கதை கேளு — அதிசயம்

Sankar sundaralingam
2 min readAug 28, 2021

--

ராமன் , சோமன் என்ற இரண்டு சிறுவயது நண்பர்கள், பல வருடங்கள் கழித்து சந்திக்கின்றனர். அந்த சந்திப்பில் ராமனைப் பார்த்து சோமன் எப்படி இருக்கிறாய் நண்பா? பல காலங்கள் ஆகிவிட்டது. உனது வாழ்க்கை எப்படி செல்கிறது? நான் கட்டாயமாக நம்புகிறேன், நீ நன்றாக இருப்பாய் என்று.

அதற்கு ராமன், அட போடா என்னத்த சொல்ல? நான் சின்ன வயசுல இருந்தே இப்படியே கஷ்டப்பட்டு கிட்டே இருக்கேன். எனக்கெல்லாம் உன்னைப்போல அதிசயம் இல்லை, கிடைக்கவே மாட்டேங்குது. எவ்வளவு ஓடினாலும் ஒட்டவே மாட்டேங்குது. நீ சொல்லு சோமா எப்படி இருக்க? நான் சந்தோசமா இருக்கேன் டா, மனநிறைவா இருக்கேன், வாழ்க்கையை நல்லபடியா கொண்டு போயிட்டு இருக்கேன்.

ராமன் : நான் சொன்னேன் இல்ல உனக்கு அதிசயம் இருக்குது.

இப்ப என்ன தொழில் நடத்திக் கொண்டிருக்க? வீடு, தோட்டம் ?

ராமா! நான் ( சோமன்) இப்ப விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன், என்கிட்ட சொந்தமா எந்த இடமும் கிடையாது, குத்தகைக்கு எடுத்து பண்ணிக்கிட்டிருக்கேன். வாடகை வீடு, பசங்க அரசாங்க பள்ளியில் நல்லா படிக்கிறாங்க.

ராமன் : என்னடா, கஷ்டப்பட்டு இருக்குன்னு சொல்ற?

சோமன் : நான் அப்படி சொல்லலை .

ராமன் : இதுக்கு பெயர் என்ன? அதுக்கு நான் பரவா இல்லை. நான் வீடு கட்டி இருக்கேன், பசங்கள நல்ல ஸ்கூல்ல படிக்க வச்சிட்டு இருக்க, துணிக்கடை நடத்திக்கிட்டு இருக்கேன் . இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு பணம் வரவு இல்லை .உன்னை பார்த்தால் நீ சந்தோசமா இருக்க , நிறைய பணம் , சொத்து வைத்திருப்பேன் நினைச்சு பெரிய அதிர்ஷ்டசாலின்னு சொன்னேன் சோமா. உனக்கு அதிசயம் நடக்குதுனு நினைச்சேன் .

சோமன்: நான் இப்பவும் அதிர்ஷ்டசாலிதான் , எனக்கு நிறைய அதிசயம் நடக்குது மற்றும் தெரியுது .

ராமன் : எப்படி டா ?

சோமன் : அதிசயம் உருவாக்கப்பட வேண்டும் , தானாக அமையாது . உலக அதிசயங்கள் உருவாக்கப்பட்டது தான் , உதாரணம் தாஜ்மஹால். நம்மை சுற்றி பல அதிசயங்கள் அன்றாட வாழ்க்கையில் நடக்கிறது, நாம் இந்த எந்திர வாழ்க்கையில் அதனை புறக்கணித்து விடுகிறோம். உன் குழந்தைகள் அதிசயம், நீ அதிசயம் , உன்னை போன்று வேறு எவரும் இருக்க முடியாது.

மொழிகள் அனைத்தும் அதிசயம், குறிப்பாக தமிழ் மொழியும் ஒரு அதிசயம். இயற்கை அதிசயம், இப்படி அதிசயத்தை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இன்னும் பல அதிசயங்கள் நம்மால் உருவாக்கவும் படலாம்.

விஞ்ஞானம் அறியாத அதிசயம் நமது சொந்தம், பாசம், உறவுகள், உணர்வுகள். எது கிடைத்தாலும் அதிசயம் என்ற மனநிலை இருக்க வேண்டும். அதிசயம் நிகழ்கிறது நல்ல நினைவுகளால்.

சோமா !! நீ சொல்வதுதான் சரி தான், நடைமுறைக்கு ஒத்துவருமா. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியவில்லை, இந்த கொரானா பெருந்தொற்று காலத்தில் தொழில்களில் மிகப்பெரிய சரிவுகள், வாங்கிய இடத்தில் பணங்களை திருப்பித் தர முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்று குழப்பம்.

ராமா!! என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று யோசித்துக் கொண்டிருப்பதை விட, முயற்சி என்னும் அதிசயத்தை முயற்சித்துப் பார். கிடைத்தால் வெற்றி, இல்லாவிட்டால் அனுபவம். இந்த இரண்டுமே நமக்கு தேவை தானே.

ராமன் : நன்றாக கூறினாய் . முயற்சித்து பார்க்க வேண்டும் . முயற்சியும் ஒரு அதிசயம் தான். உன்னை பார்த்ததில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் , நல்ல தெளிவு , பணம் , வசதி அதிசயம் கிடையாது . பல அதிசயங்கள் நம் முன்னே , அதை விட்டு விட்டு பணம் , பொருள் என அலைகிறோம். அதிசயங்களை சரியாக உபயோகித்தால் நல்லதே கிடைக்கும் .

கதை கருத்து:

வாழ்க்கையை அதிசயங்கள் எப்போது வேண்டுமானாலும் உருவாக்கலாம் ஆனால் உங்களுக்கான அதிசயம் உங்கள் முயற்சியால் உருவாகும் உங்கள் வாழ்க்கையை செதுக்கும் சிற்பி நீங்கள்தான். அதிசய சிற்பி!!!

உன் மனநிலை தான் உன் அதிசயத்தை நிர்ணயிக்கிறது. மனித மூளை பெரிய அதிசயம் . அதை நல்ல செயல்களுக்கு பயன்படுத்துங்கள்.

இல்லாதவனுக்கு எது கிடைத்தாலும் அதிசயம். இருப்பவனுக்கு எது கிடைத்தாலும் அலட்சியம். அலட்சியம் வேண்டாம் இந்த அதிசய வாழ்க்கையில்.

வாழ்க்கை ஓர் அதிசயம். தொடரட்டும் உந்தன் அதிசய பயணம்……..

--

--

No responses yet