அறிவோம் அறிவியலை — மிளகு
ஆங்கிலேயர்களின் இந்தியாவின் மீதான மோகத்திற்கு முதற்காரணம் மிளகு. அக்காலத்தில் நம் நாட்டிலிருந்து மிளகு அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அரபியர்கள் அதை அதிக லாபத்திற்கு ஐரோப்பியர்களுக்கு விற்பனை செய்தார்கள். மிளகை ‘கருப்புத் தங்கம்’ என்று கூறுவார்கள். ஏன் என்றால் தங்கத்தை விட விலையுயர்த்த பொருள். ஐரோப்பிய நாடுகளில் மிளகை விலை உயர்ந்த பொருளாகவும், செல்வ செழிப்பின் அடையாளமாக கருதினார்கள். மிளகுக்காக இங்கு வந்து வியாபாரம் தொடங்கி , நமது நாட்டை பிடித்தனர்.
அக்காலத்தில் நாம் மிளகாயை கொஞ்சம் கூட பயன்படுத்தியது இல்லை, உங்களுக்கு இது தெரியுமா?
மிளகாய் சிலி நாட்டிலிருந்து வந்தது. நமது பாரம்பரிய தாவரம் கிடையாது. மிளகு நல்லது , மிளகாய் நல்லதன்று என்று வழக்கத்தில் இருந்துள்ளது.
பண்டைய காலத்தில் மிளகை நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டது. இன்றோ நாம் மிளகு சாப்பாட்டில் இருந்தால் தூக்கி வீசுகின்றோம். நினைவில் கொள்ளுங்கள் மிளகு ஒரு கருப்பு தங்கம் இன்றும் கூட. மசாலா பொருட்களின் மன்னன் , மசாலா அரசன் மிளகு.
“பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டிலயும் சாப்பிடலாம்” என்ற பழமொழி உண்டு. அந்த அளவுக்கு மிளகில் விஷத்தை முறிக்கக் கூடிய தன்மை உள்ளது. மிளகு சற்று வெப்ப குணமுடையது.
மிளகின் பிறப்பிடம் இந்தியா ஆகும். குறிப்பாக கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது.மிளகின் காரத்தன்மை அதிலுள்ள பெப்பரைன் என்ற வேதிப்பொருளால் எற்படுவதாகும்.மிளகின் கொடி, இலை மற்றும் வேர் முதலியன பயன் உள்ளவை. மிளகின் மகத்துவம் தெரிந்த நம் முன்னோர்கள் அதனை அடிப்படையாக கொண்டு நமது உணவு முறையை வகுத்தனர்.
மிளகு நறுமணத்துக்கும், சுவைக்கும் மட்டும் இல்லை, சிறந்த மருந்தும் ஆகும்.மிளகு ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பொருள்.
மிளகின் வகைகள் :
- வெண்மிளகு
-கரு மிளகு
-பச்சை மிளகு
-சிவப்பு மிளகு
மிளகின் சத்துக்கள் :
கல்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், நார்ச்சத்து, தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன.
மிளகின் மருத்துவ பயன்பாடு :
மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உலகின் தலைசிறந்த எதிர்மருந்து மிளகு.
1. இருமல், சளி, காய்ச்சல்:
சளி, இருமல், காய்ச்சல் போக்க நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது. மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து.கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும்.
உடல் சூட்டினால் வரும் இருமல் — மிளகு பொடியை பனைவெல்லத்தில் சேர்த்து பிசைந்து, சிறிதளவு சில நாட்கள் எடுக்க இருமல் தீரும்.ஜலதோஷத்தால் வந்த இருமலை நீக்க மிளகு குடித்தால் குணமாகும். 5 அல்லது 6 மிளகை எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் பிரச்சனைகளிலிருந்து விடு பெறலாம்.
2. விச முறி மருந்தாக:
விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்கும் தன்மை கொண்டது. உடல் நச்சுத்தன்மை நீங்க, விஷக்கடி நஞ்சுகள் நீங்க — மிளகு 10, வெற்றிலை 1, அருகம்புல் 1 கைப்பிடி — இடித்து போட்டு குடிநீரிட்டு குடித்து வந்தால் உடல் நச்சு குணமாகும்.
பூரான் கடி — வெற்றிலை சாறு, மிளகு சேர்த்து 1 நாள் முழுவதும் ஊற வைத்து பின் ஊறிய மிளகை உலர்த்தி பொடி செய்து பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை இருவேளை 2 விரல் அளவு வெந்நீரில் எடுத்து வர பூரான் கடி விஷம் உடலில் நீங்கும். தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால் மிளகில் உள்ள ஆன்டிபாக்டீரியல் தன்மை உடலுக்குள் நுழையும்.பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி ஏற்படும் நோய்களை தடுத்து உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
3.வாதம்,உபாதைகளை அடக்கும்
மிளகு இரசம் — தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் தடுக்கும்.ஆஸ்துமா, மூட்டு வலி போன்றவை இருந்தால் தினமும் அவர்கள் மிளகு எடுத்து கொள்ளலாம்.வயிறு சரியில்லாதவர்கள் மிளகு சாப்பிட்டால் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து செரிமான பிரச்சனைக்கு நல்ல தீர்வைத் தரும்.மேலும் வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றையும் போக்கும்.
4.நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருகிறது :
மிளகின் காரம் புத்துணர்ச்சியை அளிக்கிறது, மூளையின் சாயப்படுகளை அதிகரிக்கின்றது. உடல் சோம்பலை தீர்கிறது. உடலில் சேரும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. நரம்புகள் வலுப்பெற உதவுகிறது. நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு மிளகு சிறந்த மருந்தாகும். மிளகு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக் கும் ஆற்றல் உள்ளது.
5.ரத்த சுத்திகரிப்பு :
ரத்த குழாய்களை சுத்தம் செய்கிறது. இருதயம் பழுதடைந்து மெதுவாக வேலை செய்கையில் மிளகுத்தூள் உணவில் சேர்ப்பதன் மூலம் இருதயம் சுறு சுறுப்படைந்து ரத்த ஓட்டத்தை உடலெங்கும் சீராக்குகிறது.
6.உடல் வெப்பத்தினை / உஷ்ணத்தை தரும் :
மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.
7. செரிமானத்திற்கு:
மிளகு உணவைச் செரிக்க வைக்க கூடியது.பசியின்மை — தினசரி மிளகு பொடி 1/2 கிராம் வெதுவெதுப்பான நீரில் பருகிவர பசி உண்டாகும். உமிழ்நீரை பெருக்கி உணவை செரிக்க உதவும். செரியாமை — மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம்ஆகியவற்றை சம அளவு பொடி செய்து, 1 கிராம் இருவேளை வெந்நீரில் எடுத்துவர செரியாமை நீங்கி, வயிற்று நோய்கள் நீங்கும்.மிளகில் ஆன்டிபாக்டீரியல் சக்தி அதிக அளவில் இருப்பதால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சீராகும்.
8. பல்வலி :
தினமும் பல் தேய்க்கும்போது மிளகோட உப்பு சேர்த்து தேய்ச்சிட்டு வந்தா பல் கூச்சம், பல்வலி, வாய் துர்நாற்றம் எல்லாம் நீங்கி பல் வெண்மையாகும். மிளகு பொடியும் , சீராக பொடியும் சம அளவு சேர்த்து மோருடன் கலந்து குடித்தால் வாய் துர்நாற்றம், பற்களில் ரத்த கசிவு குணமாகும்.
9.ஆஸ்துமா, மூட்டு வலி போன்றவை இருந்தால் தினமும் அவர்கள் மிளகு எடுத்து கொள்ளலாம்.
10.உடல் எடையைக் குறைக்க நினைத்தால் மிளகை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
11.வாயு வருவதை தடுக்கும்.
12.மிளகில் உள்ள வேதிப்பொருள் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
13. மிளகு ஊறவைத்த தண்ணீர் குடித்து வந்தால் கல் அடைப்பு, சிறுநீரக பிரச்சனைகள் குணமாகும்.
14.தலையிலுள்ள பொடுகை ஒலிக்கவும் மிளகு பயன்படுகிறது.
14. மிளகை சுட்டு புகையை சுவாசித்தால் தலைவலி நீங்கும்.
உணவே மருந்து, மருந்தே உணவு — அன்றாட உணவில் சேர்க்கப்படவேண்டிய முக்கிய பொருள் மிளகு என்றால் மிகையாகாது.