அறிவோம் அறிவியலை — சீரகம்
இந்திய உணவுகள் அனைத்திலும் சீரகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தட்கா சுவை, நமக்கு பசியுணர்வை தூண்டுகிறது. வாயு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ முறைகளில் சீரகத்தின் பங்கு மிக முக்கியமானது. சீரகத்தை அதன் வடிவத்தால் மட்டுமல்லாமல், நறுமணத்தாலும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம்.
நம் நாட்டில் பல்வேறு நன்மைகளுக்காக சீரகத்தை பயன்படுத்திகிறோம். சீரக செடியில் இருந்து இது கிடைக்கிறது. காய்ந்த விதைகளே சீரகம் என்கிறோம். நாம் உணவுக்கு மணமூட்டியாகப் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகம். இது வெறும் மணமூட்டி மட்டும் அல்ல. சீரகம் நமது உடலுக்கு பலவிதங்களில் நன்மைகள் அளித்து வருகிறது.சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும்.
சீர்+அகம்=சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
“எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே”
- ஆசான் தேரையர்
தமிழ்ச்சித்தர்கள் சீரகத்தை பற்றி அழகாக பாடியுள்ளனர் எதையும் காரணப் பெயர் கொண்டே அவரகள் அழைத்தனர். சிலவற்றைச் சூட்சமப் பெயர் (அவர்களுக்கே விளங்கும் குறிச்சொல்/ மறைபொருள்) கொண்டும் அழைப்பர். அகத்தைச் சீர் செய்வதால் தமிழ்ச்சித்தர்களால் சீரகம் என அழைக்கப்பட்டது.
சீரகம் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
இதன் பூர்வீகம் வடக்கு ஆசிய நாடுகள் ஆகும்.உலக அளவில் இந்தியா ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் பயிரிடப் படுகிறது.
சீரகத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது. 100 கிராம் சீரகத்தில் உடலுக்கு ஊட்டந்தரும் பல பொருட்கள் அடங்கியுள்ளன. இரும்புச்சத்து, வைட்டமின் சி , பி, ஏ ,ஈ ஆகியனவும் புரதம், நார்ப்பொருள், ஒற்றைபப்டி நிறைவுறு கொழுப்பு முதலியன நல்ல அளவில் உள்ளன. சீரகத்திலிருந்து 56% ஹைட்ரோகார்பன்கள், டெர்பீன், தைமால் போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் தைமால் வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
சீரகத்தின் மருத்துவ பயன்கள்:
பல ஆயிரம் ஆண்டுகளாக அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு முதல் தலைவலி வரையிலான கோளாறுகளுக்கு மருந்தாக சீரகத்தைப் பயன்படுதத்துகிறோம்.
தற்போது பல ஆராய்ச்சிகள் சீரகத்தின் பாரம்பரிய பயன்பாடுகளில் உள்ள உண்மை தன்மையை நிரூபித்து வருகிறது.
கொழுப்பை குறைக்கிறது :
இதயத்தை பாதிக்கும் அதிக அளவு கொழுப்புகளை ஹைப்போ லிபிடெமிக் என்னும் பொருள் கட்டுப்படுத்த உதவுகிறது.
சீரகம் ஹைப்போலிபிடெமிக் பண்புகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
ஒரு ஆய்வில், தயிரில் சீரகப் பொடி கலந்த உணவுப் பொருள் கொழுப்பைக் குறைக்க உதவியது என்று தெரிய வந்துள்ளது.
சீரண ஆரோக்கியம் :
சீரகத்தில் நார்ச்சத்து மற்றும் கார்மினேடிவ், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது.
சீரகம் வயிறு மற்றும் செரிமான அமைப்பை வலுப்படுத்த ஒரு நல்ல மூலமாகும். தினமும் உட்கொள்வதால் வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை.
பயன்பாட்டு முறை- வயிற்றுப் பிரச்சினையிலிருந்து விடுபட, 200 மில்லி தண்ணீரில் 5 கிராம் வறுத்த சீரகப் பொடியைச் சேர்த்து, கலந்து குடிக்கவும்
சாப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வயிறு உப்பிடுது’ என வருத்தப்படுபவர்களுக்கு இது ஓர் அருமருந்து. சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, இந்தப் பிரச்னை தீரும்.
பாக்டீரியா எதிர் பண்பு / நோய் எதிர்ப்பு சக்தி ::
சீரகம் உடலில் உள்ள நோய்வாய்ப்படுத்தும் சில பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.உணவை விசமாக்கக்கூடிய ஈ.கோலை என்ற பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை இது கட்டுப்படுத்துவதாகக் தெரிய வந்துள்ளது.
சீரக விதைகளில் உள்ள எதிர்ப்புசக்தி , பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ஆஸ்துமா மற்றும் சளி சிகிச்சைக்கு தீர்வாக அமைகிறது.
இது ஒரு சளி நீக்கியாக செயல்பட்டு சுவாசக் குழாயில் உள்ள சளியை தளர்த்தி எளிதாக நீக்குகிறது. கற்கண்டு கூட கலந்து சாப்பிடும்போது இருமல் தீருது.
புற்றுநோய் தடுப்பு :
சீரகத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.
பல விலங்குகளில் நடத்த பட்ட ஆய்வுகளில், கல்லீரல், வயிறு மற்றும் பெருங்குடல் புற்று நோய்களால் ஏற்படும் பல்வேறு வகையான கட்டிகளின் வளர்ச்சியை சீரக விதைகள் தடுக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர்.
மேலும் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களை சீரக விதைகள் தடுப்பது என்பது பற்றி இன்னும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
நீரிழிவு நோய் :
நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அதன் அறிகுறி களையும் விளைவுகளையும் குறைக்க சீரகம் உதவுகிறது.
பாரம்பரியமாக நீரிழிவு நோய் மருந்துகளில் சீரகம் பயன்படுத்தப் படுகிறது.சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
இரத்த அழுத்தம் & சர்க்கரை:
திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். இரத்ததில் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளவும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
தேக பளபளப்பு & கூந்தல்:
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. சீரகத்த நாட்டுச் சக்கரையோட சேர்த்து சாப்பிடும்போது, தேக வன்மை கிடைக்குது.
வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
மனநோய்:
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
வாயுத் தொல்லை / வயிற்றுப்புண்:
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லைநீங்கும்.சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.
சீரகப் பொடியோட வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தா வயிற்றுப்புண், வயிறு எரிச்சல் குணமாகுது. சீரகப் பொடியோட வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தா வயிற்றுப்புண், வயிறு எரிச்சல் குணமாகுது… சீரகத்தை ஒரு நாளைக்கு 300 முதல் 600 மில்லிகிராம்தான் சாப்பிட வேண்டும்.
பித்தம்:
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
தலைச்சுற்று:
சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
#சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.
நினைவாற்றல் :
சீரகம் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கிறது.உடலின் மைய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு சீரக விதைகள் உதவுதன் மூலம் பார்க்கின்சன் நோய்க்கு சிகிச்சை அளிக்க வாய்ப்பு உள்ளது.
சீரகம் நினைவகத்தை அதிகரிப்பதில் மிகவும் நன்மை பயக்கும். சீரகத்தை மென்று தினமும் சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும்.
கண்:
சீரகத்துடன் சிறிது மிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
பசியை தூண்டும் :
சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் இவற்றைச் சம பங்கு எடுத்து, நன்கு மையாகப் பொடி செய்து, அத்துடன் சம அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். சாப்பிடுவதற்கு முன்னர், இதிலிருந்து இரண்டு முதல் நான்கு சிட்டிகையை எடுத்து தேனில் குழைத்துக் குழந்தைக்குக் கொடுங்கள். இது நேரத்துக்கு பசியைத் தூண்டும்; ஆரோக்கியத்தையும் பராமரிக்கும்.
தூக்க மின்மையை போக்குகிறது :
சீரகத்தில் எண்ணெய்கள் மனதை அமைதிப் படுத்தும் ஹிப்னாடிக் பண்புகளை கொண்டுள்ளன.இது பொதுவாக தூக்க மின்மையை ஏற்படுத்தும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது.
மேலும் சீரகத்தில் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனான மெலடோனின் கணிசமான அளவு உள்ளது.
மேலும் இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற தத்துக்களும் உள்ளன.இவை அனைத்தும் மூளையின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்து வதற்கும் சரியான நேரத்தில் தூக்கத்தைத் தூண்டுவதற்கும் அவசியமாகும்.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு. ஏற்கனவே சில உடல் நிலை கோளாறு உடையவர்கள் (இரத்தப் போக்கு கோளாறு, நீரிழிவு நோய், அறுவை சிகிச்சை முன்) சீரகத்தை அதிக அளவு உட்கொள்ள கூடாது.
பொதுவாக அளவோடு சீரகம் உட்கொள்வது ஆரோக்கியமான நபர்களுக்கு எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்து வதில்லை.
மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை !
உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை..!