அறிவோம் அறிவியலை — மருதாணி

Sankar sundaralingam
4 min readDec 17, 2022

--

நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த பல பொருள்கள் குறித்தும் முழுமையான புரிதலை இன்று நாம் முழுமையாக அறிந்திருக்கவே இல்லை என்று சொல்லலாம். அவர்கள் உணவை மருந்தாக்கி உண்டவர்கள். பழக்க வழக்கங்கள், நடைமுறை வாழ்வியலில் மருத்துவத்தை கொண்டு வாழ்ந்தனர். அவற்றில் மருதாணி மிக முக்கியமானது.

உடற்கலையில் மனித உடலில் வரையப்படும் அலங்கார வடிவமே மருதாணி. காய்ந்த மருதாணி இலைகள் மூலம் அரைக்கப்பட்ட பசையினால் மருதாணியின் அலங்கார வடிவங்கள் மனித உடலில் வரையப்படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே இந்தியா துணைக்கண்டம், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உடற்கலையே மருதாணி எனப்படுகின்றது.மருதாணி மீது அதிக காதல் கொண்டவர்கள் இந்திய பெண்கள், மருதாணியையும், இந்திய பெண்களையும் ஒரு போதும் பிரிக்கவே முடியாது.

ஹெந்திகா என்ற சம்ஸ்கிருத சொல்லில் இருந்து மெஹந்தி என்ற சொல் வந்தது. மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் ஆகிய பெயர்களும் மருதாணிக்கு உண்டு. மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டது.

மருதாணியில் மருத்துவ பயன்கள் அதிகம் அடங்கியுள்ளது, இது வெறும் அலங்கார பொருளன்று. இவற்றின் இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை மருத்துவ பயன்களை கொண்டது. மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்கள் கிடைகின்றன. ஆனால் இந்த பயன்கள் கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை. அதில் ரசாயனங்கள் அதிகம் சிவக்க பயன்படுத்த படுகிறது. மருதாணி என்பது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது.

இத்தகைய மகத்துவம் வாய்ந்த மருதாணி உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? வாருங்கள் அதைப் பற்றி இப்பதிவு மூலம் தெரிந்து கொள்வோம்.

மருதாணி பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தாராளமாக மருதாணியை இட்டுக் கொள்ளலாம். ஆண்கள் மருதாணி இட்டுக் கொள்வது அவமானத்திற்கு உரியது அல்ல. இயற்கையாகவே கிடைக்கும் மருதாணி, ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது.மகத்துவமிக்க மருதாணியின் மருத்துவ குணங்கள், சரும மருத்துவர் சொல்லலாம்.

மாதவிடாய் : மருதாணி இலைகள் தசை இறுக்கும் தன்மை கொண்டது. அதிக இரத்தப்போக்கினை தடுக்கும்மருத்துவம் உள்ளது . மாதவிடாய் சுலபமாய் இருக்க உதவும். பெண்களின் வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாயில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஆகியவற்றை தீர்க்கும்.மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை நீக்க, மருதாணியை வைத்துக் கொள்ளலாம்.

ரத்தம்: மருதாணி இலைகள் உடலில் ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை நீக்க உதவுகிறது. மருதாணி இலைகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி அதில் இரண்டு மடங்கு அளவு நீர் சேர்த்து இரவு உணவுக்கு பின் ஒரு டம்ளர் அளவு வரும் வரை குடித்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறு, ரத்தம் சுத்தியாகும். ஆறுமாதங்களுக்கு ஒருமுறை இதை குடிக்கலாம். ஆனால் புதிய மருதாணி இலைகளை பயன்படுத்த வேண்டும்.

தூக்கம் :மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணை போல் செய்து படுத்து வர நல்ல தூக்கம் உண்டாவதுடன், தலைப் பேன்களும் குறையும்.மருதாணி மரப்பூக்களை எடுத்து சுத்தப்படுத்தி, தினமும் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் அளவு மருதாணி பூக்களை அரைத்து சேர்த்து குடித்துவர வேண்டும். தொடர்ந்து இப்படி செய்துவந்தால் தூக்கம் நன்றாக வரும்.தூக்கமாத்திரை போட்டால் தான் தூக்கமே வருகிறது என்பவர்களும் கூட இதை முயற்சி செய்தால் மாத்திரைகள் இல்லாமலே தூக்கம் வரும்.

நகம் : மருதாணி இலைகளுடன் சிறிதளவு பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, கால் நகங்களின் மீது வைத்து, காய்ந்த பின்னர் உறங்கி காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒரு முறை செய்து வர நகம் சொத்தையாவது அழுக்குடன் பளபளப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பிரச்சனைகள் தீரும். மேலும் நகம் தொடர்பாக ஏற்படும் எந்த நோயானாலும் தடுக்கப்படும்.நகங்களில் வரக்கூடிய நகச்சுத்தி, நகவிரல் இடுக்கில் புண், விரல்களின் ஓரங்களில் தோல் உரிதல் போன்றை வருவதற்கு காரணம் கண்ணுக்கு தெரியாத பூஞ்சைகளும் கிருமிகளும் தான். நகச்சுத்தி அதிக வலி மிக்கது. உபாதை அதிகம் தரக்கூடியது. இதை போக்க எளிய வைத்தியம் மருதாணியை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து தடவுவதுதான். தொடர்ந்து 5 நாட்கள் வரை இதை நகத்தில் தடவி ஒரு மணி நேரம் விட்டு கழுவி வந்தால் நகச்சுத்தி காணாமல் போகும்.

உஷ்ணத்தை குறைக்கும்: மருதாணியில் இருக்கும் குளிர்ச்சியான தன்மை உஷ்ணத்தை வெகுவாக குறைக்கும். உஷ்ண உடம்பு கொண்டவர்கள் அடிக்கடி மருதாணி வைப்பது மிகவும் நல்லது. மருதாணி விதை எண்ணெயை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும்.

சருமம்:மருதாணி இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் புண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள், சருமத்தில் வரும் கரும்படை, வண்ணான் படை ஆகியவற்றை குணமாக்கும்.

மருதாணி இலையை மஞ்சள், வேப்பிலையுடன் அரைத்து அந்த இடத்தில் தடவி குளிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் அளவுக்கு இப்படி செய்துவந்தால் கரும்படை காணாமல் போகும். ஆனால் அதை பயன்படுத்தும் போது அதிக சோப்பு போடக்கூடாது. மருதாணி இலையை சரியாக பயன்படுத்தினால் அவை குஷ்ட நோயை கூட குணப்படுத்தும் தன்மை கொண்டது. சொரி, சிரங்கு போன்றவற்றுக்கும் இந்த வைத்தியம் செய்யலாம்.மருதாணி இலை மற்றும் மலர்கள் குஷ்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இந்த தகவல்கள் மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

வாய்புண் & தொண்டை புண் : சிறிதளவு மருதாணிக் கொழுந்தை நீரில் இட்டு ஊற வைக்க வேண்டும். 1 மணி நேரம் ஊறிய பின்னர் இந்த நீரைக் கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தால் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் தீரும்.தொண்டை கரகரப்புக்கு கொப்பளிப்பு நீராகும். தொண்டை வரையும் கொப்புளிக்கலாம். அதனால் சுத்தமான நீரில் சுத்தம் செய்த மருதாணி கொழுந்தை பயன்படுத்த வேண்டும். இதனால் அவை உடலுக்குள் போனாலும் கெடுதல் இருக்காது.

பாதம் & கால் :மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்டுவது சிறந்த முறையாக பாரம்பரிய மருத்துவத்தில் இன்றும் இருந்து வருகின்றது.கால் எரிச்சலைத் தடுக்க இலைகளை அரைத்து பசையாக வைப்பதின் மூலம் அவற்றை சரிசெய்யலாம்.பாதங்களில் எரிச்சல், சேற்றுப்புண், கால் நகம் சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு மருதாணி இலையை அரைத்து பாதத்தில் தடவி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் இம்முறையே கடைபிடிக்கப்படுகிறது.

கால் ஆணி என்பது உள்ளங்காலில் வரக்கூடியது. கால் ஆணி வந்த பிறகு உபாதை தாங்கமுடியாததாக இருக்கும். சிலருக்கு காலை எடுத்துவைக்கவும் முடியாது. இவை அதிகமாகமால் குணப்படுத்தவும் மருதாணி சிறப்பாக உதவும்.மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.

தீக்காயம்: மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாகும்.தீக்காயம் மனிதர்களின் மேற்புற தோல் மிகவும் மென்மையானது. தோலில் தீக்காயம் ஏற்பட்டால் தோலில் பாதிப்புகளை ஏற்படுத்தி அது ஆறும் போது தழும்புகளை உண்டாக்குகிறது. தீக்காயம் பட்ட இடத்தில் குளிர்ச்சி தன்மை மிகுந்த மருதாணி இலையை அரைத்து பூசி வந்தால், காயத்தில் இருக்கும் எரிச்சல் தன்மை மற்றும் வலி குறையும். காயம் சீக்கிரம் ஆறுவதுடன் அழுத்தமான தழும்புகள் ஏற்படுவதை தடுக்கும்.

இளநரை: இளநரையை அகற்றும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம். மருதாணி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும்.

தலைவலி : மருதாணி இலைகளை நன்கு அரைத்து தலைவலி ஏற்படும் போது நெற்றியில் தடவி வந்தால் எப்படிப்பட்ட தலைவலி பிரச்சனைகளும் தீரும்.

ரத்த அழுத்தம்: ரத்த அழுத்தம் மருதாணி இலைகள் ஊறவைக்கப்பட்ட தண்ணீரை அருந்தி வருபவர்களுக்கு ரத்த அழுத்தும் சமசீரான அளவில் இருக்க செய்கிறது. இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் ரத்தம் கட்டிக்கொள்ளும் நிலை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மருதாணி இலைகளுக்கு உண்டு. இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடாது என நினைப்பவர்கள் மருதாணி இலை தண்ணீரை பருகி வருவது நல்லது.

-குடல் புழுவை வெளியேற்றும் பாட்டி வைத்தியம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

- கைகளுக்கு மருதாணி போட்டு வர மனா அழுத்தம் குறையும்.

- சீதபேதினை கட்டுப்படுத்தும்.

மருதாணி என்பது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது.

மருதாணியை அழகு காக்கும் பொருளாக மட்டும் பார்க்காமல் , இனியாவது ஆரோக்கியம் காக்கும் பொருளாக பார்ப்போம்.

--

--

No responses yet