கதை கேளு

Sankar sundaralingam
2 min readAug 1, 2020

--

கதை கேளு

நவீன ஔவையார்

ஒரு மாலைப் பொழுது ,

தனது பாட்டியிடம் பேத்தி பாட்டி ஔவையார் என்றால் யார்?

என கேட்க, அந்தப் பாட்டி நீயும் நானும் தான் ஔவையார்.

ஆம் நாம் நவீன கால ஔவையார்கள் என பாட்டி எடுத்துரைக்க.

எப்படி பாட்டி நாம் நவீன ஔவையார்கள் ?

பாட்டி கீழ்க்கண்டவற்றை விளக்குகிறார்.

ஒளவையார் ஒரு தமிழ்ப்புலவர், நன்கு அறிமுகமானவர் ஒளவையார் எனும் பெயர் கொண்ட புலவர்கள் பலர் இருந்தனர். அவர்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிபி 2ம் நூற்றாண்டு -சங்ககாலப் புலவர் அதியமான் காலத்தில் வாழ்ந்தவர்கள்
கிபி 10ம் நூற்றாண்டு — அங்கவை சங்கவைக்கு மணம் முடித்தவர்.

கிபி 12ம் நூற்றாண்டு -அறநூல் புலவர் நூல் புலவர்

கிபி 16ம் நூற்றாண்டு — கதையில் வரும் புலவர்

கிபி 17–18ம் நூற்றாண்டு சிற்றிலக்கியப் புலவர்

“கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு”

இந்த வரியை நமக்கு அளித்தவர் ஞான பாட்டி ஒளவையார்.

தாய் வழி சமூகம் புறந்தள்ளப்பட்டிருந்த காலத்தில் , ஆணாதிக்க சிந்தனையில் நம் சமூகம் வழிநடத்தப்பட்ட காலத்தில், பெண் புலவர்கள் தன்மானத்துடன் துணிவுடன் அறிவின் மற்றும் அறத்தின் வழியால் பெரும் மாறுதலை செய்தாள்.

அவ்வையை கள்ளுண்ட அவ்வை

நெல்லிக்கனி அவ்வை

சுட்ட பழம், சுடாத பழம் கேட்ட அவ்வை

என பல்வேறு வகையால் அழைப்பார்கள் .

ஆண் சமுதாயத்திற்கு பெண் குல மூதாட்டி ஒருத்தர் ஒழுக்க விதிகளை வரையறுத்தாள் என்பது ஒளவையாரின் கல்வி, அறத்தின் பெருமையை காட்டும் அடையாளம் .

புலவர்கள் பெரும்பாலும் மன்னனையே சார்ந்திருப்பார்கள் இருப்பார்கள். ஆனால் ஔவையார் தன்மானத்தை ஒரு போதும் விட்டுவிடவில்லை.

‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’

என்று நான் எவரையும் சார்த்திலேன்.எத்திசை புகினும் அத்திசையில் சோறுண்டு எமக்கு என்று பாடிவிட்டு புறப்பட்டுப் போவாள் அரண்மனையில் இருந்து.

ஆத்திச்சூடி ஒளவையார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார், நீதி நூல் இயற்றியவர் சொற்றொடர்களை எளிமையில் அமைத்து கொடுத்தவர்.

இதுபோல், இன்று பெண்கள் ஆணாதிக்க உள்ள துறைகளில் நுழைந்து சாதனை பெறுகிறார்கள். அந்தப் பெண்கள் அனைவரும் ஒளவையார்க்கு சமம்.அதனால் தான் நாம் நவீன ஒளவையார் என கூறினேன் .

ஓ, அப்படியா பாட்டி, அப்ப ஆண் சமுதாயத்தினரும் நவீன ஒளவையார் தானே?

பாட்டி: ஆம், தடைகளை தாண்டி தம் துரையில் தனிதிறமையுடன் சாதிக்கின்றனரோ அவர் அனைவரும் ஔவையார்களே!!!!

கதை கருத்து : இன்றும் பலவேறு துறைகளில் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆடவருக்கும் கட்டுப்பாடுகள் , சாதி, மதம் பேதம் பார்த்து மறுக்கப்படுவது உண்டு. எவரேனும் புதுத்துறையில் சென்று, போட்டிகளை வென்று அங்கு சாதிக்கிறாறோ, அவர்கள் அனைவரும் நவீன ஔவையார்கள் தான்.

நன்றி!!!

வணக்கம்!!!

குறிப்பு: தமிழாற்றுப்படை

--

--

No responses yet