அறிவோம் அறிவியலை — தோப்புக்கரணம்
பல ஆண்டுகளாக நாம் யோகாசனம் பற்றி அறியாமலேயே யோகாசனம் செய்கிறோம், அதன் நன்மைகளையும் அனுபவிக்கின்றோம் . எப்படி என நினைக்கிறீர்களா ?
சிறந்த உதாரணம் தோப்புக்கரணம் !
நம்மை பொறுத்தமட்டில் தோப்புக்கரணம் போடணும் என்றால் உடனே தவறுகளுக்கு தண்டனை அல்லது விநாயகரை வழிபடும் வழிபாட்டு முறை என்ற நினைப்பு மட்டும். ஆம் நம் வழக்கத்திலும் அதுதானே. பள்ளிகளில் ஞாபக மறதியினால் நிகழும் சிறு குற்றங்களுக்கும், சிறுவர்கள் செய்யும் சில குறும்புகளுக்கும் தோப்புக்கரணம் தண்டனையாக வழங்கப்பட்டு வருகின்றது. இன்றும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் ஒரு தண்டனையாக தோப்புக்கரணம் இருந்துவருகிறது.
நம் முன்னோர்கள் வழிபாடுகள், தண்டனைகளை கூட வாழ்வியல் முறையாக வடிவமைத்தது நம் உடல் ஆரோக்கியத்திற்கு.
தோப்புக்கரணம் பெயர் காரணம், தோல்வியை, குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் விதத்தில் போடும் தோற்புக்கரணம் என்பதுதான் பின்னாளில் தோப்புக்கரணம் என மாறியது.
வெளிநாடுகளில் இதை “அருமை மூளை பயிற்சி யோகா” (super brain yoga) என்று கூறுகிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த உடற்கூற்று வைத்தியர் எரிக் ராபின்ஸ் தோப்புக்கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறும் என்கிறார். இங்கும் உடற்பயிற்ச்சுகளில் பெரியவர்கள் முதல் சிறியவர் வரை தோப்புக்கர்ணம் போடுவது பிரபலமானதாக உள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டுவதால் மனம் ஒருமுகப்படும். ஞாபகசக்தி அதிகரிக்கும். படிப்பிலும் கவனம் கூடும் என்ற கருத்து உள்ளது.
தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சியின் மூலமாக யோகாசனத்தின் பெரும்பான்மை நன்மைகளையும் பெற்றிருக்கிறோம்.
தோப்புக்கரணம் பற்றி உள்ள அறிவியல் உண்மைகளையும் பற்றியும் பார்ப்போம்.
#தோப்புக்கரணம் போடும்போது நமது காதுகளைப் பிடித்துக் கொள்கிறோம். குறிப்பாக காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல் கிடைக்கிறது.
#காதுகளில்தான் இதயம், சிறுநீரகம், மூளை, வயிறு, கண்கள், கீழ் மற்றும் மேல் தாடை, ஈரல், காதின் நரம்பு எனப் பல்வேறு உறுப்புகளின் தொடர்புப் புள்ளிகள் அமைந்துள்ளன. எனவே தோப்புக்கரணம் போடும்போது, இந்த எல்லா உறுப்புகளுமே பயன்பெறுகின்றன.
#தோப்புக்கரணம் போடுவதால் இடுப்பில் உள்ள எலும்பு, தசை, ஜவ்வு உள்ளிட்டவை வலுவடைகின்றன. இதனால் இடுப்பு வலி வராமல் தடுக்க முடியும்.
#உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் தசை இயங்க ஆரம்பிக்கிறது.சோலியஸ் தசையால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். இதயத்தின் தசைகளை போன்றே இது வேலை செய்கிறது .
#அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்பட்டு மூளைக்கலங்களும் சக்தி பெறுகின்றன.தோப்புகரணம் போடும் போது மூளையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றது. இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்சி அடைகின்றன என்பதை, இன்றைய நவீன முறையில் பலவித கருவிகளை கொண்டு ஆய்வு செய்த அமெரிக்கவின் ஹாவர்டு பல்கலைகழகம் மற்றும் இந்திய மருத்துவ நிபுணர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
#தோப்புக்கரணம் போடுவதன் மூலம் தண்டுவடத்தின் மூலாதாரத்தில் சக்தி உருவாகும்.
# ஆட்டிசம் (ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு) போன்ற மன இறுக்கம் சம்மந்தப்பட்ட நோய்கள் கூட தோப்புகரணம் போடுவதால் குணமடைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இப்பயிர்ச்சியை தினமும் ஐந்து நிமிடம் செய்தால் வியக்கத்தக்க மற்றைங்களை காணலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்
# தோப்புக்கரணம் போடுவதால் மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு ஞாபக சக்தி அதிகரிக்கும். தோப்புக்கரணம் தொடர்ந்து செய்யச்செய்ய, மூளை, சுறுசுறுப்படைகிறது.
# மந்தமான மனநிலையுள்ளவர்களின் மூளை செயல்திறன், அவர்கள் காது நுனிகளில் தொடுதல் மூலமான பயிற்சிகளினால், மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் சக்தி, ஞாபக சக்தி, அதிகரிக்கிறது.
# தோப்புக்கரணம் போடுவதால் மனதில் ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு விலகும்.
# உடல் கை கால் தசைகள் எல்லாம் இறுகி, உடல் வலுவாக இருக்கும்.
#கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 5 முதல் 6 தோப்புக்கரணம் போடுவதன் மூலம் பிரசவம் எளிதாகும். கர்ப்பப்பையின் சுருங்கி விரியும் தன்மை அதிகரித்து, சுகப்பிரசவத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
#தோப்புக்கரணத்தினால் குடல் பகுதிக்குத் தேவையான இயக்கம் கிடைப்பதால், மனிதனால் கழிவை எளிதில் வெளியேற்றிட முடியும். அதே சமயம் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்து வந்தால் தொப்பையும் குறையும்.
தோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய், அதனால் தான் இன்றும் தோப்புக்கரணம் என்ற ஒற்றைப்பயிற்சி அனைத்து வகை உடற் பயிற்சிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறது. இதை மறக்காமல் தினமும் 5~10 நிமிடங்கள் தோப்புக்கரணம் போடுங்கள். அப்படி நீங்கள் தினமும் 5–10 நிமிடங்கள் தொடர்ந்து செய்தாலே, வேறெந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.