கதை கேளு!!!

Sankar sundaralingam
2 min readNov 7, 2020

--

முயற்சித்துப் பார்!!!

காட்டு ராஜா சிங்கத்திடம் குட்டி சிங்கம் தந்தையே! நீர் இப்பெரிய காட்டையே ஆளுகிறாய். அனைத்து பெரிய, சிறிய மிருகங்கள் உனக்கு மரியாதை செய்கிறது. உன்னை நேருக்கு நேர் எதிர்க்கப் பயப்படுகிறது. உமக்குப் பிறகு என் காட்டை ஆள முடியுமா என பயமாக இருக்கிறது? எனக்கு இவ்வளவு பலம் இருக்குமோ என்று தெரியவில்லை.

உனக்கு எங்கிருந்து இவ்வளவு துணிச்சல், தைரியம், தன்னம்பிக்கை வந்தது. உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு ஏதாவது மந்திரம், தந்திரம் கற்றுத் தந்தார்களா ? அல்லது நீங்கள் கடவுளுடன் ஏதாவது தனி வரம் பெற்று விட்டீர்களா?

அப்படி ஏதாவது இருந்தால் எனக்கும் சொல்வீர்களா?

அதற்கு சிரித்துக்கொண்டே ராஜா சிங்கம், குட்டி சிங்கத்திடம் உருவத்துக்கு தான் முக்கியத்துவம் என்றால் யானை தான் காட்டுக்கு ராஜா ஆகியிருக்க முடியும். மந்திரம், தந்திரம் எதுவும் இல்லை. கடவுள் நமக்காக எந்தத் தனி வரத்தையும் தரவில்லை. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுள் கொடுத்த வரம் ஒன்றே ஒன்றுதான். அது என்ன என்பதை நான் பின்பு கூறுகிறேன். நம்மால் ஏன்முடிந்தது என நீ தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்மையும் பல தருணங்களில் நிறைய புலி, சிறுத்தை போன்ற மிருகங்கள் தாக்கி தங்கள் பலத்தை நிரூபிக்க முயன்றுள்ளது. அத்தருணங்களில் ஏன் நமக்கு இந்த கடினமான சூழ்நிலைகள் என புலம்பாமல், துணிந்து முயற்சித்து போராடினோம். போராட்டத்தினால் தான் நாம் வெல்ல முடிந்தது.

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை,

முயற்சி நின்றாலும் மரணம் தான்!!

கடைசி மூச்சு உள்ளவரை முயன்று போராட வேண்டும். அப்படி போராடித்தான் நாம் ராஜாவாக வாழ்கிறோம். தந்திரங்கள், துரோகங்கள், எதிரிகள், போராட்டங்கள் என அனைத்துமே வாழ்க்கையில் முயற்சித்து தான் வெல்ல வேண்டும். தானாக எதுவும் அமையாது அப்படி அமைந்தாலும் அது வெகு நாட்கள் நிலைக்காது. அதனால் முடியாது என எதையும் விட்டு விடாதே, முயற்சித்து பார் முட்கள் கூட உன்னை வரவேற்கும் முத்தமாய். நிச்சயம் உன்னால் முடியும். கடவுள் கொடுத்த அந்த ஒரே வரம் முயற்சி. இதை முழுமையாக கேட்ட குட்டி சிங்கம் என்னால் முடிந்த வரை நான் முயற்சி செய்கிறேன் அப்பா என்று கூறியது. அதற்கு ராஜசிங்கம் உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்த காரியம் முடியும் வரை முயற்சி செய் செய்ய வேண்டும் என கூறியது. உடனே குட்டி சிங்கம் கண்டிப்பாக நினைத்தது முடியும் வரை முயற்சி செய்கிறேன் எனக்கூறி புது தீரத்துடன், தன்னம்பிக்கையுடன் சிரித்துக்கொண்டே வேட்டைக்கு கிளம்பியது.

கதை கருத்து:

வருடங்கள் வருவதால் வாழ்க்கை மாறாது, விடாமுயற்சி இருந்தால் மட்டுமே வாழ்க்கை மாறும். முயன்று பாருங்கள் முயலாமல் காலத்தின் மீதும், கிரகங்கள் மீதும், அடுத்தவர்களின் மீதும் பழி போடுவது உகந்ததல்ல.

முயற்சிகள் தவறலாம், ஆனால் முயற்சிக்க தவறாதே!!

முயற்சி செய்ய பல வழிகள் உள்ளன!!

தட்டிக்கழிக்க பல காரணங்கள் உள்ளன!!

முயற்சி செய்ய தயங்காதே

முயலும் போது உன்னை முட்களும் முத்தமிடும்.

என் முயற்சிகள் என்னைப்

பலமுறை கை விட்டதுண்டு.

ஆனால்,

நான் ஒருமுறை கூட

முயற்சியை கைவிடவில்லை

-எடிசன்

--

--

No responses yet