கதை கேளு — ஆடம்பரம்

Sankar sundaralingam
2 min readMar 26, 2022

--

மனிதனுக்கும் குரங்குக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் இந்த கதை.

பணக்கார மனிதர் தனது வீட்டு மாடியில் தினமும் குரங்குகளுக்கு உணவளிப்பார், அந்த உணவை உட்கொள்ள குரங்குகள் வரும், சில நிமிடங்கள் அவருடன் விளையாடி செல்லும்.

இப்படி பல வருடங்களாக நடந்து வருகிறது. ஒரு நாள் உணவளிக்கையில் பணக்காரர் மிகுந்த சோகத்துடன் இருந்தார். அதை கவனித்த குரங்கு கூட்ட தலைவன், பணக்காரரை நெருங்கி தாங்கள் சௌகரியமாக இருக்கிறீர்கள் அல்லவா என்று கேட்டது?

அதற்கு பணக்காரர் என்னை சுற்றி சௌகரியமான வசதிகள் இருக்கிறது. மனமும், உடலும் சௌகரியம் இல்லை வானரா, எல்லாம் என் விதி.

ஐயா, ஏன் விதியை குறை சொல்கீறீர்கள், இவை அனைத்தும் மனித செயல்களின் விளைவு. நான் தங்களை மட்டும் சொல்லவில்லை. ஒட்டு மொத்த மனித இனத்தையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

விலங்கின் (குரங்கு) பரிணாம வளர்ச்சி மனிதன், மனிதனுக்கு அடுத்து வேற எந்த விலங்கினத்துக்கும் இந்த வளர்ச்சி இல்லை. மனிதன் தனது சுக போகங்களுக்கு பல வளங்களை அழித்தான். இன்று அதுவே அவனுக்கு பாதிப்பை உருவாக்குகிறது. மகப்பேறு பிரச்சனை, சுக பிரசவம் இல்லை,புற்றுநோய் இன்னும் கூறிக்கொண்டே போகலாம். போதாத குறைக்கு மனிதர்களுக்குள்ளே வேற்றுமை, போட்டி, பொறாமை, சண்டை.. ஒரு குடும்பத்தில் 4 நபர்கள் கூட ஒற்றுமையாக வாழ முடியவில்லை.

ஆடம்பரம் மாயை உங்கள் அனைவரையும் ஆட்டி படைக்கிறது. ஆனந்தமான வாழ்க்கை வாழ ஆடம்பரம் தேவை இல்லை, அன்பானவர்கள் நம்முடன் இருந்தால் போதும்.

பணக்காரர் : நாங்கள் என்ன ஆடம்பரம் செய்கிறோம் ? இருப்பவைகளை அனுபவிக்கிறோம். இவைகள் எங்களுக்கு தானாக அமையவில்லை, தொழில்நுட்ப வளர்ச்சி. இவற்றை பெற நாங்கள் உழைக்க வேண்டும்.

குரங்கு தலைவன் : எல்லாம் சரி ஐயா! அதன் விளைவுகளை எண்ணி பார்க்க வேண்டாமா?

ஆடம்பரம் வேறு, அத்தியாவசியம் வேறு. தேவைக்கான கண்டுபிடிப்புகள் வரவேற்க்கத்தக்கது, அதை ஆடம்பராமாக்கி செயல்படுத்துவது நல்லதல்ல. நீங்கள் வாங்கும் பொருள்கள் ஆடம்பரத்திற்க்காகவா அல்லது அத்தியாவசியத்திற்க்காகவா? பெரும்பாலும் ஆடம்பரத்திற்க்காகத்தான். தெருவோர கடைகளில் பேரம் பேசும் பணக்காரர்கள் , அலங்கார கடைகளில் அடங்கி விடுகிறார்கள். ஆடம்பரம் ஆள்கிறதல்லவா!

ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம் போன்றது, ரொம்ப நேரம் ஆட முடியாது. ஆசைக்குள் ஆடம்பரம் நுழைய கூடாது, அப்படி நுழைந்து விட்டால் வாழ்க்கை அழிந்து விடும்.

ஆடம்பரம் என்ற போதையில் சிக்கிக் கொண்டதன் விளைவு தான் இன்றைய சூழல். எவர் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள பிற நாட்டின் மீது போர், கடன் வாங்கி ஆடம்பர செலவு, கேட்டால் மானப்பிரச்சனை என்ற பதில். ஆடம்பர வாழ்க்கையை (செலவுகளை) அடியோடு தவிர்ப்போம்.

எளிமையாக இருங்கள்,எளிமையாக வாழுங்கள், கடனில்லாமல் வாழுங்கள்.

வானரா நீ சொல்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. முயற்சித்து பார்ப்பதில் தவறொன்றுமில்லை.

கதை கருத்து:

ஆடம்பரம் தவிர்ப்போம்.

மனநிறைவு என்பது நம்மிடம்

இயல்பாகவே உள்ள செல்வம்..

ஆடம்பரம் அமைதியின்மை என்பது

நாமே தேடிக்கொள்ளும் வறுமை..

சாக்ரடீஸ்

ஆடம்பரத்தினால் அடங்கா ஆசை வளர்ந்திடும். உண்மையான தேவை எது என அறிந்து செயல்பட்டாலே ஆடம்பரம் தானே போய்விடும்.

ஆடம்பரம் இல்லாத அமைதி மற்றும் எளிமையான வாழ்க்கை மன நிறைவு தரும்.

தீருமா இந்த ஆடம்பர மோகம்…..!

--

--

No responses yet