ஒளியும் ஒலியும் — 4
எண்ணற்ற தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கிய தமிழ் வாசகர்களே, எனது எழுத்துக்கு ஆதரவு கரம் நீட்டி, கருத்துக்களையும், உணர்வுகளையும் படித்து ரசித்து ஊக்கம் அளித்த தமிழ் உறவுகளுக்கு நன்றி.
இந்த 4ஆம் பாகத்தில் நாம் சமூக ஊடகங்கள் நம்மை எங்கு கொண்டு செல்கிறது ? வரமா/சாபமா ? என்பதைப் பற்றி இங்கு காண உள்ளோம். இந்த பாகத்துடன் இத்தொகுப்பு நிறைவுடைகிறது.
வாசகர்கள் சிலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒரு சில வார்த்தைகளுக்கு ஆங்கிலம் அர்த்தம் கீழே தரப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களின் இன்றைய தாக்கம் !
நாம் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு சமூக ஊடகத்தில் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா?
சும்மா யோசித்து பாருங்கள் !
2019ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியல், 144 மணி நிமிடங்கள் சராசரி ஒரு மனிதன் சமூக ஊடகங்களில் செலவிடும் நேரம். அதை 72வயது ஆயுட் காலத்தில் கணக்கிட்டால் 6 வருடம் 8 மாதங்கள்.
மேலும் ஆய்வு சமூக ஊடகங்கள் ஒவ்வொன்றின் நேரத்தையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முகநூல் Facebook — 1 வருடம் 7 மாதங்கள்
வலை ஒளி(Youtube) — 1 வருடம் 10 மாதங்கள்
புலனை (Whatsapp) — 1 வருடம் 5 மாதங்கள்
படவரிசை ( Instagram) — 8 மாதங்கள்
இதர — 1 வருடம் 3 மாதங்கள்
இன்றைய நிலையில் 6 வருடம் 8 மாத ஆயுட்காலத்தில் , இன்னும் எதிர்காலத்தில் எங்கு கொண்டு செல்ல போகிறதோ ?
இந்த 6 வருடங்கள் 8 மாதங்கள் / 144 மணி நிமிடங்கள் ஒரு நாளைக்கு, பாதி நேரத்தை குடும்ப உறுப்பினர்களிடம் உரையாடினோம் என்றால் பிரச்சினைகளே இருக்காது. இந்த வருடங்களை உங்களுடைய சம்மளத்துடன் கணக்கிட்டு பாருங்களேன், நீங்க முழுமையாக குறைத்துவிடுவிங்க.
டிக்டாக் செயலி பயன்படுத்துவோர் 80 கோடி மக்கள், அதில் 20 கோடி மக்கள் இந்தியர்கள். நமது மனித வளங்கள் எப்படி வீணாகிறது என்பதை பாருங்கள், கண்டுபிடித்த சீனர்கள் கூட இதை இந்த அளவிற்கு பயன்படுத்தவில்லை . சீன பொருள்களை என்ற எதிர்ப்பும் இதில்தான் பதிவிடுகிறோம். நல்ல விஷயம் இப்பொழுது இதற்கு இந்தியாவில் தடை .
டிக்டாக் பிரபலம் ஒருவர் சமீபத்தில் ஒரு பழைய திரைப்பட பாடலுக்கு நடனமாடி, அது சில நபர்களின் மனதை புண்படுத்த, பிரச்சினை பெரிதாக உருவெடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, பிரபலம் பின்பு மனிப்பு தெரிவித்தும் பிரச்சனை அடங்கவில்லை. இதனால் அவரது குடும்ப வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதாக அவர் தனியார் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் தெரிவித்தார். பாருங்கள் விளையாட்டாக செய்ய பிரச்சினை வெடித்த்து .
இந்த பொது முடக்கத்தில் இணைய சூதாட்ட வட்டம் ( Rummy Circle) சூடு பிடித்தது , பொதுவாக நம்ம மாநிலத்தில் சூதாட்ட சங்ககளுக்கு அனுமதி கிடையாது. இணைய சூதாட்ட வட்டத்திற்கு மட்டும் எப்படி , இதில் 15% சேவை கட்டணம் . இணைய தவறுகள் தப்பில்லையோ ?
வலை ஒளியில் இல்லாத விஷயங்களே இல்லை. வெடிகுண்டு தயாரிப்புதல் முதல் சாராயம் காய்ச்சல் வரை அனைத்தும் இருக்கு . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை பயன் படுத்துகிறார்கள். இதில் நல்ல விஷயங்கள் நிறைய குறிப்பாக சமையல், விவசாயம், படிப்பு இருந்தாலும். சமூக கேடு விளைவிக்கும் செயல்களை பதிவேற்றம் செய்ய அனுமதித்தல் கூடாது .
சமூக ஊடகங்கள் பெண்களுக்கு கண்ணி வெடிகளாக மாறியுள்ளது. முகநூலில் பல போலி ஆசாமிகள், வேறு பெயரில் கணக்கு தொடங்கி இணைய தள வழியாக பழகி, தனிநபர்களின் தகவலை திருடி மற்றும் மிரட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது .
இணைய குற்றங்கள் ( Cyber Crimes) 457% (2011 முதல் 2016 வரை ) அதிரித்துளளது. 2018ஆம் ஆண்டு 27000 வழக்குகள், இந்திய நுகர்வோர்கள் சுமார் 135,000 கோடி இழந்துள்ளனர். இது பதியபட்ட வழக்குகள் மட்டுமே. நிறைய பேர் வழக்குகள் பதியவே இல்லை. அப்ப நீங்களே சுதானித்து கொள்ளுங்கள். இணைய கொள்ளையின் தாக்கம் நமது பொருளாதாரத்தின் மீது எவ்வாறு உள்ளதென.
முன்பெல்லாம் எதிர்ப்பை தெரிவிக்க வீதியில் இறங்கி போராடுவதும், மேடை பந்தல் அமைத்து உண்ணாவிரதம் இருப்பாங்க பிரபலங்கள். தற்போது மெனக்கெடாமல் 2 வரிகளில் தங்கள் எதிர்ப்பை டிவிட் செய்துகொள்கிறார்கள், இதில் சுய விளம்பரங்கள் நிறைய. இவர்கள் புரிந்துள்ளார்கள் எப்படி பயன்படுத்துவது என்று.
எங்கு கொண்டு செல்கிறது ?
பொறுமை இழப்பு
சமூக ஊடகங்கள் கண்டு பிடிக்கப்பட்டது என்னவோ தகவல் தொடர்புகளை துரிதப்படுத்த, தபால் கடிதங்களுக்கு காத்துகிடந்த மனிதர்கள், தொலைபேசி அழைப்புகளுக்கு காத்துகிடந்த மனிதர்கள் இன்று கைப்பேசி , இணையம் வந்த பிறகு புலமை தகவலுக்கு பதில் வரவில்லை என்றால் பொறுமை இழக்கிறார்கள். பொறுமை கடலினும் பெரிது என்பதை நாம் அறிவோம். பொறுமையால் பல காரியங்களை வெல்லலாம் . அவசரத்தினாலும், ஆத்திரத்தினாலும் உறவுகள் கெட்டுவிடும். சமூக ஊடகத்தின் தாக்கம் பொறுமை இழப்புக்கு எடுத்து செல்கிறது.
யாரும் எதிர்பாராத வகையில் ஒரு நாள் உலகம் முழுவதிலும் மின் தடையைப் போல இணையத்தில் நிலவுனால் எப்படி இருக்கும்? அப்பொழுது நம் அனைவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
கற்பனை செய்து பார்த்தால் அது மிக வேடிக்கை மற்றும் விபரீதம் கலந்ததாக இருக்கும்.
அப்படி கற்பனை செய்யின் நம் முன் வரும் கதாபாத்திரங்கள் கோபத்துடன், எரிச்சலுடன் கைப்பேசியை வைத்துக்கொண்டு பித்துப்பிடித்தவர்களாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பாரகள். ஓய்வு எடுத்து இயற்கையை ரசிக்கும் கதாபாத்திரங்கள் தோன்றவில்லை.
சமூக ஊடகங்கள் வரமா / சாபமா ?
தொழில் நுட்பங்கள் கண்டுபிடிப்பது என்னவோ நல்வினைகள் ஆற்றதான் அதில் தீயவினைகளும் புரியலாம் என் கண்டுபிடிப்பதும் நாம் தான். குறிப்பாக தொலைதொடர்புக்கும் , வியாபார முன்னேற்ற தேவைகளுக்கு உருவாக்கப்பட்டது தான் சமூக ஊடகங்கள் ஆனால் இன்று மனித மூளையை ஆட்சி செய்து, பொழுது போக்கு தேவையாக மாறியுள்ளது.
உங்களுக்கு ஆபூர்வ சகோதரர்கள் படத்தில் உள்ள சில பாடல் வரிகள்..
“ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் , மற்றவரை நாம் ஏன் குற்றம் சொல்ல வேனும்.
கொட்டு மழைக்காலம் உப்பு விக்க போனேன் , காத்தடிக்கு நேரம் மாவு விக்க போனேன்.”
இந்த வரிகள் காதலுக்கு மட்டுமல்ல, சமூக ஊடக பயனாளர்களுக்கும் பொருந்தும். தற்போதைய சூழ்நிலையில் நம்மளை நாமதாங்க சரியான பாதையில் போக வைச்சுக்கனும். அரசாங்கத்தையோ, மற்றவர்களையோ எதிர்பார்க்க கூடாது.
பிரச்சினையில் சிக்கிய பின்பு வருந்த கூடாது, வருமுன் காப்பதே சிறந்தது. சமூக ஊடகங்கள் வரம் தான் தொலைதூரத்தில் உள்ளவர்களை அருகில் கொண்டு வருகிறது. அதை சாபமாக மாற்றாமல் இருப்பது நம் கையில் தான் உள்ளது.
சமூக ஊடகங்கள் இல்லாமல் இருக்க இயலாது, அதோடு வாழப் பழகிக்கனும் இல்லைனா உங்களை பழமைவாதி என்றும், தொழில் நுட்ப அறிவில்லாதவர் என பட்டம் சூட்டி விடுவார்கள்.
நான் நிச்சயமாக நம்புகிறேன், எதிர்காலத்தில் பல ஆற்றல் மிக்க கண்டுபிடிப்புகள் சமூக ஊடகங்கள் வரும் , எது வந்தாலும் நடை முறைகளை கடை பிடித்தால் நாம் அதை ஆள முடியும் . இல்லையெனில் அது நம்மை ஆட்சி செய்யும்.
“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
பொருள் : இச்செயலை இதனால் முடிக்க திறன் உடையவன் என்று அறிந்து அதனை அவனிடத்தில் ஒப்படைத்து விடல் .
வள்ளுவனின் வரிகளுக்கேற்ப, இந்த படைப்புகளை இறைவன் நம்மிடத்தில் கொடுத்து இருப்பது, சிறப்பாக பயனாற்றும் திறமை உடையவர்கள் என்று தான். வேறு எந்த உயிரனங்களுக்கும் இந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
சமூக ஊடகங்களின் அடிமைத் தனத்திலிருந்து எப்படி விலக வேண்டும் , தீமைகளை எப்படி கையாள வேண்டும் என்பதை பற்றி முந்தைய தொகுப்புகளில் பதிவிட்டு இருந்தேன்.
சமூக ஊடகங்களை வரமாக பயன்படுத்த சில வழிமுறைகள்
1.இணைய தொந்தரவு செய்யும் நபர்களை பின் தொடராதீர்கள், இணைய நட்பு வட்டாரத்தில் இருந்து நீக்கி விடவும். ( Unfollow / Unfriend)
2. சமூக ஊடகங்களில் தனியுரிமை அமைப்பை சரி பார்க்கவும்.
3. ஆர்வமற்ற மற்றும் வதந்திகள் பரப்பும் குழுக்களை விட்டு வெளியே வரவும்.
4.சங்கடமான புகைப்படங்களை குறி நீக்கவும்.
5.அபத்தமான புரளிகளை நம்பாதீர்கள்.
6.கைப்பேசி மற்றும் சமூக ஊடக சலனத்திலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
7.உணவு அருந்தும் நேரம் மற்றும் படுக்கை அறையில் கைப்பேசிகளை பயன்படுத்தாதீர்கள் .
8.நேரத்தை வீணாக்கும் செயலிகளை நீக்கவும்.
9.நினைவில் கொள்ளுங்கள் சமூக ஊடகங்கள் உண்மை இல்லை. இந்த நடைமுறைகளை பயன் படுத்தினால் சமூக ஊடகங்கள் உங்கள் வசப்படும். நீங்கள் அதனோடு புன்னகையுடன் பயனிக்கலாம்.
நன்றி !!!
வணக்கம் !!!
குறிப்பு : மீண்டும் உங்களை குரங்கு மனம் என்ற புதிய தொடரின் வாயிலாக விரைவில் சந்திக்க உள்ளேன்.