ஏற்றம்
ஏணிப்படிகள் — 2
வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்களின் வரவேற்பு என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. புது எழுத்தாளர்களுக்கு இத்தகைய உற்சாகம் மிகப்பெரிய பரிசு மழை.
இந்த பாகத்தில் நாம் வாழ்க்கை ஏற்றங்கள் / வாய்ப்புகள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கப்போகிறோம். நாம் அனைவரும் அன்றாட வாழ்க்கையில் நடைமுறைகளில் வாய்ப்புகளைப் பற்றி பல பல மொழிகளை கேட்டிருப்போம் மற்றும் பல நிகழ்ச்சிகளில், சம்பவங்களில் அனுபவித்திருப்போம். ஒரு நொடியில் வாய்ப்பை தவற விட்டிருப்பார்கள், ஒரு நொடியில் வாழ்க்கை திருப்பமாய் இருக்கும். புள்ளி மதிப்பெண்களில் படிப்பே மாறியிருக்கும்.
வாய்ப்பு ஒரு முறைதான் கதவைத் தட்டும்!
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!
சமீபத்தில் சமூக உடல்நிலை ஊடகங்களில் நகைச்சுவை பதிவை படித்தேன்.
வாய்ப்பு என்பது வடை மாதிரி ,நாம்தான் காக்கா போல போய் தூங்கணும். பீட்சா மாதிரி வீடு தேடி வரும் என்று காத்து இருக்கக் கூடாது .
அவ்வளவு தெளிவா இன்றைய சூழ்நிலை உதாரணத்தோடு.
வாய்ப்பு எப்பவுமே நிழல் மாதிரி நம்ம கூடத்தான் இருக்கும். நாம்தான் அதை சரியாக கண்டுகொள்வதில்லை. தவறவிட்ட பின் வருந்துவது எந்த பயனும் இல்லை.
ஏற்றத்திற்கு முக்கியமான கூறுகள்
1. கல்வியறிவு
2. முயற்சி
3. சுற்றம்
4. வேகம்
கல்வியறிவு: கல்வியறிவு ஏற்றத்திற்கு ஒரு உந்துகோல். அடிப்படை கல்வியை கற்க வேண்டும். அது எந்த துறையானாலும் சரி கல்வியறிவு இல்லாமல் உயரே சென்றாலும் தாக்கிப்பிடிக்க முடியாது. கல்வியறிவு. என்பது பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் பயில்வது மட்டுமல்ல அனுபவத்தினால் அறிந்து கொள்வதும் அடங்கும்.
முயற்சி: முயற்சி திருவினையாக்கும். வாய்ப்புகளை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும், முயலாமல் இலக்கை அடைய முடியாது. ஓடுவதற்கு காலணியும், பாதையும் இருந்தால் மட்டும் போதாது. மனதார ஓடவேண்டும். முயற்சித்து ஓடினால் தான் இலக்கை அடைய முடியும். முயலவில்லை என்றால் அங்கே தான் இருக்க முடியும். வாய்ப்புகள் தவறி அடுத்தவரிடம் செல்லும்.
சுற்றம் : சுற்றம் எனப்படுவது சூழ்நிலைகள், அரசு கொள்கைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள். வாய்ப்புகள் இவர்கள் மூலமும் வரும். உதாரணமாக இந்த சூழ்நிலையில் நஷ்டமடைந்தவர்கள் வேலையிலிருந்து அவர்களைப் பற்றி நிறைய கேட்டுக் கொண்டிருக்கிறோம் எச்சூழலிலும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறிக் கொண்டு இருப்பவர்கள் பலர் உண்டு. உதாரணம் முகமூடி இந்த உற்பத்தி, விற்பனை.
வேகம் : ஏற்றத்திற்கு ஒரு முக்கியமான கூறு ஏனெனில் துரிதமாக செயல்படவில்லை என்றால் ஏற்றத்தை எட்ட முடியாது. வாய்ப்புகளுக்கு பல ஆண்டுகள் காத்திருக்கலாம் ஆனால் வாய்ப்பு கிடைத்தவுடன் வேகமாக செயல்பட வேண்டும் இல்லையெனில் வாய்ப்பை இழக்க நேரிடும். ஏற்றத்தை எட்ட முடியாது.
இந்த கூறுகளை முழுமையாக பயன்படுத்தினால் தான் வாழ்க்கையில் ஏற்றத்தை எட்ட முடியும். இதில் எது பெரிது சிறிது என்ற பாகுபாடு பார்க்கக்கூடாது.
போதிய கல்வி இருந்தும், முயற்சிகள் இருந்தும் சுற்றம் சரி இல்லை, வேகம் இல்லை என்றால் ஏற்றத்தை எட்ட முடியாது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் எந்த சூழ்நிலைகளிலும் யாரையும் , எதையும் ஏளனமாக நினைக்காதீர்கள். அவர்கள் / அவைகள் உங்கள் ஏற்றத்திற்கு உதவ நேரிடலாம்.
நீங்கள் பட்ட கஷ்டங்களை யாரும் பார்ப்பதில்லை, கண்டு கொள்வதும் இல்லை. நீங்கள் அடைந்த வெற்றி இலக்கை மட்டும் தான் இந்த உலகம் பார்க்கும். ஏற்றம் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் செயல்படுங்கள் வெற்றி உங்களுக்கே.