அறிவோம் அறிவியலை — வேம்பு
ஏன் இந்தியர்கள் வேப்ப மரத்தை வணங்குகிறார்கள் தெரியுமா உங்களுக்கு?
இதோ அதன் ரகசியம். இயற்கையை வணங்குவது இந்திய மரபுகளில் ஒன்று. வேம்பு இயற்க்கை நமக்கு அளித்த கொடை, இந்தியாவின் சஞ்சீவி மரம் வேம்பு, அதனால் தான் நம் முன்னோர்கள் வேம்பு மரத்தை மிகவும் வணங்கப்படும் மரமாகவும் , அதில் தெய்வம் குடிகொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள். இந்திய புராணங்களில் விருப்பங்களை நிறைவேற்றும் மரமான ‘கல்பவ்ரிக்ஷா’வை விட வேம்புக்கு உயர்ந்த இடத்தைப் அளித்தார்கள்.
நமது வேதங்களில் வேம்பு சர்வ ரோக நிவாரிணி என்று அழைத்தார்கள். இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கருதப்படுகிறது. இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சியின் தாக்கம் பல மரங்கள் இயற்க்கை சாரத்தை இழந்துள்ளன , அதை தாங்கி நிற்கும் சில மரங்களில் வேம்புவும் ஒன்று.
இந்தியாவில் மட்டும் சுமார் 20 மில்லியன் வேம்பு மரங்கள் உள்ளதாக தகவல், ஒரு மரம் சராசரியாக 50 இந்தியர்களுக்கு என்று உள்ளது. (குறிப்பு : வேம்பு அறக்கட்டளை இணையம் ). இதில் 32 க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்கவர் தாவரத்தின் பெரும்பகுதி நூற்றுக்கணக்கான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, கிருமி நாசினி மற்றும் நோயெதிர்ப்பு தூண்டுதல் கலவைகளால் நிரம்பியுள்ளது.மனிதனை வாழவைக்கும் அமுத சுரபியாகும்.
வேம்பு இந்தியாவில் பயனுள்ள மரம். வேம்பு ஒரு வகையான மூலிகை. வேப்ப இலை , பூ, காய் , பட்டை , குச்சி , பழம் அனைத்திற்கும் மருத்துவ குணம் உடையது. வேப்பமரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன் அளிக்க கூடியது. வேப்பம் இலையை வீட்டு தோரணைகளில், சுப நிகழ்ச்சிகளில் கட்டுவது சம்பிரதாயத்துக்கு மட்டும் கிடையாது, அதன் அறிவியல் வீட்டிற்க்குள், சுப நிகழ்ச்சிகுள் நுழையும் கண்ணுக்கு தெரியாது கிருமிகளை தடுப்பதற்க்கு. அதனால் தான் வேப்ப மரம் இந்தியர்களின் நண்பராகவும், பாதுகாவலராகவும் இருந்து வருகிறது.
அமெரிக்காவின் விவசாயத்துறை 1995ஆம் ஆண்டில் ஐரோப்பிய காப்புரிமைக் கலகத்திடமிருந்து வேம்புக்கான காப்புரிமையை பெற்றது . பின் இந்தியா வேம்பு 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வழக்கத்தில் இருப்பதாக நிரூபித்து வாதிட்டது . 2000 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சாதகமாக யுரோப்பிய காப்புரிமைக் கழகம் தீர்ப்பளித்து, அமெரிக்காவின் காப்புரிமையை ரத்து செய்தது.
நம் வாழ்க்கைமுறையில் அங்கமான வேப்ப மரம் சார்த்த சில பொதுவான நடைமுறைகள்:
# வேப்ப மரத்தடியில் உறங்கி இளைப்பாறுதல்
# கொசுக்களை விரட்ட வேப்ப இலைகள் மற்றும் மரக்கிளைகளை எரிப்பது.
#தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதற்காக வேப்ப இலைகளை கதவுகளில் தொங்கவிடுதல்.
#தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் வேப்ப இலைகளை பரப்புதல்.
#ஒரு சில வேப்ப இலைகளை வேகவைத்த தண்ணீரில் குளித்தல்.
#வாய் சுகாதாரத்திற்காக காலையில் முதலில் வேப்பம்பூவை மென்று சாப்பிடுதல்
#வேப்பம் குச்சியில் பல் துலக்குதல்
#கறவை மாடுகளின் தீவனத்தில் வேப்ப இலைகளை சேர்ப்பது.
இந்த நடைமுறைகளில் மருத்துவ அறிவியல் பல அடங்கியுள்ளன. அவற்றை இங்கு காண்போம்
வேப்ப மரம் :
வேப்ப மரக் காற்று பல வியாதிகளை குணப்படுத்தும். அதன் காற்று மருத்துவ குணம் கொண்டது. வேப்ப மரம் அதிகம் உள்ள பகுதிகளில் நோய்கள் அதிகம் பரவாது.
வேப்பமரத்தடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும், அதனை பார்ப்பதாலும் மன அழுத்தம், மன சோர்வு குறையும், உடல் சோர்வு , உபாதைகள் நீங்கும்,ஒருவிதமான மன அமைதி கிடைக்கும். மனநல காப்பகங்களில் இதனால் தான் வேப்ப மரங்ககளை நட்டுள்ளனர். வேப்பமரம் வீடு கட்டவும் .விறகாகவும் பயன்படுகிறது.
வேப்பம்பட்டை:
#100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
# வேப்பம்பட்டையில் கஷாயம் வைத்து குடித்தால் வயிறு சுத்தமாகும் சளி குறையும் குடல் பூச்சி தொந்தரவுகள் இருக்காது.
# வேப்பம்பூ ரசம், துவையல் ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
#வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரையை சேர்த்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் தீராத தொழுநோய் முதலான அனைத்து சரும வியாதிகளும் குணம்டையும்.
வேப்பம்பூ :
சித்திரை மாதம் அதிகளவில் வேப்பம் பூக்களை மரத்தில் காணலாம்.
#வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும்,பசி உண்டாகும்.
#வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும்.
#வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.
#வேப்பம் பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு.
#வேப்பம்பூ இலை இரண்டையும் அரைத்து உடலில்தேய்த்து குளித்தால் அக்கி தேமல் சொரிசிரங்கு போன்ற நோய்கள் வராது.
#தலையில் தேய்த்து குளித்தால் பேன் தொல்லை பொடுகு போன்ற தொந்தரவுகள் இருக்காது.
#காய்ந்த வேப்பம்பூ தூளை 4 சிட்டிகை எடுத்து இஞ்சிச் சாறில் கலந்து சாப்பிட்டால் அடிக்கடி வரக்கூடிய ஏப்பம் குணமாகும்.
#வேப்பம்பூ தூள் 4 சிட்டிகை அளவு எடுத்து, 2 சிட்டிகை பெருங்காயத்தூளுடன் சேர்த்து வெந்நீரில் கரைத்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை விலகும்.
#வேப்பம் பூவை கொண்டு குல்கந்து தயாரிக்கலாம். இது ஆண்மையை அதிகரிக்கும் சக்தி கொண்டது.
#கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்.
வேப்பம் இலை
வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதி இயற்க்கையாக பூமியை பார்த்தபடி கீழ்நோக்கி இருக்கும், இதனால் ஒளிசேர்க்கையின் பொது வெளியாகும் ஆக்ஸிஜன் சக்தியுள்ள ஒசான்(o3) கலந்துள்ளது என்பதை ஆய்வின் மூலம் அறிவோம். நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு பெருக்கக் கூடியது.வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும். அம்மை நோய் வந்தவர்கள் வேப்பிலையை கீழே போட்டு அதன் மேல் படுத்துக்கொள்வது நல்லது. மேலும் வேப்பிலை அல்லது இளந்தளிருடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அம்மை கொப்புளங்களின் மீது தடவி வந்தால், நோய் விரைவில் குணமாகும்.
#வேப்பிலையை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அரைத்து தலைக்கு தேய்க்க பித்தத்தால் ஏற்படும் மயக்கம் சரியாகும். குமட்டல், வாந்தி, மயக்கம் போன்றவை குணமாகும்.
#வேப்பம் இலையை தண்ணீரில் போட்டு அதனை நன்கு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் பரு, கரும் புள்ளிகள் ஆகிய அனைத்தும் நீங்கும்.
#பித்தவெடிப்பிற்கு வேப்பிலை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வந்தால் பித்தவெடிப்பு மற்றும் கால் பாதம் எரிச்சல் போன்றவை குணமடையும்.
#வெந்நீரில் வேப்ப இலைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் தோல் வியாதிகளிடமிருந்து தப்பிக்கலாம்.
#நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிக்கும்.
#பூமிக்கு இலைச்சத்தினையும் தருகிறது.
வேப்ப காய் & பழம்
#வேப்பங்காய் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
#வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும் சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும்.
#வயிற்றில் பூச்சி இருந்தால் தினமும் வேப்பம்பழத்தை சாப்பிடலாம்.
#வேப்பம் பழம் பறவைகளுக்கு உணவு .
#விதை வேப்ப எண்ணெய் எடுக்க பயன்படுகிறது.மூட்டுவலி, தசைவலி நோயாளிகளுக்கு வேப்ப எண்ணெய் தடவினால் எளிதில் குணமாகும்.
#வேப்பம் புண்ணாக்கு நிலத்திற்கு உரமாகவும் பயன் படுகின்றது.
வேப்பம் குச்சி:
பல் துலக்கும் குச்சி.
ஆலும் வேலும் பல்லுக்குரியது என்று சொல்வதுண்டு. வேப்பக்குச்சியால் தினந்தோறும் பல் துலக்கினால் பற்கள் வலிமை பெறுவதோடு, ஈறுகள் பிரச்சனையும் இருக்காது.
வேம்பு தேனீர் : அஜீரணக்கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் மலச்சிக்களால் அவதி படுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்து கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தற்போதுள்ள 20 மில்லியன் மரங்கள் போதுமா 1 பில்லியன் மக்கள் தொகைக்கு ?
வேப்பமரத்தை வெட்டாதீர்கள். இம்மரம் வீட்டில் இருந்தால் வைத்தியர் தேவை இருக்காது.
குறிப்பு இணையம்:www.neemfoundation.org : www.vikatan.com