கதை கேளு — தீர்வு (75வது வாரம்)
தீர்வு மனிதருக்குரிய ஒரு அடிப்படைத் திறன், பல நேரங்களில் இந்த யதார்த்தத்தை அறிவதில்லை. வாழ்க்கைச் சிக்கல்கள் எல்லா காலங்களிலும் வெவ்வேறு விதமாக வரும். அனால் அதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது , குரங்கு மனம் அல்லவா ? சமீபத்தில் எனது சிறு வயது நண்பன் தற்கொலை செய்து கொண்டான். ஏனோ அவனால் அவன் பிரச்சனைக்கான தீர்வை காணமுடியவில்லை. அதன் தாக்கம் தான் இந்த தலைப்பு.
நாத்திகவாதி கோயில் வாசலின் முன் நின்றுகொண்டு அங்கு வரும் பக்தர்கள் கடவுளிடம் என்ன வேண்டுகிறார்கள் என்று கவனித்துக்கொண்டிருந்தான். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கடவுளிடம் தங்களது பிரச்சினைகளை முன்னிறுத்தி வேண்டி, அதற்கான தீர்வுகளை தங்களுக்கு அளிக்குமாறும், பிரச்சனைகளை கையாள தங்களுக்கு மன தைரியம் வேண்டும் எனவும் வேண்டி சென்றனர்.
இவனோ என்னடா இது முட்டாள்தனமாக இருக்கு. கோயிலுக்குள் வரும் போது சோகத்துடன் வாரங்க , சாமி கும்பிட்டு போகும் போது முகமலர்ச்சியோடு செல்கின்றனர். இவர்களிடம் இந்த கடவுள் பேசினாரா? இல்லை, அப்ப இது எப்படி சாத்தியம் என்று யோசித்தான்.
ரொம்ப நேரம் யோசிச்சுட்டு , ஒரு முடிவு எடுத்துவிட்டு அவன் கோயிலுக்குள்ள போறான். இந்த கடவுள் முன்னாடி நாமும் ஏதாவது சொல்லலாம், அவர் நமக்கு பதில் சொல்கிறாரா என்று பார்ப்போம். அப்படின்னு கோயிலுக்குள் போன அவன் கடவுள் சிலையை பார்த்து, என்ன எல்லாரும் பிரச்சினையும் உன்கிட்டே சொல்ல வராங்க. உன்கிட்டஅவ்வளவு தீர்வுகள் இருக்கா? அப்படி இருக்குன்னா, அது ஏன் அவங்களுக்கு நீ முன்னாடியே கொடுக்கக்கூடாது? நீயே ஏன் உன் கிட்ட வச்சுகிட்டு இருக்கன்னு கேட்டான்.
சற்று நேரம் மௌனம். ஒன்னும் சத்தமே காணோம். நினைத்தது சரிதான். கற்களிடம் பேசினா பதில் எப்படி / தீர்வு எப்படி கிடைக்கும்?
மௌனத்தை தொடர்ந்து ஒரு ஓசை . தம்பி நான் கடவுள். மௌனம் தான் பல பிரச்சனைகளுக்கு தீர்வு.
அவன் சுற்றி பார்கிறான் , யாரும் கிடையாது . சற்று சுதானித்து கேட்கிறான், நீ இத்தனை பக்தர்களிடம் பேசாமல் என்னிடம் மட்டும் ஏன் பேசுகிறாய் , நான் எப்படி நீ கடவுள் என நம்புவது ?
என்னை நம்பி வந்தவர்களிடம் நான் பேசவில்லை அனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றார்கள் என்னை வணங்கிய பின். சந்தேகம் உனக்கு தான் , அதனால் தான். மேலும் சொல்கிறேன் கேள் .
இங்கு வந்து சிக்கல்களை சொல்லறாங்க, ஆனா அதற்கான தீர்வு அவங்க கிட்ட தான் இருக்குது. அந்த சரியான தீர்வை தேர்தெடுத்து வெற்றி கிடைத்தா , அவங்க திறமை என கொண்டாடிக்கிறாங்க. தோல்வி அடைந்தாள் நேரம்,காலம், கிரகநிலை சரியில்லை, கடவுள் தனக்கு உதவவில்லை என்று கூறிடுவாங்க. நான் அனைத்தையும் கவனித்துதான் வருகிறேன்.
நாத்திகன் : அப்ப இங்க வருகின்றதால் எந்த பலனும் இல்லை!
கடவுள் : உன் குழப்பம் அதுவா அல்லது தீர்வுகளை எப்படி கண்டுபிடிப்பது என்பதா ?
நாத்திகன் : தீர்வுகளை எப்படி கண்டுபிடிப்பது என்றுதான் . அது பற்றி உங்களின் கருத்து
கடவுள்: பிரச்சனை அல்லது சிக்கல்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. பிரச்சனை இல்லாத மனிதர்களே இல்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான பிரச்சனைகள், அதன் தீர்வு அவர்கள் கைகளில்தான் . என்னிடம் கவலைகள்/ பிரச்சனைகளை கூறலாம், ஆனால் தீர்வு என்னவோ அவர்களிடம் தான் உள்ளது.
இன்னும் எளிமையாக கூற வேண்டுமென்றால், வாழ்க்கை = பிரச்சனைகள் + தீர்வுகள்.
ஒரு இடத்துக்கு செல்ல பல வழிகள் இருப்பது போல பல சிக்கல்களுக்கு பல தீர்வுகள் இருக்கலாம். அவற்றை அலசி, விளைவுகளை வரிசைப்படுத்தி பொருத்தமான தீர்வை தேர்வு செய்து செயல்படுத்த வேண்டும்.
தீர்வுகளை தேர்வு செய்து செயல்படுத்துவதை விட்டு விட்டு பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள் அதனால் மனம் தடுமாறுகிறது. பிரச்சினைகளைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு அதற்கான தீர்வை சிந்தியுங்கள் பிரச்சனைகள் தவிடு பொடியாகிவிடும்.
நாத்திகன் : சரிதான், பிரச்சனைகள் ஏன் வளர்கின்றது என்று பார்த்தால் ? அதை நாம் வெகுநேரம் சுமக்கின்றோம். அந்த சுமையே வலியாக மாறுகிறது.
கதை கருத்து:
தன்னுள்ளே குவிந்துள்ள,
தான் திறன் அறிந்து,
திட மனதுடன் ,
தீர்வை கண்டு வெற்றி அடைக…
மற்றவர்களின் நிலைமையிலிருந்து யோசித்துப்பார் என்று கூறுவோம். அதுபோல பிரச்சனைகளையும் நம்மால் கையாள முடியும். அடுத்தவர்களது பிரச்சினைகளுக்கு பல தீர்வுகள் உங்களுக்கு தென்படுகிறது. ஆதலால் உங்கள் பிரச்சினைகளை அடுத்தவர்கள் பிரச்சினை என அணுகுங்கள். உங்களுக்கு பலவகை தீர்வுகள் தென்படும்.
அனைத்து சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் மூன்று வகையான தீர்வுகள் உண்டு .
1.ஏற்றுக்கொள்வது
2.மாற்றிக்கொள்வது
3. விட்டு விடுவது
ஏற்றுக்கொள்வோம், ஏற்றுக்கொள்ள முடியாததாய் மாற்றிக்கொள்வோம், மாற்றிக்கொள்ள முடியாததை விட்டுவிடுவோம். ரொம்ப நாட்கள் மனதில் வைத்து சுமக்க வேண்டாம்.
ஒரு பிரச்சனைக்கு தீர்வு முதல்ல இந்த பிரச்சினையை புரிஞ்சிக்கிறது. சரியாக புரிந்து கொண்டாலே பாதி தீர்வு கிடைத்த மாதிரி.
வாழ்க்கை தொடங்குவதில் மட்டுமல்ல , பிரச்சனைகளை சமாளித்து தீர்வு கண்டு தொடர்வதில் தான் வாழ்க்கை இருக்கிறது . தொடருவோம் நமது வாழ்க்கை பயணத்தை….