அறிவோம் அறிவியலை — அணிகலன்கள்

Sankar sundaralingam
3 min readFeb 11, 2023

--

அணிகலன்கள் ஆடம்பரத்திற்கும், அழகுக்கும் மட்டும் அணிவதில்லை. அணிகலன்கள் அணிவது நம் பாரம்பரியத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆண்களும், பெண்களும் அணியும் அணிகலன்களில் நிறைய மருத்துவ அறிவியல் அடங்கியுள்ளது. அணிகலன்கள் பெண்களுக்குமட்டுமல்ல, ஆடவருக்குமானது. நம் உடல் நரம்புகளால் பின்னப்பட்டது, அதனால் தான் உச்சி முதல் பாதங்கள் வரை அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. நரம்புகள் ஒன்று சேரும் இடங்களில் அணிகலன்கள் அணிவதால் உடலில் நல்ல வேதியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களால் செய்யப்படும் அணிகலன்கள் அணிவதால் உடல் வெப்பம் குறைக்கப்படுகிறது. அணிகலன்கள் ஆடம்பரம் தங்கம், வெள்ளி எளிமை இல்லை என நினைப்பவர்கள், மாற்று அணிகலன்களை பற்றி கூட யோசிக்கலாம்.

உதாரணம் :

- தோடுக்கு பதிலாக : கருவேப்பிலை குச்சி

- உட்டியானத்திகு பதிலாக : அரைஞாண் கயிறு

- தங்க வளையலுக்கு பதிலாக : கண்ணாடி வளையல்

ஆண்கள், பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் காரணங்கள்:

1.மோதிரம் (ஆண்கள் , பெண்கள் இருவருக்கும் பொருந்தும்).

மோதிர விரலில் ( சுண்டு விரலுக்கு பக்கத்தில் இருப்பது) பாயும் நரம்பு நம் மூளையிலிருந்து இதயத்திற்கு இணைக்கப்படுகிறது.

மோதிரவிரலில் மோதிரம் அணிவதால் இதய நோய், வயிற்று பிரச்சனை நோய்கள் வராமல் தடுக்க உதவும். மேலும் இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. நம்மைச் சந்தோஷப்படுத்தும் ஹார்மோன்களைத் தூண்டுவதற்கு கட்டை விரல் மோதிரங்கள் உதவுகின்றன. பெரும்பாலானவர்கள் நடு விரல்களில் மோதிரம் அணிவதில்லை. அவ்வாறு அணிந்தால், முடிவுகள் எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

2.தோடு (பெரும்பாலும் பெண்களுக்கான அணிகலன் தோடு):

சிறு வயதில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு காது குத்தி, தோடு போடும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்துள்ளது. பெண்களுக்கு காது நரம்புகளுடன் கண்கள் மற்றும் உயிர் உற்பத்தி செய்யும் உறுப்புக்கள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. காது மடல்களில் இருந்து மூளைக்கு நரம்பு செல்கிறது. கண்களுடன் காது நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளதால், நல்ல கண் பார்வைக்கு தோடுகள் உதவுகின்றன, மூளையின் செயல்திறனும் அதிகரிகிறது.

3.மூக்குத்தி (ஆண்கள் , பெண்கள் இருவருக்கும் பொருந்தும்):

மூக்குத்தி பெண்கள் பெரும்பாலும் அணிவது அதற்க்கு காரணம் வயதுக்கு வந்ததும், மாதவிடாயினால் தோன்றும் வலிகளைக் குறைப்பதற்காகவே அவர்களுக்கு மூக்குத்தி அணியப்படுகிறது. இடது மூக்கில் மூக்குத்தி அணிந்து கொள்வதால், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள நரம்பு உயிர் உற்பத்தில் செய்யும் உறுப்புக்களைத் தூண்டுகிறது. இதனால் குழந்தை பிறப்பும் எளிதாவதாகக் கூறப்படுகிறது. அந்த காலங்களில் ஆண்களும் மூக்குத்தி அணிந்தார்கள். மூக்குத்தி உடலில் உள்ள கேட்ட வாயுவை வெளியேற்றுகிறது , ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும், பெருங்குடல் மற்றும் சிறு குடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டடு. அந்த புள்ளிகள் துாண்டப்படும்போது, அது சம்பந்தமான நோய்கள் குணமாகும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கும் உதவுகிறது.

4.கழுத்தணிகள்: (நகைகள் மட்டுமல்ல கயிறும் அடங்கும்):

கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால், அவர்களுக்கு அதிக நேர்மறை சக்தி கிடைக்கிறது, கழுத்தில் உள்ள நரம்புகள் வலிமை பெறுகிறது. கழுத்தில் அணிகலன் (செயின், கயிறு) அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும். இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் கழுத்தணிகள் உதவுகின்றன. உடல் உஷ்ணத்தை குறைத்து நம்மை பாதுகாக்கிறது.

5.வளையல் (பெண்கள்)/காப்பு ( ஆண்கள்):

வளையல் / காப்பு நமது பாரம்பரிய அணிகலன்கள். வளையல், காப்பு சீரான இரத்த ஓட்டத்திற்கு கை கொடுக்கின்றன. அவை வட்ட வடிவில் இருப்பதால் வளையல்கள்/காப்பு மூலம் தூண்டப்படும் மின் காந்த ஆற்றல் யாவும் வீணாகாமல் உடலுக்குள்ளேயே செலுத்தப்படுகிறது. இதனால் சக்தி அதிகரித்து, உள்ளங்கைகளும் வலுவாகின்றன. வளையல் / காப்பு அணிவதால் ஹார்மோன் குறைபாடுகள் தடுக்கப்படுகின்றன.

6.வங்கி / கயிறு :

கையின் மேற்பகுதியில் அணியும்போது, உடலில் ரத்த ஓட்டம் சீராகி, பதற்றம், படபடப்பு, பயம் குறைகிறது. வங்கி அணியமுடியாதவர்கள் அந்த இடத்தில் கயிறுகளை கட்டுவார்கள். மார்பக புற்றுநோய் வருவது தவிர்க்கப்படுவதாக, ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. காரணம், லம்பாடி பெண்களுக்கு, மார்பக புற்றுநோய் வருவதில்லைமணிக்கட்டிலிருந்து முழங்கை மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால், மார்பு பகுதியின் ரத்த ஓட்டம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

7.நெற்றிச் சுட்டி:

நெற்றிச் சுட்டி தலையின் வகிடு பகுதியில் அணியும் ஆபரணம், உடம்பில் உள்ள வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது.இதை அணிவதால் நெற்றியிலிருந்து காது வரை செல்லப்படும் நரம்புகள் தூண்டப்பட்டு புத்துணர்ச்சி பெறுகின்றன. நெற்றிச்சுட்டி அணிவதால் தலைவலி, நீர் சேர்க்கை பிரச்னைகளை கட்டுப்படுத்துகிறது . அதனால் தான் விஷேஷ நாட்களில் அணிகின்றனர்.

8.இடுப்பணி /அரைஞான் கயிறு :

அரைஞான் கயிறை பற்றி நமது பதிவில் ஏற்க்கனவே படித்திருப்பீர்கள். முக்கியமாக வயிற்றில் தொப்பை விழாமலும், குடலிறக்கம் வராமலும் தடுக்கும். இடுப்பணி பெண்கள் தங்கள் இடுப்பைச் சுற்றி ஒட்டியாணம் அணிந்து கொள்வது வழக்கம். இந்த அணிகலன், அவர்களுடைய மாதவிடாய் பிரச்சனைகளைத் தீர்க்குமாம்! வெள்ளியினாலான இடுப்பணிகலன், வயிற்றுக் கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது. இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக துாண்டப்பட்டு, ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலுவடையும்.

9.கொலுசு / தண்டை:

கொலுசு பூமியுடன் பெரும்பாலும் தொடர்பிலிருக்கும், அது தரும் ஒலியின் மூலம் அவர்களிடம் நேர்மறை எண்ணங்கள் மற்றும் சக்திகள் அதிகரிக்கும்.கால்களில் அணியும் அணிகலன்கள் வெள்ளியால் செய்யப்பட்டவை. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகமாகும். இதனால் ஆயுள் விருத்தியாகும் என்கிறது ஆயுர்வேதம்.எலும்பு இணைப்புகளில் தோன்றும் வலிகளை நீக்குவதிலும் கொலுசு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. கால்களில் ஆபரணங்கள் அணிவது ஆன்மிக ரீதியிலும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர் பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை துாண்டி விடும் அற்புதமான அணிகலன், கொலுசு. மொத்தமான கொலுசு அணிவதன் மூலம், கர்ப்பப்பை இறக்க பிரச்னையை தீர்க்கும்.

10.மெட்டி:

மெட்டி இரு கால்களிலும் உள்ள கட்டை விரலுக்கு அருகிலிருக்கும் விரலில் மெட்டி அணியப்படுவது வழக்கம். கருப்பையை நரம்பிற்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒரு வித தொடர்புண்டு. இந்த விரல் வழியாகப் பாய்வதால், அவர்களுடைய மாதவிடாய் கால இரத்த இழப்பை சீராக்குவதோடு, பிரசவ காலத்திலும் உதவுகிறது. பொதுவாகவே, இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்துவதில் மெட்டி ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

11.பொட்டு:

இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் நெற்றி பொட்டு என அழைக்கப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சிகளின்படி நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் அதுவே. நெற்றியில் இடும் திலகம், பொட்டு , அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. மேலும் நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. பொட்டு வைத்திருப்பவர்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.

அணிகலன்கள் அணிவது தற்பொழுது குறைந்து வருகிறது. அதன் உண்மை தன்மையை அறிந்து அனைவரிடமும் எடுத்து செல்வது நமது கடமை. அணிகலன்களை கட்டாயம் தங்கத்தில் அணியவேண்டுமென்பதில்லை, செம்பு, வெள்ளி, கயிறுகளில் கூட அணிந்து கொள்ளலாம். அணிகலன்களின் முக்கிய செயல் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி, நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.அணிகலன்கள் அணிவதால் நோய்கள் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. இவைகள் நம் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க உருவாக்கப்பட்டவை. இவை அழகிற்காக மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்காகவும் அணியப்படுகின்றன என்பதை இப்போது அறிவீர்கள் என நம்புகிறேன்.

--

--

No responses yet