அறிவோம் அறிவியலை — கடுக்காய்
நம் முந்தைய தொடரில் திரிபலையைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம். திரிபலை முக்கனி கூட்டில்
கடுக்காய்க்கும் முக்கிய இடம் உண்டு. கடுக்காய் மிகச்சிறந்த மருந்து பொருள், சித்த மருத்துவத்தில் இதற்கு ஒரு தனி சிறப்பு உண்டு.
ஹரிதாகி என்று இதனை அழைப்பர். கடுக்காய் இந்தியாவின் ப்ளம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த மூலிகை, ஏன் மூலிகைகளின் ராஜா என்று அழைக்கலாம்.
காலையில் இஞ்சி, மாலையில் சுக்கு, இரவில் கடுக்காய் என ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் “கோலை ஊன்றி நடந்த கிழவனும் கோலை வீசி குலாவி நடப்பான்” என்ற சித்தர்களின் பேச்சு.
“கடுக்காய் கொண்டால் மிடுக்காய் வாழலாம்.”
“ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய். இளம் பிள்ளை தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்”
என்ற பழமொழிகள் பல.
உடல், மனம், ஆன்மாவை தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் கூறுகிறார். மேலும் இதை அமுதம் என்று குறிப்பிடுகிறார்.
கடுக்காயில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், இரும்பு, கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, சி, டி, ஈ, கே, ஃபோலேட், நியாசின், பாந்தோதெனிக் அமிலம், ரிபோஃப்ளேவின், தயாமின், பாஸ்பரஸ், தாமிரம், மாங்கனீஸ், செலினியம், அயோடின், குரோமியம், மாலிப்டினம், நிக்கல், கோபால்ட், வெனடியம், போரான், புளோரின், குளோரின், சோடியம், குளோரைடு மற்றும் பாஸ்பரஸ் அடங்கியுள்ளன .
கடுக்காயை அப்படியே சாப்பிடக்கூடாது. கடுக்காயை பயன்படுத்தும் முன் சுத்தி செய்வது மிகவும் அவசியம், கடுக்காயை அப்படியே பயன்படுத்தினால் அது நஞ்சாகும். உடைத்து மேலே உள்ள சதைப்பகுதியை எடுத்து கொள்ள வேண்டும், அதன் விதியை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சித்த மருத்துவ நூல்கள் கடுக்காய் பற்றி குறிப்பிட்டுள்ளன.
கடுக்காய் வகைகள்:
பிஞ்சு கடுக்காய்: மலத்தை இளக்கும். மலச்சிக்கலை நீக்கும். செங்கடுக்காய்: காச நோயை போக்கி, மெலிந்த உடலை தேற்றி அழகாக்கும்.
வரி கடுக்காய்: நோய்களை விரட்டி அடிக்கும். விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும்.
கட்டிடங்களுக்கு கடுக்காய் சேர்ந்து கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த அளவுக்கு கடுக்காய் கட்டிடங்களை உறுதி படுத்த உதவியது என்றால் நினைத்து பாருங்கள் அதன் பயன் மனிதனுக்கு.
கடுக்காயின் மருத்துவ பலன்கள்:
- கடுக்காய் 5 கிராம் செரிமான கோளாறுகளை விளக்கும். -மலச்சிக்கலை நீங்கும்.
- கபம் சமநிலைப்படும் நச்சுக்கள் வெளியேறும்.
- சர்க்கரை நோய், இதய நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.
-இஞ்சி சுக்கு கடுக்காய் கல்பங்கள் ஆண் பெண் உறவை பலப்படுத்தி குழந்தை பேரு தரக்கூடியவை. இதை 48 நாட்கள் உண்ண வேண்டும். காலையில் இஞ்சி கல்பம், மதியத்தில் சுக்கு கல்பம், இரவில் கடுக்காய் கல்பம். இந்த கல்பங்களை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம்.
- கடுக்காயுடன் சிறிதளவு பெருஞ்சீரகம் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து இரண்டு வேளை குடித்தால் உடல் எடை குறையும்.
- வாயிலும், தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் ஆற்றல் வாய்ந்தது கடுக்காய்.
-கடுக்காய் பசியை தூண்டும், இரத்தத்தை சுற்றி சுத்தப்படுத்தும், காது நோய்களை குணப்படுத்தும்.
- இதனை வலிமையூட்டி, நீர் பெருக்கி என்பார்கள். அதனால் தான் நாவரட்சி, கண் நோய், மார்பு நோய், இரும்பல், காமாலை, கைகால் அமைச்சல், விக்கல் போன்றவற்றை குணப்படுத்த ஆற்றல் இதற்கு இருக்கிறது.
- கடுக்காய்ப்பொடியை தினசரி ஏடுத்துகொள்வதன் மூலம் அது நினைவாற்றலை அதிகரிக்க செய்யும்.
- கடுக்காய் பொடியை வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் வீக்கம் குறையும் இது காயங்கள் மற்றும் புண்களை விரைவாக குணப்படுத்துகிறது.
- இரத்த சோகை பிரச்சனை இருக்கும் போது கடுக்காய் பொடி நெய் மற்றும் தேனுடன் கலந்து சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை தீவிரம் குறைகிறது.
- கடுக்காய் பொடியை கொண்டு பல் துவைக்கினால் ஈறு வளம் பெறும். ஈரிலிருந்து வரும் ரத்தம் நிற்கும், பல்லும் உறுதியாகும்.
- கடுக்காய் பொடியை தண்ணீருடன் மாலை தொடர்ந்து பருகினால் மஞ்சள் காமாலை நோய் குணமாக வாய்ப்பு அதிகம்.
- 10 கிராம் கடுக்காய் பொடியை எடுத்து, அதே அளவு சுக்கு, திப்பிலி இரண்டு தூள்களையும் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்
-கருவுறுதல் கோளாறும் சரியாகும்.
- கடுக்காய் பொடியை தினசரி உட்கொள்வது இன்சுலீன் வெளியிடுவதை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது
- கடுக்காய்ப் பொடியை சரி அளவு நெய்யில் வறுத்து, இதை உப்புடன் கலந்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும்.
- கடுக்காயை நீரில் கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். பிறகு நீரை குளிர வைத்து அதை கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
- கடுக்காய் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாக பல ஆய்வுகள் உள்ளன. இது மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
- வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கடுக்காய் பயனுள்ளதாக இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
- தோல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் கடுக்காய் பயன்படுத்த முயற்சிக்கவும். முகப்பரு, அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி, தோல் அழற்சி போன்றவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த மூலிகை மருந்தாக இது கருதப்படுகிறது.
கடுக்காய்க்கு பக்கவிளைவுகள் இல்லை. இருப்பினும், சிலருக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும். அதனால் கடுக்காய் எடுப்பதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது. கர்ப்ப காலத்தில் இதை உட்கொள்வதை தவிர்க்கவும்.
கடுக்காய் அதன் ஆரோக்கிய நன்மைகளால் மிகவும் பிரபலமானது நம்மிடையே , பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் பரவலாக உட்கொள்ளப்படும் ஒரு பிரபலமான மூலிகையாகும். இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் நன்மை பயக்கும். கடுக்காய் அனைத்து வீடுகளிலும் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிசமாகும்.