அறிவோம் அறிவியலை — அரைஞாண் கயிறு

Sankar sundaralingam
2 min readNov 26, 2022

--

அறிந்து கொள்வோமா இடுப்பில் கட்டும் அரைஞாண் கயிற்றின் அறிவியல் என்ன என்பதனை ?

அரைஞாண் கயிறு பற்றிய அறிந்திராத பல தகவல்கள் உள்ளன.

முதலில் அரைஞாண் பெயருக்கான காரணத்தை அறிவோம்.

அரை என்றால் கூபக அறை என்று பொருள். கூபக என்றால் இடுப்பு எலும்பு பகுதி. ஞாண் என்றால் வளைத்து கட்டுவது. கூபக அறையை வளைத்துக் கட்டுவதால் இக்கயிற்றுக்கு ‘அரைஞாண் கயிறு’ என்றும் பெயர் வந்தது. காலப்போக்கில் அருணாக் கயிறு என்று அழைக்கப்பட்டது . வெள்ளி, தங்கத்தினால் செய்து கட்ட தொடங்கியதிலிருந்து அருணாக்கொடி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

நம் வழக்கத்தில் அரைஞாண் கயிறு அணியாதவன் முழுமனிதள்ளல, அவனை முண்டம் என்று கூறுவர். அரைஞாண் கயிறு அணியாமல் இருப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவதில்லை. நமக்கு நம் முன்னோர்கள் சொன்னதெல்லாம், அரைஞாண் கயிறு என்பது மற்றவர்களின் கண் திருஷ்டி, பொறாமை போன்ற எதிர்மறை கதிர்வீச்சுகளிலிருந்து நம்மை காக்க. சிவப்பு,கருப்பு கயிறு நிறத்தில் உள்ளதால் எதிர்மறை செயல்களை உறிந்து அழித்து, நம்மை பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. பொதுவாக தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கை. அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் இந்தியாவில் மட்டுமல்லாது பாகிஸ்தானிலும் உள்ளது. குழந்தை பிறந்த 6 அல்லது 7 வது நாளிலிருந்தே அரைஞாண கயிறு கட்டுவது வழக்கம். பெண் குழந்தைகள் பூப்பூட்டும் வரை அணிவர். ஆண்கள் வாழ்நாள் முழுவதும் அணிவர்.

ஆதிகால மனிதனுக்கு அரைஞாண் கயிறு ஒரு ஆயுதமாக பயன் பெற்றது. நாம் நினைப்பது ஆதிமனிதன் தனது அடிப்படை ஆடைகளான கோமணம் கட்டுவதற்கு அரைஞாண் கயிரை பயன் படுத்தினான் என்று. அதுமட்டுமல்ல வேட்டை கருவிகளை கட்டி வைப்பதற்க்கு , அவசரகால கருவியாக மற்றும் மருத்துவ காரணங்களுக்காக பயன்படுத்தினான்.

அரைஞாண் கயிறு உண்மையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர் என்றால், இது ஒரு நோய் தடுப்பு முறை.

அரைஞாண் கயிறு காட்டுவதால் மேல்வயிற்றுப் பகுதியிலுள்ள குடல் கீழே இறங்காமல் இருக்கும். குடலிறக்க நோயைத் தடுக்கிறது, இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது.

பெண்களை விட ஆண்களுக்கு குடல் இறக்க நோய் அதிகம் . ஆராய்ச்சியால் 90% சதவீத இறக்க நோய் ஆண்களுக்கு வருகிறதாக குறிப்புகள். உடல் பெருத்தலின் அதிகபட்ச தீமை ‘குடல் இறக்க நோய்’ ஆங்கிலத்தில் இதனை ஹெரணியா என்பர். இந்த நோயை தடுக்கதான் நம் முன்னோர்கள் அரைஞாண் கயிறு கட்ட சொன்னார்கள். ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது என்பது ஓர் மருத்துவ முறை ஆகும்.

ஜீரண உறுப்புகள் தொடர்பான பிரச்னைகளை வராமல் இருக்க அரைஞாண் கயிறு பயன்படுகிறது. விரைவாதம், அண்டாவாதம் வராமல் தடுக்கிறது.

அரைஞாண் கயிற்றோடு சிலர் வெள்ளி தாயத்து கட்டுகிறீர்கள். ஏனென்றால் தாயத்துடன் இணைக்கப்படுவது தாயின் ஸ்டெம் செல்களை உலர்த்திய பின் தூள் வடிவில் சேமித்து தாயத்தில் அடைத்து கட்டுவர் அவை எந்த நோயையும் குணப்படுத்தப் பயன்படுத்துகின்றன. இதற்கு குறைந்த செலவாகும் ஆனால் மருத்துவமனைகளில் ஸ்டெம் சேமிக்க சுமார் 50 ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமாக வரும்.

அரைஞாண் கயிறு அவசர கால உதவும் மருத்துவ ஆயுதமாக பயன்படுகிறது. வயல் வெளிகளில் பணிபுரியும்போது விச பூச்சிகள் , பாம்புகள் கடித்தால் விஷம் உடம்பில் மேல் ஏறாமல் இருக்க முதலுதவி கருவியாக அரைஞாண் கயிறை கட்டுவார்கள்.

அப்போதெல்லாம் சிறிய குழந்தைககள் ஆறு, குட்டை, கிணறுகளில் குளிப்பார்கள். அவர்களுக்கு சிறிய முடிதான் இருக்கும். எனவே, அவர்கள் தண்ணீரில் தவறி விழுந்தால், வெளியே இழுப்பது கடினம், வழுக்கும். எனவே, உடலைச் சுற்றியுள்ள அரைஞாண் கயிரை பிடித்து வெளியே இழுக்கவும் உதவியது.

அரைஞாண் கயிறு நீச்சல் சொல்லிக் கொடுக்கவும் பயன்பட்டது. அரைஞாண் கயிற்றில் சேலைஅல்லது கயிறு கட்டி நீச்சல் பழகி கொடுத்தனர் .

பொதுவா நமக்கு புரியற மாதிரி சொன்ன, நம் உடல் பருமன் அதிகரிகிறதை அரைஞாண் கயிறு மூலமா சுலபமாக தெரிஞ்சுக்கலாம். கயிறு இருகுனால் உடனே வாய் கட்டுப்பாடு , உடற்பயிற்சி. அந்தகாலங்களில் குழந்தையின் வளர்ச்சியை அரைஞாண் கயிறு கண்டே கனிப்பர் .

இன்றைக்கு இதை அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறு கட்டுவது குறைந்து விட்டது. அரைஞாண் கயிறு கட்டினால் கிராமத்தான் என்பார்கள், முகம் சுழிப்பர். அரைஞாண் கயிறு சும்மா சம்பிரதாயம் என்பர், மூட நம்பிகை என்பர். அதெல்லாம் கேட்காதீங்க இனி, அரைஞாண் கயிறு அவமானமல்ல , ஆரோக்கியம், மருத்துவம். நம் வாழ்வியல் தொடர்புடையது.

--

--

No responses yet