Sankar sundaralingam
2 min readNov 14, 2020

கதை கேளு

குறை சொல்பவர்களை ?

பெரிய குடும்பம் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என 6 பேர். ஒருநாள் இளையமகன் தன் பாட்டியிடம் என்னை நம் சொந்தங்கள் நான் நிறைய குறும்பு செய்கிறேன், சரியாக படிப்பதில்லை, எப்பொழுதும் விளையாட்டு விளையாட்டு என விளையாடிக் கொண்டிருக்கிறேன், படுசுட்டி, என நான் எதை செய்தாலும் குறை சொல்கிறார்கள். எனக்கு படிப்பு வரவில்லை ஆனால் விளையாட்டில் என்னால் சாதிக்க முடியும். ஆனால் அவர்கள் குறை சொல்வது என் மனதை வருத்துகிறது. என்னை மிகவும் பாதிக்கிறது. நான் இனிமேல் விளையாடுவதை நிறுத்தி விடலாம் என நினைக்கிறேன் அல்லது அவர்களிடம் சண்டையிட்டு வாதாடலாம் என நினைக்கிறேன் என தனது பாட்டியிடம் பேரன் உரையாடுகிறார் உரையாடுகிறான்.

பாட்டி உடனடியாக பேரா கவலையடைய வேண்டாம். நீ அவர்களிடம் சண்டையிடவும் வேண்டாம். அதற்கு பதிலாக நன்றி சொல், ஏனென்றால் அவர்கள்தான் உனக்கு உளி கொடுக்கின்றனர். அவர்கள் உன்னிடமுள்ள சுறுசுறுப்பு மற்றும் விளையாட்டு ஆற்றலைப் பற்றி பேசவில்லை அதை குறையாக கருதுகிறார்கள் என்றால் அவர்களிடம் அது இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது.

அப்படியா பாட்டி!! குறை செல்பவர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

மற்றவர்களைப் பற்றி குறை சொல்பவர்களை நம்பாதே, ஏனென்றால் பிறரை பற்றி உன்னிடம் குறை கூறுபவர்களிடம் நீ எச்சரிக்கையாக இரு, ஒருநாள் உன்னைப் பற்றி பிறரிடம் குறை கூறுவான். அவங்க குறையை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள், அவங்களுக்கு ஏதாவது கிடைக்கணும்னா கூட இருக்குறவங்கள குறை சொல்லுவாங்க.

உன்னிடத்தில் இருந்து சிந்திக்க தெரியாதவர்கள் உன்னைப் பற்றி குறை கூற தகுதியற்றவர்கள்.

அதனால் உன்னை பற்றி வரும் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காதே, நல்லதோ, கெட்டதோ உன் மனநிம்மதியை அழித்துவிடும். குறை சொல்பவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும் உன் வாழ்க்கையை அவங்க வாழ முடியாது ,நீ தான் வாழ முடியும், நீ தான் வாழனும்.

எதைச் செய்தாலும் குறை சொல்ல ஒரு பெரும் கூட்டம் உள்ளது. இவங்க குறை சொல்லக்கூடாதுனா நாம எதையும் செய்யக் கூடாது. அவர்கள் சொல்லும் குறைகளை நீ கேட்டால் உன்னால் எதையும் செய்ய முடியாது. உண்மையில் உன் மேல் அக்கறை இருந்தால் அவர்கள் உனக்கு சரியான அறிவுரைகளை கூறி இருக்க வேண்டும். தவறு செய்பவர்களை திருத்த முயற்சிக்க வேண்டுமே தவிர குறை சொல்லக்கூடாது. குறை சொல்வதால் எந்தப் பயனும் கிடையாது. நான் உனக்கு சொல்லி கொடுப்பது ஒன்றே ஒன்றுதான் உன்னை குறை கூறினார்கள் என்றால் அதிலிருந்து சாதித்து காட்டு. உன் சாதனைகள் தான் அவர்கள் வாயை மூடும்.

அவர்களால் விளையாடுவதை நிறுத்தாதே, ஒரு நாள் நீ விளையாட்டில் சாதிப்பாய். உன் வெற்றியை இந்த உலகம் போற்றும். அந்த நாளுக்காக நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

கதை கருத்து: நம்மை குறை சொல்பவர்கள் மிகப்பெரிய திறமைசாலிகள் இல்லை, குறை சொல்வதில் மட்டுமே அவர்கள் திறமைசாலிகளாக இருக்கலாம். குறை சொன்னால் கலங்காதீர்கள், அவர்கள்தான் உங்கள் நிறை, ஆதலால் குறையையும், குறை சொல்பவர்களையும் பொருட்படுத்தாதீர்கள்.

பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்.

குறை வேண்டாமே!!!

No responses yet