது.
எலுமிச்சை கனியின் தாயகம் இந்தியா. ஆசாம் மாநில வழியாக பர்மா, சீனா போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பரவி இருக்கலாம்.இந்தியர்களை விட வெளி நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாக பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர்.
இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது.
முதன்முதலாக 1784ல் கார்ஸ்வில் ஹெம்ஷீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார். மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மை படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார்.
உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஓழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப் படுத்தியதாக கூறப்படுகிறது.
எலுமிச்சை கனியில் பின்வரும் சத்துக்கள் அடங்கியுள்ளது .
கொழுப்பு சத்து, சுண்ணாம்புச் சத்து,புரத சத்து,நார்ச்சத்து,இரும்பு சத்து,கால்சியம்,சோடியம்,பொட்டாசியம்,சர்க்கரை,கரோட்டின்,தையாமின்,நியாசின்,பாஸ்பரஸ்,வைட்டமின் ஏ,வைட்டமின் பி,வைட்டமின் சி,மினரல்ஸ் போன்றவை.
இதிலுள்ள அதிகமான வைட்டமின் ‘சி’ சத்தும், ரிபோஃப்ளோவினும் புண்களை ஆற்ற வல்லது.
மருத்துவ பலன்கள் :
எலுமிச்சை கனியை சாரை அப்படியே குடிக்ககூடாது. அதனுடன் தண்ணீர் அல்லது தேன் கலந்து குடிக்க வேண்டும்.
- எலுமிச்சை ஒரு கிருமி நாசினி (காலராக் கிருமிகளை ஒழிக்கும்).
-எலுமிச்சம் பழத்தில் நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள “ப்யோபிளேன்” என்ற சத்தில் உள்ளது. தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தைத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது. புரிகிறதா ஏன் எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலிலும், வண்டியிலும் காட்டுகிறோம் என்று ?
- தண்ணீருடன் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால் உடம்பிற்கு தெம்பு கொடுக்கும் .
- பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும்.
-வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.
- கண் நோய், காது வலியை குணப்படுத்தும்.
- எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து உண்டால் வறட்டு இருமல் நீங்கும்.
-கரும்புள்ளி, முக சுருக்கங்களை நீக்குகிறது.
- சீரான சுவாசம் தருகிறது.
- எலுமிச்சையின் வைட்டமின் சி , பொட்டாசியம் சத்துகள் நுரையீரலின் தொற்றுக்களை கட்டுப்படுத்துகிறது.
- சிறுநீரக கற்கள் உருவாபதை தடுக்கிறது.
- வயிற்று வலி, உப்புசத்தை குறைக்கிறது.
- கெட்ட ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
- டான்சிலைத் தடுக்கும்.
-விஷத்தை முறிக்கும் ( தேள் கடித்த இடத்தில் எலுமிச்சை பழத்தை வெட்டி தேய்த்தால் விஷம் முறியும் ).
- விரல் சுற்றியை குணப்படுத்தும் .
-யானைக்கால் வியாதியை குணப்படுத்தும்.
-மஞ்சக்காமாலையை நோயை குணப்படுத்தும்.
- எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி பெறும்.
- தாகத்தை தணிக்கும்
எலுமிச்சை சாறு மட்டுமல்ல, தோல் மற்றும் இலையிலும் மருத்துவ குணங்கள் உண்டு.
இன்னும் பல இருக்கின்றன. இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா எலுமிச்சையின் எண்ணிலடங்கா மருத்துவத்தை! உண்மையில் இது ஒரு அதிசயக்கனி.