அறிவோம் அறிவியலை: நெல்லிக்காய்

Sankar sundaralingam
3 min readMar 11, 2023

--

ஒரு நெல்லிக்கனி மூன்று ஆப்பிள்களுக்கு சமம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கொண்ட ஒரே பலம் நெல்லிக்கனி. நெல்லிக்கனியில் விட்டமின் சி, ஆண்ட்டி ஆக்சிடன்ட் சத்துக்கள், புரதம், கால்சியம், இரும்புச்சத்து, மேக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சுமார் 600 மில்லி கிராம் விட்டமின் சி நெல்லிக்காயில் கிடைக்கிறது. நெல்லிக்காயை அழுத்தினால் ஆறு கீறுகளாக வரும். அதில் நாம் தினமும் இரண்டு கீற்றுக்களை உண்டால் போதும் எந்த நோயும் நம்மை நெருங்காது. பருவ கால நோய்களை நெல்லிக்காய் தடுக்கும்.

நெல்லிக்காயை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம். நெல்லிக்காய் வயதை நிலை நிறுத்தும். அதனால் தான் தமிழ் புலவர் அவ்வை பாட்டியின் ஆயுளை நீட்டிக்க அதியமான் மன்னன் தனக்கு கிடைத்த சகாவரம் நெல்லிக்கனியை அவ்வையாருக்கு வழங்கிய நாம் அனைவரும் படித்திருப்போம்/ கேட்டிருப்போம்.

நெல்லிக்காயை தாத்ரீ என்று அழைப்பர். திரிபலை ( கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ) என்ற முக்கோண கூட்டில் நெல்லிக்காய்க்கு இடம் உண்டு. நாம் பின்வரும் தொடர்களில் கடுக்காய், தான்றிக்காயை பற்றி விளக்கமாக பார்ப்போம். தற்போது நெல்லிக்காய் அற்புதத்தை பார்ப்போம் பற்றி பார்ப்போம்.

நெல்லிக்காய் சங்ககால முதலே சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அருமருந்தாக பயன்படுகிறது.

நெல்லிக்காயில் 5 சுவைகள் உள்ளன உப்பை தவிர. அவை கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு மற்றும் உரைப்பு. இந்த 5 சுவைகளை கொண்ட நெல்லிக்காய் நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மழைக்கால ஆரம்பத்தில் பூக்க ஆரம்பித்து பனிக்காலத்தில் கனி தரும் மரம் நெல்லி மரம்.

நெல்லிக்காயில் மற்ற இரண்டு வகைகளும் உண்டு.

-கரு நெல்லி (கருமை கலந்திருக்கும்), கிடைப்பது மிக அரிது. — அரி நெல்லி இதை நம்ம சிறிய நெல்லி என்று கூறுவோம்.

தற்போது நாம் இங்கே பெரிய நெல்லியைப் பற்றி விவரமாக பார்க்க போகிறோம்.

நெல்லியை ஆமலகம், ஆலகம், தாத்ரீ,மருதுபலா என்றும் தமிழில் அழைப்பர். மலையாளம், கன்னடத்தில் நெல்லிக்காய் என்று அழைப்பர். சமஸ்கிருதத்தில் ஆம்லக் என்று அழைப்பர். ஹிந்தியில் ஆம்வலா என்று அழைப்பர். வங்காளத்தில் ஆமலா என்று அழைப்பர்.

நெல்லிக்காய் எளிதில் ஜீரணமாக கூடியது, வறட்சித் தரக்கூடியது, குளிர்ச்சி தரக்கூடியது. அதனால் தான் இதனை சீத வீர்யமுடையது என்கிறார்கள். இதன் தாயகம் இந்தியா.

நெல்லிக்காயை பல முறைகளில் உண்ணலாம், அப்படியே கனியை கடித்து சாப்பிடலாம். அதன் புளிப்பு சிலருக்கு சாப்பிடுவது கடினமாக இருக்கும், அதனால் நம் முன்னோர்கள் பல வழிகளை கண்டனர். அவை தொகையல், ஊறுகாய், பச்சடி, தேனூறல், சாராக மற்றும் புளிக்கு பதில் நெல்லிக்காயை அரைத்து ரசமாக வைக்கலாம். வெயில் காலத்தில் வற்றலாக சாப்பிடலாம். உலர்த்தி காய வைத்து பொடி செய்து சாப்பிடலாம்.

நெல்லிக்காயின் மருத்துவ பயன்கள்:

சர்க்கரை நோய்:

முன்னவே கூறியது போல சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஏனென்றால், இது உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வரும் பட்சத்தில், ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் வரும். நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.

உடல் எடையை குறைக்க உதவும் :

நெல்லிக்காய்க்கு, நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் உடையது அதனால் கழிவுகள் உடலில் தங்காமல் உடல் ஆரோக்கியத்தை காக்க முடியும்.அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது : நெல்லிக்காயில் குளிர் காலத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவ கால நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவும். நம் உடம்பில் இருக்கிற கபத்தை வெளியேற்றும் மற்றும் நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும்போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேறும். இந்தக் கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து மேலே சொன்ன பிரச்னைகள் வராமல் தடுப்பவை.

இதய நலன் மேம்படும் : நம் உடலில் செல்கள் பாதிப்பு அடைவதை நெல்லிக்காய் கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலில் சேரக் கூடிய கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. அந்த வகையில் இதய நலனை மேம்படுத்த இது உதவியாக உள்ளது. தினசரி தேன் நெல்லி சாப்பிட்டு வர, நமது சருமம் இளமையான தோற்றம் பெறும். அல்லது தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம்.

சரும பிரச்னைகளை தீர்க்கும் :

நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம்.

வயிற்றுப் புண்களைக் குணமாக்கும்:

உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.

நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும்:

நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். கொரோன காலங்களில் இதன் பயன்பாட்டை பற்றி அறிந்திருப்பீர்கள் .

தலைமுடிகளை பாதுகாக்கும்:

நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

ரத்த சமரந்தமான நோய்களை குணமாக்கும் :

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

- நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும்.

-நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும்.

-நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதை தடுக்கும்.

குழந்தைகளுடைய வாட்டர் பாட்டிலில் ஒரு நெல்லிக்காயை கட் பண்ணிப் போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி விடலாம். நெல்லிக்காய் ஊறிய இந்தத் தண்ணீரைக் குடித்தாலே குழந்தைகளுக்குப் போதுமான வைட்டமின் `சி’ கிடைத்துவிடும். ஆனால், குழந்தைகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் நெல்லிக்காய் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தயிரைத் தனித்து நெடுங்காலம் உண்பதால் சில கெடுதல்கள் ஏற்படும். ஆனால் அவை நெல்லிக்காயுடன் சேர்த்து உண்ணும்போது ஏற்படுவதில்லை என்கிறது ஆயுர்வேதம்.

அருமருந்தான நெல்லிக்காய் மகிமை அறிந்து அதை பயன்படுத்துங்கள்.

--

--

Responses (1)