ஒளியும் ஒலியும் ( Light and Sound) — பாகம் 1
ஒளியும் ஒலியும் என்ற இந்த தலைப்பைப் பார்த்தவுடன் நம் நினைவிற்கு வருவது 1980 மற்றும் 1990 களில் தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியில் வெள்ளி இரவு சுமார் 7.30 முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சிகள் நினைவிற்கு வரும் . அந்த காலங்களில் அனைவரும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்காக காத்திருந்து கண்டு மகிழ்ந்தார்கள் , என்ன ஒரு ஆனந்தம் கேட்டுப்பாருங்கள் உங்கள் பெற்றோர்களை , இதைப்பற்றி வாரம் முழுவதும் பேசி மகிழ்ந்து கொண்டுருந்தார்கள். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி.
“ஒளியும் ,ஒலியும் கரண்ட் போனா டேக்ட் ஈசி பாலிசி” என்ற பாடல் வரி காதலன் படத்தில் நினைவூட்டும் அந்த நேரத்தில் மின் துண்டிப்பான பயங்கரமான கோபம் ஆயிடுவார்கள். அந்த அளவுக்கு மக்கள் அந்த நிகழ்ச்சியை நேசித்தார்கள்.
தொலைக்காட்சி இல்லாதவர்கள் கூட அக்கம் பக்கம் வீடுகளில் பார்ப்பார்கள் .
அலைவரிசை தொலைகாட்சிகள் வந்தபிறகு தூர்தர்ஷன் தொலைகாட்சியினால் போட்டிகளை சமாளிக்க முடியவில்லை , தனியார் அலைவரிசை தொலைகாட்சி நிறுவனங்கள் பல புது அலங்கார மாற்றங்களுடன் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியை ‘ Pepsi உங்கள் சாய்ஸ் ‘ என்று வந்தது . படிப்படியான வளர்ச்சியினால் இன்று பல இசை அலைவரிசைகள் இதற்கு ஆரம்பம் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிதான் .
இன்று நம்மை சுற்றி அன்றாடம் , ஒளியும் ஒலியும் நிகழ்வுகள் , நிகழ்வுகளை நாம் தொலைகாட்சி , கையொளி , கைப்பேசியில் கண்டு கொண்டு இருக்கிறோம். இதன் பரிணாமம் இன்று முற்றிலும் மாறுபட்டவை அதில் பல கருத்துக்கள் நிலவுகிறது .
இப்ப நேரடியாக தலைப்புக்கு போவோம் ,இன்றைய சூழலில் ஒளியும் ஒலியும் நம் வாழ்வில் எத்தகைய அழுத்தத்தை கொடுக்கிறது ?
எப்படி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பல மாற்றங்களை கண்டு இன்று பல அலைவரிசைகளாக மாறியுள்ளனவோ அதைப்போலத்தான் நம் வாழ்வில் இன்று ஒளியும் ஒலியும் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது உதாரணமாக முகநூல் ,புலனை , இன்னும் பல சமூக ஊடகங்கள் நம்முடைய மனித தொடர்புகளை ஒளியும் ஒலியுமாய் அதிவிரைவில் பரிமாரிக் கொள்ள உதவிகிறது . என்ன ஒரு அசுர வளர்ச்சி !! அருமை !!
இதற்கு நாம் அடிமைகளா ?
நன்மைகளா / தீமைகளா ?
நம்மை எங்கு கொண்டு செல்லப்போகிறது ?
என பல கேள்விகள் நம் முன்னே …
இனி வருகின்ற பாகங்களில் உங்களை சந்திக்க / சிந்திக்க …
சங்கர் சுந்தரலிங்கம்