கதை கேளு — மாற்றம்

Sankar sundaralingam
2 min readMay 29, 2021

--

கடந்த வருடம் சாலை விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் சில மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று, பின் வீட்டு சிகிச்சையில் இருந்த நபர் சுமார் ஒரு வருட காலத்திற்கு பின்பு பணிக்கு திரும்புகிறார். அக்கம் பக்கத்தார், நண்பர்கள், அலுவலக நண்பர்கள் பலரை சந்திக்கிறார். அனைவரும் அவரை நலம் விசாரிக்கின்றனர்.

கைகொடுக்க கைநீட்டியும் அனைவரும் வணக்கம் வைக்கின்றனர். சற்று தள்ளி நின்று பேசுகின்றனர். பெரும்பாலானோர் முகக் கவசம் அணிந்துள்ளனர், பயத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை. இதை கண்ட உடன் இவருக்குப் பெரும் அதிர்ச்சி. கொரோனா என்ற நோயால் எவ்வளவு பெரிய தாக்கமா சமுதாயத்தில்? மனிதாபங்கள் மறந்து விட்டனவா?

அவனுககுள் பல கேள்விகள்?

சிறிது நேரத்தில் அவன் உள்ளுணர்வு அவனுடன் பேசத் தொடங்கியது. உள்ளுணர்வு கூறியது, இப்போது நம்மிடையே நடந்துகொண்டிருக்கும் மாற்றம் பெரிய சமூக மாற்றம், மருத்துவ மாற்றம். இதிலிருந்து நாம் கூடியவிரைவில் சுமூகமான சூழ்நிலைக்கு திரும்புவோம். உனக்கு மாற்றத்தை ஏற்க கூடிய மனநிலை இப்போது இல்லை.

உள்ளுணர்வே அப்படி ஒன்றும் இல்லை. மாற்றம் என்பது தொழில்நுட்பத்துறையில் தான் இருக்கும். நான் பல தொழில்நுட்ப மாற்றங்களை கண்டுள்ளேன். அதற்கேற்ப மாறியுள்ளேன். அந்த தொழில் நுட்பங்களை உபயோகப் படுத்தி உள்ளேன் , உதாரணமாக: கணினி ,கைபேசி.

உள்ளுணர்வு: மாற்றம் என்பது தொழில்நுட்பம் மட்டுமல்ல, மாற்றங்கள் ஏராளம் அவற்றில் சில பண மாற்றம், மன மாற்றம், சமூக மாற்றம், பருவநிலை மாற்றம், கலாச்சார மாற்றம், இடமாற்றம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

சில தருணங்களில் நம்மை அறியாமலே நாம் மாற்றத்தை ஏற்றுக் கொள்கிறோம். எல்லா காலத்திலும் எல்லாமுமாய் எல்லாம் இருக்கப்போவதில்லை. மாற்றமில்லாத எதையும் இவ்வுலகம் மதிக்கப் போவதில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றங்கள் எல்லா தருணங்களிலும் இனிமையாக இருக்காது. அதற்காக கவலை கொள்ள தேவையில்லை. அது உங்களுடைய வெற்றிக்கான மாற்றமாக கூட இருக்கலாம். அதனால் மாற்றத்தை கவனித்து அதை முற்றிலுமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக: கணினி மாற்றம் கைபேசி இந்த மாற்றங்களில் புதுமையை புகுத்தி வெற்றி அடைந்த தொழிலதிபர்கள் ஏராளம். மாற்றம் ஏற்றம் தரும், மாற்றம் நல்லது அதனால் பயப்படாதே எதிர்கொள்.

பல தருணங்களில் நாம் உணர்ந்தது, மாற்றம் வேண்டுமா? என்று கேட்டால் ஓராயிரம் கைகள் ஓங்குகின்றன. யார் மாற்ற வருகிறீர்கள்? என்றால் ஒரு சிலர் மட்டுமே. மாற்றத்தை வழிநடத்த விரும்புபவர் எவரும் இல்லை.

நமக்கு மாற்றம் வேண்டும் ஆனால் மாற்ற நாம் தயாராக இல்லை. முதலில் நீ நீயாக மாறுவதே நிரந்திர மாற்றம். மாற்றங்களுக்காக காத்திருக்க தேவையில்லை, அதை உண்டாக்கு, வெற்றி அடை.

அந்த இளைஞன் தனக்கு புரியவைத்ததற்கு தனது உள்ளுணர்வுக்கு நன்றி தெரிவித்து, மாற்றங்களை நோக்கி தனது பயணத்தை தொடங்கினான்.

கதை கருத்து:

மாற்றங்கள் உருவாக புதுவருடம் அல்லது பிறந்த நாள் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் நன்னாளே! மாற்றத்தை உடனடியாக செய், காத்திருக்காதே, அதை உண்டாக்கு.

சில நேரங்களில் ஏமாற்றங்கள் கூட வாழ்க்கையின் முக்கிய மாற்றங்கள் ஆகின்றன. மாற்றத்திற்கு மனதை எப்போதும் பக்குவமாய் வைத்திரு. மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. மாற்றத்தை எவராலும் மாற்ற முடியாது. மாற்றத்தை நோக்கி……………….

--

--

Responses (1)