அறிவோம் அறிவியலை — துளசி

Sankar sundaralingam
3 min readFeb 25, 2023

--

இந்தியாவில் பெருபான்மையான வீட்டில் துளசி செடி அல்லது துளசி மாடம் இருக்கும். துளசி மாடத்தை இந்து பெண்கள் தினமும் காலை, மாலையில் வணங்குவர். துளசி மகாலட்சுமியின் அவதாரம் என்றும், வைணவக் கோவில்களில் துளசி பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. துளசி என்றால் ‘தன்னிகரில்லாதவள்’ என்று அர்த்தம். துளசி செடிக்கு ‘ஒப்பில்லாத செடி’ என்று பொருள். அதில் அடங்கியுள்ள அறிவியல் என்னவென்றால் துளசி ஒரு மூலிகை செடி. இதன் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் உடையவை. துளசியின் தாயகம் இந்தியா ஆகும். துளசி பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. துளசி சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், அஜீரண மற்றும் இரைப்பை பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது.

நாம் அன்றாடும் பயன்படுத்தும் இந்த துளசி செடியின் இலைகள் நம் ஆரோக்கியத்திற்கு பல வகையில் உறுதுணையாய் இருக்கின்றது.

“துளசி மூலிகைகளின் அரசி”

துளசி செடியில் அதிக ஊட்டச்சத்து உள்ளது. துளசி இலைகளில் விட்டமின் ஏ, டி இரும்பு மற்றும் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இளமையை காக்கும் துளசி. எந்த ஒரு வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்க கூடிய வல்லமை துளசிக்கு உண்டு. துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. துளசி கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம். அதனால்தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள். நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது. அமிர்தம் போன்ற மருந்தாக கருதப்படுகிறது.

துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.

துளசியில் சாதாரணமாக காணப்படுவது வெண் துளசியாகும். இது தவிர கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவதுளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, நாய்துளசி, நிலத்துளசி, முள்துளசி, கற்பூரதுளசி என அதிக துளசி வகைகள் உள்ளன.

துளசியின் மருத்துவ பயன்கள்:

துளசிநீர்:

- சுத்தமான பாத்திரமொன்றை ( குறிப்பாக செம்பு பாத்திரம்) எடுத்து அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை அளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போட்டு, அதை எட்டு மணிநேரம் ஊறவைத்து பின்னர், அந்த துளசி நீரை வெறும் வயிற்றில் 200 மில்லி குடித்தால் உடலில் நல்ல மாற்றங்கள் தெரியும் . இதை தொடர்ந்து 48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் பலவித நோய்களும் குணமாகும்.

அதுமட்டுமல்லாமல், தோல் சுருக்கம் மறையும், நரம்புகள் பலப்படும், பார்வை குறைபாடுகள் குறையும்.

- உடலின் எந்த பகுதியில் புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீர் குடித்தால் குணம் ஆகும்.

- துளசி நீர் வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை போ‌க்கு‌ம்.

- துளசி நீரை தொடர்ந்து குடித்து வந்தால் நீரழிவு வியாதி நம்மை நெருங்காது.

துளசி இலை :

- கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .

- உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.

- தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

- துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.

- சளி இருமலுக்கு மருந்தாகும் துளசி. துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும்.

- துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

- துளசி செடி நச்சு நீக்கும் தன்மை உடையது.

- துளசி இலை ஞாபக சக்தியை வளர்க்கிறது.

-தினமும் சில துளசி இலைகளை மென்னு தின்றாலே சர்க்கரை அளவு கட்டுப்படும்.

-எடையைக் குறைக்க துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, கொஞ்சம் தேன் கலந்து உணவுக்கு பின் சாப்பிட்டு வந்தா கொஞ்சம் கொஞ்சமா உடல் எடை குறையும்.

-வெட்டு காயங்களுக்கு துளசி இலை சாறு பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.

-துளசி இலை ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியும் துளசி இலை மூலம் பெறலாம்.

- துளசி இடித்து சாறு எடுத்து அதன் சம அளவு எலுமிச்சம்பழம் சாறு கலந்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து வர பேன் பொடுகு தொல்லைகள் நீங்கும்.

- சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு நிவாரணி.

- துளசி இலைகளை தினமும் தின்று வந்தால் குடல் வயிறு வாய் தொடர்பான பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் வராது.

- துளசிக்கு காய்ச்சலை தடுக்க கூடிய இயல்பு உண்டு. இதை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

- தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.

துளசி விதை :

- சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வந்தால் சிறுநீரக கோளாறுகள் விலகும்.

- துளசி விதை உடல் சூடு தணிக்கும்.

- குடல் மற்றும் வயிற்று புண்களை சிறப்பாக ஆற்றக்கூடியது.

- துளசி விதைகளை சாப்பிட்டால் முகத்திலுள்ள பருக்கள் நீங்கும்.

துளசி காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை இழுத்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. துளசியை எங்கு கண்டாலும் அலசியம் செய்யாமல் 10 துளசி இலைகளை சாப்பிடுங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு.

--

--

No responses yet