அறிவோம் அறிவியலை — எண்ணெய் குளியல்
எண்ணெய் தேய்த்து ஒருமுறையாவது குளித்ததுண்டா? இல்லை / ஆம் .
ஆம் என்றால், வருடத்திற்க்கு ஒரு முறை? தீபாவளி அன்றா ?
எண்ணெய் தேய்த்து குளிக்காதவர்களும் அல்லது என்றோ ஒரு நாள் தான் குளிப்பேன் என்பவர்களும் , மாதம் தவறாமல் என்னை தேய்த்து குளிப்பேன் பெற்றோர்களின் கட்டாயத்தால் என்பவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது.
நமது கலாசாரத்தின் வாழ்க்கை முறையில் எண்ணெய் குளியல் முக்கியமானது .தினமும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை ‘தின ஒழுக்கம்’ என்கிறது சித்த மருத்துவம். தினமும் முடியாதென்றால் வாரத்திற்கு ஒருமுறை.
`சதுர்நாட்கொருக்கால் நெய் முழுக்கைத் தவிரோம்” — நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல் அவசியம் என்கிறது சித்த மருத்துவம்.அதாவது, கோடைக்காலம் என்றால் வாரம் இருமுறை, மழைக்காலம் என்றால் வாரம் ஒருமுறை எண்ணெய்க் தேய்த்து குளித்தல் வேண்டும்.
எண்ணெய் குளியல் என்பது தலையில் நான்கு சொட்டு எண்ணெய் விட்டு குளிப்பதல்ல. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து குளிப்பதுதான் முழுமையான எண்ணெய் குளியல்.
எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் எது?
நல்லெண்ணெய் எண்ணெய்க் குளியலுக்கு மிகவும் உகந்தது. அதேபோல தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றையும் எண்ணெய்க் குளியலுக்குப் பயன்படுத்தலாம்.
எண்ணெய்க் தேய்த்து குளிப்பதால்
-எலும்புகள் வலுபெறும். மூட்டுக்கு இணைப்புகளில் உண்டாகும் தேய்மானத்தைக் குறைக்கும்.
-சரும மற்றும் நரம்பு சம்மந்தமான நோய்கள் அன்றாது .
-உடல்உஷ்ணம் நீங்கும்
-மேனி அழகுபெறும்.
-கண் எரிச்சல் நீங்கும். பார்வை பலப்படும்.
-வாத, பித்த, கப தோஷங்கள் சீராகும்.
- உடல் உறுப்பிகளின் இயக்கம் சீராகும்.
- ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
- ஹார்மோன் சுரப்பதற்கு எண்ணெய் குளியல் உதவுகிறது.
-உடல் சோர்வு, உடல் வலி நீங்கும்
-ஆயுள் விருத்திற்கு உதவுகிறது .
- முதுமையைத் தாமதப்படுத்தும்.
- சீரான உறக்கம்
-எண்ணெய்யை உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தேய்க்கும்போது உடலின் கழிவுகளை நீக்குகிறது.
-மன அழுத்தத்தைக் குறைத்து உடல் உள் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்பட உதவும்.
- முடி உதிர்தலைக் குறைக்கும், கூந்தல் செழுமை.
எண்ணெய் தேய்த்து குளிக்க சில வழிமுறைகள் இங்கே .
1.வெந்நீரில் குளிக்க வேண்டும்
எண்ணெய் தேய்த்துக்கொண்டு பச்சைத் தண்ணீரில் குளிக்க கூடாது. பச்சை தண்ணீரில் குளித்தால் சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
``எண்ணெய் பெறின், வெந்நீரில் குளிப்போம்” என்பதைத்தான் சித்த மருத்துவமும் வலியுறுத்துகிறது.
2.எண்ணெய் தேய்த்த சில மணி நேரங்களில் குளித்துவிட வேண்டும் :
எண்ணெய் தேய்த்த அரை மணி நேரத்தில் காலை இளம் வெயிலில் நின்று, பின் மிதமான சுடு தண்ணீரில் குளித்துவிட வேண்டும். முதல்நாள் இரவே தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டு தூங்கிவிட்டு மறுநாள் குளிக்க கூடாது . இப்படிச் செய்தால் காய்ச்சல் வருவதோடு, குளிர்ச்சி அதிகமாவதால் சில நேரங்களில் வலிப்பும் வந்துவிடும் என்பதால் இச்செயலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
3. எண்ணெய் குளியலுக்கு சீவக்காயே சிறந்தது
4.எண்ணை தேய்த்து குளித்த பிறகு மதிய உணவில் மிளகு ரசம் சேர்த்து சாப்பிட்டு ஓய்வு எடுப்பது நல்ல சுகம். எண்ணெய் தேய்த்துக் குளித்த தினம் அன்று பகல் வேளையில் தூங்கக் கூடாது. குளுர்ச்சியாக எதையும் குடிக்க கூடாது .
‘வாரம் ஒரு நாள் எண்ணெய்க் குளியல்’ என்ற ஆரோக்கிய வழக்கம் , இன்று வெறும் தீபாவளிச் சடங்காக மாறிவிட்டதுதான், நவீன மருத்துவ தாக்கங்கள் நம்மிடம். எண்ணெய் குளியல் வெறும் சாங்கியம் இல்லை, உடல் சூடுதான் அனைத்து நோய்களின் தொடக்கம் , எண்ணெய் குளியல் நம் உடலில் நோய்கள் அணுகாமல் பாதுகாக்கிறது .
எண்ணெய் தேய்த்து குளித்தால் துடைச்சு வெச்ச குத்துவிளக்கு மாதிரி இருப்பிங்க. மறந்து போன எண்ணெய்க் குளியலை மீட்டெடுப்போம்.