கதை கேளு — உழைப்பு
உழைப்பு
ஒரு இளைஞன் தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என ஆவலுடன் சிந்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு பல எண்ணங்கள் தோன்றின உழைப்பால் முன்னேறலாமா (அ) அதிர்ஷட்டதால் முன்னேறலாமா (அ)குறுக்கு வழியில் முன்னேறலாமா ? அவனால் எது சரி என முடிவெடுக்க முடியவில்லை. சரி இப்படி முன்னேறியவர்கள் மற்றும் சுற்றத்தாரை சந்தித்து ஆலோசனை கேட்கலாம் என முடிவெடுத்து சந்திக்க தொடங்கினான் .
முதலில் தனது சுற்றத்தாரான தச்சு ஆசாரியை சந்திக்கிறார் . இவர் எப்போதும் அயராது உழைப்பவர். இவர் சும்மா இருந்து பார்த்ததே இல்லை. இவர் தான் சரியான ஆள். அவரை சந்தித்து வாழ்க்கையில் உழைத்தால் முன்னேறலாம் என கேட்கிறார்.
அதற்கு அந்த ஆசாரி, அட போடா உழைப்பை நம்பி ஒரு புண்ணியமும் இல்லை. என் வாழ்க்கை பார் உழைத்து, உழைத்து ஓடாய் தேய்ந்து போனேன் . அதிர்ஷ்டம்தான் முக்கியம். அதிர்ஷ்டம் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் எனக்கூறி தன் வேலையை தொடர ஆரம்பித்தார்.
அடுத்ததாக தனது கிராம ரவுடியை சந்திக்கிறார். அவரை சந்தித்து வாழ்க்கையில் முன்னேற உங்கள் வழியை பின்பற்றலாமா என கேட்க? அந்த ரவுடி தம்பி, என் வாழ்க்கை மிக ஆபத்தானது. என் நேரமும் என்னை தாக்க என் எதிரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். குறுக்கு வழியில் சம்பாதித்தால் பணம் நிறைய சேரும், ஆனால் நிம்மதியை தொலைத்து விடுவாய் என்று கூறி சென்றார்.
அதிர்ஷ்டசாலி என ஊர் மக்களால் கூறப்படும் தொழிலதிபரை இளைஞன் சந்திக்கிறான். அவரை சந்தித்து நடந்தவற்றை விளக்குகிறான். அதிர்ஷட்டதால் முன்னேறுவது எப்படி என இளைஞன் கேட்க.
தொழிலதிபர் முதலில் எனக்கு ஒரு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறுகிறார். இளைஞன் உடனே சரி, விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்
நீர் பற்றி உன் விளக்கம் என்ன?
இளைஞன் உடனே நீர் இல்லாமல் உலக வாழ்க்கை அமையாது என்பது வள்ளுவரின் வாக்கு. நீரானது சுவையற்றது,நிறமற்றது. நீர் தனக்கான பாதையை அமைத்து ஆறாக பாய்கிறது.
தொழிலதிபர் சரி , நீரானது எவ்வளவு பெரிய கடின பாறைகளையும் அடித்து செல்லும். பாதையை அது வாய்ப்பு வரும்போது அமைத்துக்கொண்டு ஆறாக பயணித்து கடலில் கலக்கிறது. அதுபோல ஓயாமல் உழைத்துக் கொண்டிருப்பதோடு வாய்ப்புக்கு தகுந்தவாறு அமைத்துக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம். உழைப்பு மட்டுமே உன்னதம், உழைப்பு என்பது தக்கவாறு வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு நேர்மையாக உழைக்க வேண்டும். எவ்வளவு நேரம் ஒழிப்பது என்பது முக்கியமல்ல உண்மையாக உழைக்க வேண்டும். சிலர் இதை அதிர்ஷ்டம் என்கிறார்கள் என்று கூறி விடைபெற்றார். இப்போது இளைஞனுக்கு உண்மையான உழைப்பின் அருமை தெளிவு பட்டது.
கதை கருத்து:
அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும் அமையாது.
உதவி என்பது அனைவரிடமும் கிடைக்காது
உன்னிடம் உள்ள உண்மையான உழைப்பு உன்னை என்றுமே மேம்படுத்தும்.
செல்கின்ற பாதையில் நேர்மையான உழைப்பை செலுத்து, நீரைப்போல உன்னாலும் வாழ்க்கை பாதையை அமைக்க முடியும்.
மகத்தான செயல்கள் கடின உழைப்பு இல்லாமல் தாமாக ஒரு பொழுதும் நடப்பதில்லை
-விவேகானந்தர்