கதை கேளு — தீர்மானங்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
கண்டிப்பா இந்த புத்தாண்டில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தீர்மானங்கள் எடுத்திருப்போம். புத்தாண்டு தீர்மானங்கள் நிர்ணயிகிறது சுலபமா இருக்கும், ஆனா அதை நடைமுறைப்படுத்துவது தான் நமக்கு பல சவால்கள் . இந்த கதையில் எப்படி தீர்மானங்கள் திறமையாக செயல் படுத்த முடியும் என்பதை பற்றி தெரிஞ்சுக்கலாம்.
நம்ம ஊரு மைனர் புத்தாண்டு அன்று கண்ணாடி முன் நின்று இந்த வருடத்திர்கான தீர்மானங்களை பட்டியலிட்டான்.
புரிகின்றது உங்கள் மனக் குரல்….
பட்டியல் பெரிது தான், சற்று பொறுத்திருங்கள் என்ன நடக்குது என்று பார்ப்போம் …எல்லாம் சுயநலமான தீர்மானங்கள்
1. காலையில் சீக்கிரம் எழுந்திரு
2. இரவு படுக்கைக்கு முன்னதாக செல்தல்
3.அனைத்து கடன்களையும் திருப்பி செலுத்துதல்
4.கடன் அட்டை பயன்பாடு தவிர்த்தல்
5. மதுவை விட்டுவிடுதல்
6.புகைபிடிப்பதை நிறுத்துதல்
7.தினசரி உடற்பயிற்சி
8.உடல் எடையை குறைத்தல்
9.நிறைய தண்ணீர் குடித்தல்
10. சோம்பலை அகற்றுதல்
11.புத்தகங்கள் படித்தல்
பட்டியலிட்டவுடன் அவன் உள்ளுணர்வு கூறியது, பாவம் தீர்மானம்!
வியந்தது கண்ணாடியை பார்த்தான், கடந்த வருட தீர்மானங்கள் ? அப்படியே இருக்கிறது. வருடம் வருடம் பட்டியல் நீள்கின்றது ஆனால் எதையும் செயல் படுத்தன மாதிரி தெரியவில்லை.
என்ன பண்ணலாம் ?
நீண்ட நேரம் உள்ளுணர்வுடன் விவாதம் , இறுதியில் முடிவுக்கு வருகிறான், அவனின் நண்பர்களை அழைத்து கூறுகிறான், எனது தீர்மானங்களை விளம்பர படுத்த வேண்டாம் , செய்து காட்டியவுடன் சொன்னால் தான் சாதனை. நாம் அரசியல் வாதிகள் போல் இருக்க கூடாது தீர்மானங்களை செயல்படுத்துவதில்.
என்ன புரியவில்லையா ?
தீர்மானங்களை செயல்படுத்துவதில் அரசும், மக்களும் சமம். தீர்மானங்கள் தீர்மங்களாகவே இருக்கும் கடைசி வரைக்கும் , செயல் வடிவமாகாது .
நாம் இப்ப கொஞ்சம் மாறுவோம், தீர்மானங்களை தீர்கமானதாக்குவோம்.
அவசர பட வேண்டாம் நண்பர்களே கொஞ்சம் பொறுங்கள் .
எதையும் பிளான் (திட்டம்) பண்ணாமல் பண்ண கூடாது. ( வடிவேல் நகைச்சுவை)
· தீர்மானங்கள் தான் நம் இலக்குகள்
· இலக்குகள் அடைய சரியான திட்டமிடல் வேண்டும்
· திட்டங்களை செயல் படுத்த வேண்டும்
இலக்குகள் பின்வருமாறு இருக்க வேண்டும்
- யதார்த்தமாக
- கடந்த தோல்விகளை மீண்டும் செய்வதைத் தவிர்க்கவும்
- உங்கள் தீர்மானங்களை வரம்பிடவும் / முன்னுரிமை படுத்தவும்
திட்டமிடல்
- திட்டமிடலில் நேரத்தை ஒதுக்குங்கள்
- தினசரி பழக்கங்களாக மாற்றுங்கள்
- ஒரு திட்டமிடல் புத்தகத்தை வைத்திருங்கள்
செயல் படுத்தல்
- சிறிய படிகளுடன் ஆரம்பிக்கவும். …
- காகிதத்தில் எழுதி ஒட்டவும்
- மாற்றம் ஒரு செயல்முறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். …
- ஆதரவைப் பெறுங்கள். …
- உங்களின் உந்துதலைப் புதுப்பிக்கவும்
இனிமேல் எனது தீர்மானங்கள் சுயநலம் மற்றும் பொது நலன் கலந்து இருக்கும் .
- முன்னேற்றத்திற்காக பாடுபடுதல்
- ஏழைகளுக்கு உதவுதல்
ஒரு திட்டம் போல் தெரிகிறது, நல்லது. அதை செய்வோம். வருடம் கடந்தது தீர்மானங்கள் செயல் வடிவம் பெற்றிருந்தது பெறப்பட்டது, அடுத்த வருட தீர்மானங்களுக்கு தயாராகினர் மைனர், உள்ளுணர்வு சபாஷ் என்று பாராட்டியது.
கதை கருத்து:
தீர்மானங்களை மட்டும் எடுக்காதீர்கள். பழக்கங்களாக உருவாக்குங்கள்.
தீர்மானங்கள் தீர்மானமாக செய்து முடிக்க வேண்டியது அவரவர் கடமை. அனைத்து காரியங்களையும் திட்டமிட்டு செய்ய முடியாது. ஆனால், நம் குறிக்கோள்கள் மற்றும் செய்ய விரும்பும் காரியங்களை சரியான திட்டமிட்டு செயற்படுத்தினால் தீர்மானங்களை எளிதாக நிறைவேற்ற முடியும்.
தீர்மானங்களை பாரம் என கருத்தாதீர்.
உமது புத்தாண்டு தீர்மானங்கள் செயல்வடிவம் பெற எனது வாழ்த்துக்கள்.