கதை கேளு-பாவ புண்ணியங்கள்
அழகிய காலைப்பொழுது, கங்கை நதிக்கரையில் மன்னர் நீராட வந்திருந்தார், அந்த நதிக்கரையில் சித்தர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. மன்னர் அவரை சித்தரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். சித்தர் மன்னரை நோக்கி அனைத்தும் நன்று, இங்கு ஏன் வந்துள்ளீர்கள்? எனக் கேட்க, மன்னர் சித்தரே நான் ஒவ்வொரு நாட்டையும் கைப்பற்றிய பின்னர் அதாவது போரின் வெற்றிக்குப் பிறகு புனித நதியில் நீராடுவது வழக்கம். அப்படி நீராடினால் போரில் நாங்கள் கொன்றுகுவித்த பாவங்கள் போகும். அதனால்தான் இதை நான் வழக்கமாக கொண்டுள்ளேன்.
சித்தர் : புண்ணிய நதியில் நீராடினால் பாவங்கள் போய்விடுமா?
மன்னர்: இதிகாசங்கள் மற்றும் முன்னோர்கள் கூறுகின்றனர்.
சித்தர்: அது நீ புரிந்துகொண்ட விதம். உண்மை அதுவல்ல.
செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுகின்ற நிலையில், புண்ணிய தலங்களில் நீராடுவதால் நாம் செய்த பாவம் தொலைந்து போகும். ஆனால் தெரிந்து வேண்டுமென்றே செய்கின்ற பாவங்கள் நிச்சயம் தொலைந்து போகாது.
அறிந்தும் அறியாமலும் செய்கின்ற பாவங்கள் மட்டுமே மனதை உறுத்துகிற காலத்தில்,மனம் திருந்திய நிலையிலும் தவறு செய்து விட்டோம் என்பதை நீங்கள் உணர்ந்து அதற்கு பிராயசித்தம் தேட வேண்டும் என்று நினைத்தே புண்ணிய தலங்களில் நீராடுவதால் நீங்கள் செய்த பாவம் தொலையும்.
ஒருவன் தான் செய்தது தவறு என்பதை மனமார உணர்ந்து, அந்த தவறுகளை எண்ணி மனதளவில் வருந்துகின்றனோ அவனுக்கு மட்டுமே புண்ணியத் தலங்களில் நீராடுவதால் பாவம் தொலைந்து போகும்.
இதைக் இதைக் கேட்ட மன்னன் முகம் முற்றிலும் சிவந்தது. மன்னன் சித்தரை வணங்கி, நான் இனிமேல் எந்த நாட்டின் மீதும் பொன் பொருளுக்கு ஆசைப்பட்டு படை எடுக்க மாட்டேன். எந்த உயிரையும் கொல்ல மாட்டேன். இது முற்றிலும் உறுதி என கூறி விடை பெற்றான்.
கதை கருத்து:
செய்த பாவங்கள் கேள்வி கேட்கும்.
செய்த புண்ணியங்கள் பதில் சொல்லும்.
ஒருவன் தனது அடிப்படை குணங்களை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பாவச் செயல்களில் ஈடுபட்டு புண்ணிய நதியில் நீராடினால் அவனது பாவம் நிச்சயம் போகாது.
மற்றவர்களுக்கு தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள், உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விதைத்த கொள்கிறாய்.