கதை கேளு — ஓதாத கல்வி கெடும்
ஒரு நாள் ஒரு பெரிய உலகளாவிய கணினி நிறுவனத்தின் நிறுவனர் தனது வண்டியில் வந்து கொண்டிருந்தார். திடீரென அந்த வண்டி பழுதாகி நின்றது. வண்டியை சரி செய்ய அவரது ஓட்டுனர் முயற்சித்தார், ஆனால் பலன் கிடைக்கவில்லை. அது ஒரு மாலை நேர பொழுது, அப்பொழுது அந்த நிறுவனர் வண்டியை விட்டு இறங்கி சாலை ஓரத்தில் உள்ள கிராமத்திற்கு சென்றார். அங்கு கிராம மக்களை சந்தித்தார், தன்னைப்பற்றி எடுத்துக்கூறினார். அந்த மக்கள் அவரை நன்கு உபசரித்தனர், அவரது வண்டியை சரி பார்க்க தங்கள் கிராமத்திலுள்ள மெக்கானிக்கை அனுப்பினர் . சற்று நேரத்தில் அவரது ஓட்டுநர் அந்த கிராமத்திற்கு வந்து நமது வண்டி சரி செய்யப்பட்டுவிட்டது. இந்த கிராம மெக்கானிக் மிகவும் கை தேர்ந்தவர் என்றார். நாம் இப்பொழுது புறப்படலாம் என்று கூறினார். அந்த நிறுவனர் மக்களுக்கு நன்றி தெரிவித்து தன்னுடன் சுமார் 2 மணி நேரம் உரையாடியதற்கும், எனக்கு உங்கள் மெக்கானிக் உதவி செய்ததற்கும் நன்றி. நான் உங்கள் ஊருக்கு ஏதாவது செய்யவேண்டும். உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள் எனக்கேட்டார்.
அதற்கு அந்த ஊர் மக்கள் ஐயா, நீங்கள் மிகப்பெரிய கணினி நிறுவனத்தின் நிறுவனர். எங்கள் ஊரில் உள்ள இளைஞர்கள் உங்களைப் போன்ற பெரிய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது இல்லை. நீங்கள் எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பைப் அளித்தால், அவர்களும் அதற்கு அடுத்த சந்ததியும் நன்றாக வளரும். அதற்கு உடனே அந்த நிறுவனர் உங்கள் ஊரில் நல்ல அறிவாளிகள், திறமைசாலிகள் இருந்தால் நான் நேர்காணல் மூலம் இரண்டு பேரை தேர்ந்தெடுத்து கொள்கிறேன். எனது நிறுவனத்தில் பணிபுரிய, அதற்கான நேர்காணலை நானே முன்னின்று இப்போது நடத்துகிறேன் என்று கூறினார். அழையுங்கள் உங்கள் இளைஞர்களை நேர்காணலுக்கு .
உடனே அந்த கிராம மக்கள் தங்கள் ஊரில் உள்ள இளைஞர்களை அழைத்தனர். அதில் படித்த இளைஞர்கள் உடனடியாக நேர்காணலுக்கு தயாராகும் வேண்டும் என்று கூறினர். இதைக் கேட்ட அந்த நிறுவனர் படித்த இளைஞர்கள் தான் மட்டுமில்லை, அனைத்து இளைஞர்களையும் கூப்பிடுங்கள். நான் அவர்களின் அறிவு, திறமையை பார்த்து தேர்ந்தெடுத்து கொள்கிறேன் என்று கூறினார். அந்த கூட்டத்தில் சுமார் 20 இளைஞர்கள், அதில் 18 பேர் படித்தவர்கள் இரண்டு பேர் மட்டும் படிக்கவில்லை குடும்ப சூழ்நிலை காரணமாக. 18 இளைஞர்களும் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு வந்தனர்.
நேர்காணல் நடைபெற்றது , 18 நபர்களும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களுடன் நேர்காணலில் பங்கேற்றனர். அவர்களால் நேர்காணலில் சிறந்த முறையில் செயல்பட முடியவில்லை . கடைசியா 2 பேர் கல்வி பயிலாதவர்கள் தங்கள் வீட்டில் உள்ள சிறு கணினியுடன் வந்து நேர்காணலில் பங்கேற்றனர் . அவர்கள் அந்த நிறுவனரிடம், தாங்கள் எப்படி இந்த கணினியை உருவாக்கினோம் என்றும் அதன் செயல்பாடுகள் பற்றி விளக்கினர். அவர்களை பார்த்து வியப்படைந்தார் . பின்னர் இறுதி சுற்று அனைவரையும் கூப்பிட்டு கணினி குறித்து அடிப்படை கேள்விகளை கேட்டார் . படித்த மாணவர்கள் இது எங்கள் படிப்பில் கிடையாது , மறந்துவிட்டது , நாங்கள் நேர்காணலுக்கு முன் படிக்கவில்லை என்றனர், மற்ற இரண்டு மாணவர்களும் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் கூறினர் . ஊர் மக்களுக்கு ஒரே அதிர்ச்சி எப்படி என்று.
அந்த நிறுவனர் இந்த 2 நபர்களுக்கு என் நிறுவனத்தில் வேலை , அவர்களுக்கு மாதம் சம்பளம் ரூபாய் 100,000 என்று கூறினார் .
படித்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி இது எப்படி நியாயம் ? அவர்கள் ஊர் மக்களிடையே விவாதித்தனர் . ஊர் மக்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை . இதை பார்த்துக்கொண்டிருந்த நிறுவனர் உடனடியாக அந்த படித்தநபர்கள் மற்றும் ஊர் மக்களை பார்த்து . ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள் , அது போல சான்றிதழ்கள் , மதிப்பெண்கள் போதாது நீங்கள் படித்த திறமை சாலிகள் என்று கூறுவதற்க்கு.
படிக்காத படிப்பு பலனில்லை. ஓதாத கல்வி கெடும் என்று அவ்வையார் கூறியுள்ளார். நீங்கள் தேர்வு எழுதுவதற்கு மட்டும் மேலோட்டமாகப் படித்துப், மதிப்பெண் பெற்று சான்றிதழ் பெற்றுள்ளது படிப்பு கிடையாது. படிப்பு என்பது அடிப்படைகளை சரியாக புரிந்து கொள்வதுதான். அடிப்படை இல்லை என்றால் எந்த பலனும் இல்லை. மற்ற இரண்டு நபர்கள் கல்லூரிக்குச் சென்று படிக்க வில்லை என்றாலும் கணினியில் உள்ள ஆர்வத்தால் அதன் சார்ந்த தொழில் நுட்பங்களை நன்கு படித்து , அதன் அடிப்படைகளை தெரிந்து. அதன் மூலம் சிறந்த கணினியை உருவாக்கியுள்ளனர். அவர்கள்தான் உண்மையான படித்தவர்கள். ஒன்றும் அறியாமல் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் படித்தவர்கள் கிடையாது. இதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறு அங்கிருந்து விடைபெற்றார்.
கதை கருத்து :
படிக்காத படிப்புக்கான ( சான்றிதழ் ) பலனில்லை. அரிஸ்டாட்டில் சொன்னது போல இதயத்தைப் பயிற்றுவிக்காமல், மூளையை பயிற்றுவிப்பது என்பது கல்வி அல்ல. ஓதாத கல்வி கெடும் அதனால் அடிப்படை புரிந்து படியுங்கள் தேர்வுகளுக்காக மேலோட்டமாக படிப்பது பலனில்லை . இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் சாண்றிதழ்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை , உங்களது அறிவு திறமைக்குத்தான் வரவேற்பு .