ஏணிப்படிகள் — 4
ஏணியாய் உதவுபவர்கள்
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தருணத்திலும் ஏணியாய் சிலர் உதவுவார்கள் . அவர்கள் நமக்கு உதவும் போது அது நமக்கு தெரியாது , ஏன் அவர்களுக்கு கூட தெரிந்திருக்க வாய்ப்பு மிக குறைவு . அப்படி உதவுபவர்களை நாம் மனதார பாராட்ட வேண்டும் . அவர்களின் பங்கு அணில் போல சிறிதாக இருந்தாலும். அது நமது வெற்றிக்கான அடித்தளம் .
யாரெல்லாம் யாருக்கு உதவுபவர்கள் என்ற கேள்வி உங்களுக்கு ?
ü ஆசிரியர்கள் — சிறந்த குடிமகனாக மாறுவதற்கு
ü பெற்றோர்கள்
ü நண்பர்கள்
ü சகோதர/சகோதரிகள்
ü உறவினர்கள்
ü குரு
ü மருத்துவர்கள்
ü மற்றும் பலர்
யார் எப்படி எந்த வகையில் எந்த காலங்களில் வேண்டுமானாலும் உதவியிருக்கலாம், உதவலாம். இவர்கள் யாரும் பிரதிபலன் பார்க்காமல் உதவுவார்கள்.
பல தடவை விவாதங்களை கேட்டிருப்போம் வாழ்க்கையில் பெரிதும் உதவுவது நட்பா ?உறவா ?
எதற்கு விவாதங்கள் அவர்கள் அனைவரும் பெரிதும் உதவுபவர்கள் தானே.
இன்றைய சூழலில் மின்தூக்கி (லிப்ட்) மாதிரி வெற்றிடத்திற்கு யார் கொண்டு செல்கிறார்களோ அவர்களை தான் மதிக்கிறோம். படிக்கட்டுகளாக முன்னேற்றி விடுபவர்களை உதாசீனப்படுத்துகிறோம். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும், மின்தூக்கி போல் வெற்றி இடத்தை அடைவது சரிவையும் வேகமாக கொடுக்கும்.
உதவுபவர்கள் நமக்கு பணமோ, பொருளோ கொடுக்கவில்லை என்றாலும் தன்னம்பிக்கை, தைரியத்தை, துணிச்சலை உங்களுக்கு கொடுத்திருப்பார்கள். விவேகானந்தர் கூறியது போல “பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை தட்டி கொடுப்பது மட்டும் தான்”. அப்படி தட்டி கொடுப்பவர்கள் தான் நமக்கு பெரிதும் உதவுபவர்கள், கடவுளுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும். அப்படி செய்பவர்களை கைகூப்பி வணங்குங்கள்.
உதவுபவர்கள் ஏணியாய் இருப்பதால்தான் நாம் ஏற்றங்களை காண்கிறோம். நமக்கு துரோகம் செய்பவர்கள் கூட ஒரு வகையில் உதவுபவர்கள் தான் அவர்கள் மீது நாம் கோபம் கொள்ள தேவையில்லை. ஆம் அவர்களிடம் கற்கும் பாடமே நமக்கு ஒரு ஏணி யாக அமையும். குறைகளை செல்பவர்களை கூட உங்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுபவர்கள் தான். பிறர் நிலை அறிந்து உதவுபவர்கள் உயர்நிலை அடைவர். அவர்கள் மனதால் பணக்காரர்கள் என்றுமே!!
ஏணியாய் உதவுபவர்களை நாம் என்றுமே ஏமாற்றக்கூடாது. அவர்களைப் போற்றிப் பாராட்ட வில்லை என்றாலும், அவர்களது கைகளை ஏணியாய் மிதித்து ஏறும்போது வணங்கி ஏற வேண்டும். அவர்களை ஏறியபின் தட்டி விடக்கூடாது, ஏமாற்றக்கூடாது.
அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு சங்கிலித் தொடராக அமைய வேண்டும் என்பதே இந்த பாகத்தின் நோக்கம்.