அறிவோம் அறிவியலை — கருஞ்சீரகம்

Sankar sundaralingam
3 min readJan 28, 2023

--

கருஞ்சீரகம் பல ஆயிரம் ஆண்டுகளாக நமது வழக்கத்திலுள்ள ஒரு உணவு பொருள் மற்றும் மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. கருஞ்சீரகம் இயற்கை மருத்துவ குணம் கொண்டது.ஆயுர்வேத, யுனானி மற்றும் சித்த மருத்துவத்தில் ஒரு சிறந்த மருந்து பொருளாக உள்ளது. இது தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட தாவரம் என கூறப்படுகிறது. கிருஷ்ண ஜீரகா, குஞ்சிகா, உபகுஞ்சிகா, உபகுஞ்சீரகா என்றும், இந்தியில் காலாஜீரா, கலோன்ஜி என்றும் அழைப்பர். “இறப்பைத்தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது கருஞ்சீரகம்” என்று இசுலாம் மதத்தின் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார். அரபு நாடுகளில் இதை உணவில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். பைபிளிலும் கருஞ்சீரகத்தைப் பற்றியக் குறிப்பு “நோய் தீர்க்கும் கருஞ்சீரகம்” என்று இருக்கிறது. கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் அருமருந்து.

கருஞ்சீரகத்தில் நார்ச்சத்துக்கள்,வைட்டமின்கள் குறிப்பாக ஏ,பி, பி 12,சி, அமினோ அமிலங்கள், சோடியம்,இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, புரதம், ஆல்கலாய்டுகள் என ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கருஞ்சீரகத்தில் அடங்கியுள்ளன. கருஞ்சீரகம் ஆற்றல் மையமாக விளங்கி வருகிறது. இதுமட்டுமல்லாமல் கருஞ்சீரக எண்ணெயில், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், 17 சதவீத புரதமும், 26 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் மற்றும் 57 சதவீதம் தாவர எண்ணெய்களும் உள்ளன. மருத்துவக் குணங்கள் அதிகம் அடங்கிய கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள தைமோகுயினன் (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை. தைமோகுயினன் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. ஆரோக்கியத்திர்கான தூண் கருஞ்சீரகம்.

கருஞ்சீரகத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என சொல்லாம். பல வகையான புற்றுநோய்க்கு கூட கருஞ்சீரகத்தில் இருந்து தான் மருந்து தயாரிக்கிறார்கள்.

கருஞ்சீரகத்தின் மருத்துவ பலன்கள் :

- கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் நீரிழிவை நோயை தடுக்கிறது.பிளாக் டீ உடன் கருஞ்சீரகத்தை சேர்த்து உண்பதால் நல்ல பலனை பெறலாம்.

- ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

-உடல் எடையை குறைக்க உதவுகிறது கருஞ்சீரகம். வெண்ணீரில் கருஞ்சீரகத்தை கலந்து தினமும் குடித்து வர, உடல் எடை குறைப்பில் நல்ல மாற்றத்தை காணலாம்.

-உடலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கிறது

-சருமம் மற்றும் முடிகளின் பராமரிப்பிற்கு, கருஞ்சீரகம் முக்கிய பங்காற்றுகிறது. நல்ல பளபளப்பான சருமத்திற்கு, கருஞ்சீரக எண்ணெயை, எலுமிச்சை சாற்றில் கலந்து முகத்தில் தடவி வரலாம்.கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள், முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு மட்டுமல்லாது, முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது.

-சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கருஞ்சீரகம் பெரிதும் துணைபுரிகிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, கிரியாட்டினின் சீரம் அளவை அதிகப்படுத்துகிறது. ரத்தத்தில், யூரியாவின் அளவை கட்டுப்படுத்துகிறது.

-புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்”கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள், உடலில் உள்ள புற்றுநோயை உருவாக்கும் ப்ரீ ரேடிகல்ஸ்களை எதிர்த்து போராடுகிறது. மார்பக புற்றுநோய், செர்விகல் கேன்சர், நுரையீரல் புற்றுநோய், பான்கிரியாட்டிக் புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது.

-இன்றைய இளைய தலைமுறையினர், ஒற்றை தலைவலி உள்ளிட்டவைகளால் அவதிப்படும் நிலையில், அவர்களுக்கு நவீன மருத்துவ முறைகளை காட்டிலும், இயற்கை மருத்துவம், அவர்களுக்கு சிறந்த பயனை அளித்து வருகிறது. தலைவலியால் அவதிப்படுபவர்கள்,கருஞ்சீரக எண்ணெயை, முன்தலையில் சிறிது தடவிவர, கடுமையான தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

- கருஞ்சீரகத்தை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதால் செரிமானம் சிறப்பான முறையில் நடைபெறும்.

-கருஞ்சீரகத்தை பயன்படுத்துவதால் மலச்சிக்கலுக்கு குணம் அளிக்கிறது.மூல நோய்க்கு தீர்வு அளிக்கிறது

- ஒரு பிடியளவு கருஞ்சீரகம் மற்றும் ஒரு பிடியளவு கொத்தமல்லி தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவற்றை வெந்நீரிலோ, பாலிலோ சேர்த்துத் தொடர்ந்து அருந்தி வர, அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் மற்றும் வாயுத் தொல்லை நீங்கும்.

- கருஞ்சீரகப் பொடிய 1 கிராம் எடுத்து மோர் கூட கலந்து தொடர்ந்து குடிச்சு வந்தால் விக்கல் பிரச்சனை குணமாகும்.

-வயிற்றுப்புண்ணை குணப்படுத்துகிறது.

- கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களில் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை குறிப்பிடத்தக்கது. வெந்நீரில் தேன் மற்றும் ஒரு கையளவு கருஞ்சீரகப் பொடியைக் கலந்து கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பருகி வரச் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் முழுவதுமாக கரையும்.

-கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது பனை வெல்லம் சேர்த்து தினமும் எடுத்துக்கொள்ளும் போது கர்ப்பப்பையில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்கி சுத்தமடையும்.

- கருஞ்சீரகப் பொடிய 1 கிராம் எடுத்து தேன் கூட சேத்தோ இல்லேன்னா நீர் சேத்தோ கலந்து குடுத்தா மூச்சு முட்டல் பிரச்சன உள்ளவங்களுக்கு நல்லபலன் கிடைக்கும்.

- கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து பாலில் கலந்து கொள்ளவும்.இதை முகத்தில் தொடர்ந்து பூசி வர முகத்தில் ஏற்பட்டுள்ள முகப்பருக்கள்,கொப்பளங்கள்,புண்கள் மறையும்.

- கருஞ்சீரகத்தைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. நுரையீரலில் சேர்ந்துள்ள கழிவுகள் நீங்குகின்றன.

- கருஞ்சீரக பொடிய தேன் விட்டு அரைச்சு பூச, குழந்தை பேறுக்கு பிறகு பெண்களுக்கு வர்ற வலி குணமாகும், மாதவிடாய்க் கோளாறு நீக்கும்.

- கருஞ்சீரக எண்ணெய்யை நெற்றி, தலை, மூக்கு, நெஞ்சு போன்ற பகுதிகளில் பூசிக் கொள்வதன் மூலம் தலைவலி மற்றும் மூக்கடைப்பு போன்ற தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

- கருஞ்சீரகத்தை ஊறவைத்த நீரில் எலுமிச்சை கலந்து, அதை உங்கள் தலைமுடியில் தடவினால், அது பொடுகு மற்றும் அரிப்புகளை நீக்க உதவும்.

- கருஞ்சீரகத்தை நீராகாரத்தோட குடிச்சு வந்தா குடல்ல உள்ள .புழுக்கள்லாம் வெளியேறிடும்”

- கருஞ்சீரகம் பாக்டீரியாக்களைக் கடுமையாகத் தாக்கி உடலை நோயின் பிடியிலிருந்து மீட்கிறது.

கருஞ்சீரகத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் அவை நோய் எதிர்பாற்றல் முறைமையை வலுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. பூஞ்சை காளான் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள கருஞ்சீரகம், பல நோய்களிலிருந்து தடுக்கிறது. 100 வருடங்கள் நலமாக வாழ “கருஞ்சீரகம்” மட்டும் போதும்.மரணம் தவிர்த்து அனைத்து நோய்களுக்கும் மருந்தான கருஞ்சீரகம் நமது உடல் நலன் காப்பான்.

--

--

No responses yet