அறிவோம் அறிவியலை — கைகூப்பி வணங்குதல்
கொரோனா தொற்றுக்கு பிறகு கைகூப்பி நமஸ்காரம் செய்யும் வழக்கம் இன்று மேற்கத்திய நாடுகளிலும் பரவியுள்ளது. சில வருடங்குளுக்கு முன் இங்குள்ளவர்கள் கூட ஹாய் , ஹலோ சொல்லி தான் செய்கைகள் மூலம் ஒருவருக்கொருவர் வாழ்த்துவார்கள். நமது கலாச்சாரத்தில் மிகச்சாதரணமாக பின்பற்றப்படும் ஒரு வணங்கும் முறை அதிலுள்ள அறிவியல் மற்றும் நன்மைகளை தெரிந்து கொண்டால் யாரும் மறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு அலசல்.
அனைவரிடமும் கைகூப்பி வணங்குவது நமது அடிப்படை கலாசாரம். இரு கைகளைக்கூப்பி வணக்கம் அல்லது நமஸ்காரம் என்பது ஒரு மரியாதைக்குரிய உடல்மொழியாக மட்டுமல்லாமல் அது ஒரு வகையான யோக ஆசனம், முத்திரை.
நமஸ்காரம் என்பதும் ஒரு முத்திரைதான். கைகளைக் குவித்து வணங்கும்போது, முக்கியமாக எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு வெறுப்புகள் மறைகின்றன. தெய்வங்களையும், குருவையும், மனிதர்களையும் கைகூப்பி வணங்க வேண்டும்.கைகளை இணைத்து வணங்குகிற போது ஒரு விரல் மற்றொரு விரலோடு இணைந்து ஒரு வகையான அழுத்தத்தை நரம்புகளில் உண்டாக்குகிற போது அந்த நரம்புகளுக்கு தொடர்புடைய உடல் உறுப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தமும், தாக்கமும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது.இந்த அழுத்தம் கண்கள், காது மற்றும் மூளைக்குச் செல்கிறது.
கைகைளை குலுக்கும் முறை மேலை நாடுகளில் பெரும்பாலும் வழக்கத்தில் உள்ளது , இதில் ஒருவரிடம் இருக்கும் நுண்ணுயிர்கள் கைக்குலுக்குதலின் மூலம் நமக்கு கடத்தப்படும் வாய்ப்பு உண்டு. இன்றுவரை இதை மரியாதை செலுத்தும் ஒரு குறியாகக் காலம் காலமாக நாம் பின்பற்றி வருகிறோம்.
ஐந்து வகை வணங்குதல்கள் நம் நடைமுறையில் உள்ளது.
- கடவுளை கைகூப்பி வணங்குதல்
கடவுளை கைகூப்பி வணங்கும் பொழுது கூப்பிய கரங்களைச் சிரசிற்கு மேலே முழுவதுமாக உயர்த்தி வணங்கிடல் வேண்டும்.”அனைத்திலும் உயர்ந்தவனான, அனைத்துப் புகழுக்கும் உரியவனான, இறைவா, உனக்கே என் உயர்ந்த வணக்கங்கள் அனைத்தும் உரித்தாகுக !” என்று, நின்ற நிலையிலேயே நம் பூரண சரணாகதியை வெளிப்படுத்தும் உன்னத நிலைப்பாட்டைக் குறிக்கும் முகமாக. அதாவது தெய்வங்களை வணங்கும்போது தலைக்கு மேலே கைகூப்பி வணங்க வேண்டும்.
-நண்பர்கள் , உறவினர்களை கைகூப்பி வணங்குதல் :
கூப்பிய கரங்கள் நெஞ்சுக்கு நேராக, நெஞ்சை ஒட்டி இருக்க வேண்டும். நெஞ்சார்ந்த அன்பையும், நட்பையும் தெரிவிக்கும் முகமாக.
- தந்தையை கைகூப்பி வணங்குதல் :
கூப்பிய கரங்கள் முகத்துக்கு நேராக இருக்க வேண்டும் — நம் முக மலர்ச்சியும், மனமகிழ்ச்சிக்கும் முழுமுதற்காரணமான அவர்களுக்கே நம் முகமன் என்பதை உணர்த்தும் வகையில்.தந்தையை வணங்கும் போது, சரியாக சொன்னால் வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.
- தாயை கைகூப்பி வணங்குதல் :
தாயை வயிற்றுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.
- குருவை வணங்குதல் :
கூப்பிய கரங்கள் முகத்துக்கு நேராக, சற்றே மேலுயர்ந்து, நெற்றியையும் மறைத்ததாக இருக்க வேண்டும் — நம் அறிவாற்றலை மேம்படுத்த அயராது உழைக்கும் அப்பெருந்தகையோருக்கு, நமது அறிவுப்பூர்வமான வணக்கங்கள் என்பதை உணர்த்தும்வகையில். அதாவது குருவை வணங்கும்போது நெற்றிக்கு நேரே கைகூப்பி வணங்க வேண்டும்
இரு கரம் கூப்பி வணக்கம் சொல்வதால் பல நன்மைகள் அடங்கியுள்ளன .
- கைகூப்பி வணங்குவதில் தொற்றுக்கள் பரவாது
- ஒரு விரல் மற்றொரு விரலோடு இணைந்து ஒரு வகையான தருகிறது, அது நரம்புகளுக்கு தொடர்புடைய உடல் உறுப்புகளின் மீது நல் தாக்கத்தை தருகிறது. பத்து விரல்களும் ஒன்றோடு ஓன்று இணையும் போது காது , கண் முலைகளின் உணர்ச்சி புள்ளிகளை தூண்டுகின்றது.
- ஒருவரை கைகூப்பி வணங்கும் போது அவரை அதிக அளவில் நினைவு வைத்து கொள்ள முடியும்.
- கைகூப்பி வணங்கும் போது சக்தி நிலைகள் ஒன்றிணைந்து செயல்படுகிறது. கைகளை இணைத்து நெற்றிக்கு நேராக வைத்து வணங்குவது நம் எண்ணங்களை ஒருநிலைப் படுத்தி, முழுமையாகக் கவனம் செலுத்த உதவும்.
-கைகூப்பி வணங்கும் போது எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு வெறுப்புகள் மறைகின்றன.
-அடிக்கடி இரண்டு கைகளையும் இணைப்பதால் மூளையின் இரண்டு பக்கங்களும் சீராகச் செயலாற்றும். அத்தோடு உடல் சக்கரங்களையும் தொடர்பு படுத்துவதால் ஏராளமான நன்மைகளை அளிக்கிறது.
-கைகூப்பி வெவ்வேறு விதமாக வணங்கும் போது நுரையீலின் பகுதிகள் செயல்படுத்தப்படுகின்றன.
இன்று உலக தலைவர்கள் பலர் இந்திய முறைப்படி இருகரம் கூப்பி வணக்கம் செலுத்துகிறார்கள். கைகூப்பி வணங்குதல் நன்று!