கதை கேளு — அன்பு

Sankar sundaralingam
3 min readDec 25, 2021

--

அன்பு விலை மதிக்க முடியாதது. இன்றோ பணம் இருப்பவர்களிடம் அதிகம் பாசம் காட்டும் மனிதர்கள் , பணத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். உண்மையான அன்பை மறந்து விடுகிறார்கள். பொருளாதாரம் என்பது நமது வாழ்வில் ஒரு பகுதியே அன்றி பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. பல நிகழ்ச்சிகளில் பார்கிறோம் பணம் உள்ளவர்களுக்கு ஒரு மரியாதை, பணம் இல்லாதவர்களுக்கு ஒரு மரியாதை. பணம் பேசுகிறது.

வள்ளுவரின் அன்புடைமை அதிகாரத்தின் சில குறள்கள் இங்கே கதை தொடங்கும் முன்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

விளக்கம்: உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

விளக்கம் : அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.

சற்று சிந்தியுங்கள்… கதைக்கு போகலாம்….

மருத்துவமனையில் உள்ள கோவில் முன் நாய் (ஜிம்மி) கண்ணீர் துளியுடன் கடவுளை வேண்டி வணங்கி கொண்டு இருந்தது, தீவிர சிகச்சை பிரிவில் இருக்கும் தனது எஜமான் ( குமார்) நன்றாகி குணம் பெற வேண்டும் என்று. குமாரின் உறவினர் குழந்தை ( சுமார் 6 வயது) , தனது தந்தையுடன் குமார் மாமாவை பார்க்க வந்தான். குமாரின் உறவினர்கள் அவருக்கான சிகிச்சை பலனளிக்குமோ, இல்லையோ தெரியவில்லை. யார் குமாருக்காக பணம் செலவு செய்வது என்று வாதிட்டு கொண்டிருந்தனர் .

அப்பொழுது அவன் குமார் மாமாவின் நாய் கோயில் முன் இருப்பதை கண்டு அங்கு சென்றான்.

குழந்தை சிறுவன் ஜிம்மியுடன் சென்று ஏன் அழுகிறாய்? உடல்நிலை சரியில்லையா ?

ஜிம்மி: உங்களுக்கு தெரியாத? எஜமான் அடிபட்டு தீவிர சிகச்சை பிரிவில் உள்ளார். அவரை நினைத்து தான் என் அழுகை.

குழந்தை சிறுவன்: அவர் மேல் உனக்கு இவ்வளவு பாசமா ? என்னால் நம்பவே முடியவில்லை . 5 அறிவு படைத்த விலங்குகளால் அன்பை வெளிப்படுத்த முடியமா ? எங்கள் உறவினர்களோ சண்டை போட்டு கொண்டு இருக்கிறனர். யார் செலவு செய்வது என்று ?

ஜிம்மி: அன்பை வெளிப்படுத்த ஆறறிவு தேவையில்லை. உண்மையான அன்பு மனதில் இருந்தால் போதும். அன்பு அழகான, இனிப்பான சொற்களில் இல்லை, நாம் செய்யும் செயல்களில் இருக்கிறது . அன்பான வார்த்தைகள் மருந்தாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்த்தவும் செய்கிறது. நான் நம்பிக்கையுடன் உள்ளேன் எஜமான் நல்லபடியாக பிழைத்து வருவார்.

பாருங்கள் மனிதர்களிடம் பணம் தான் அன்பை தீர்மானிக்கிறது.

குழந்தை சிறுவன் அப்படின்னா அன்பை எங்கு காணமுடியும்? அருங்காட்சியத்திலா?

ஜிம்மி: அன்பு இன்ப ஊற்று, அவற்றை அனைத்து உயிரினத்திலும் பார்க்கலாம் ஆனால் அன்பை ஆயுதமாக்கி அடிமைப்படுத்த நினைக்காதீர்கள். அன்பு ஒன்றே நிலையானது , அதற்க்கு வண்ணம் , ஜாதி , மதம் கிடையாது.

ஆனந்த வாழ்க்கை வாழ மாளிகைகள், ஆடம்பரம் தேவையில்லை. அன்பானவர்கள் அருகில் இருந்தால் போதும்.

குழந்தை சிறுவன்: சரி , ஏன் அன்புகள் உதாசீனப்படுத்த படுகிறது? அன்பு செலுத்தி விட்டு, அதே அன்பை எதிர்பார்ப்பது சரியா,தவறா..???

ஜிம்மி: அன்பை எதிர்பார்ப்பது என்பது எதார்த்தம், ஆனால் அதே நேரத்தில் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தான் தரும். சில தருணங்களில் அளவிற்க்கு அதிகமான அன்பு முதலில் பிரமிக்கப்பட்டு , பின் ரசிக்கப்பட்டு, தொல்லையாகி சலிக்கப்பட்டு , இறுதியில் உதாசீனப்படுத்த படுகிறது. எதிர்பார்ப்பு வேண்டாம், பிறகு அதுவே வெறுப்பை உண்டாக்கும். உதாசீன படுத்தியவர்கள் புரிந்து வரும் பொழுது நீ வெகு தூரம் பயணித்திருப்பாய். உண்மையான அன்பை அலட்சியப் படுத்துபவர்கள், கண்டிப்பாக ஒருநாள் அந்த அன்பிற்க்காக ஏங்குவார்கள்

மன்னித்தலும், விட்டுக்கொடுத்தலுமே உண்மையான அன்பு , அன்பு அகிலம் உன்னை நேசிக்கும். அன்பு இல்லையென்றால் இந்த அகிலம் இல்லை. அன்பு பலம், அதை பலவீனமாகாமல் பார்த்து கொள்ள வேண்டியது உனது கடமை.

குழந்தை சிறுவன்: ஆறறிவு படைத்த மனிதனுக்கு அனைத்தும் தெரியும் என்ற என் அகந்தையை உடைத்து விட்டாய் ஜிம்மி . பொன், பொருள் என்ற மாயை இருள் விலகி , எங்கும் அன்பு ஒளி பரவட்டும். மாமா நன்றாக குணமாகி வர நானும் உன்னுடன் சேர்ந்து கடவுளை வணங்குகிறேன்.

மருத்துவமனை மருத்துவரிடம் இருந்து செய்தி குமார் கண் விழித்து விட்டார் . ஜிம்மியின் உண்மையான அன்பும் , நம்பிக்கையும் வீண் போகவில்லை.

கதை கருத்து :

அன்பு தானே எல்லாம், அன்பு செய். அனைவரையும் நேசியுங்கள் . யாரையும் வெறுக்காதீர்கள். வாழ்வது ஒருமுறைதான். அந்த வாழ்க்கையை அழகாக, அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள். அன்பு ஒன்றே வாழ்வை அழகாக மாற்றும்.

இனம் அறியா,

மொழி அறியா,

மதம் அறியா,

எதிர்பார்ப்பின்றி கிடைப்பது அன்பு!

அந்த அன்பை பகிர்வோம் அனைவருக்கும் பாகுபாடின்றி !

மனதில் அன்பு இருந்தால் கடினமான இதயம் கூட கரையும் அன்பு மழையால். அன்பிற்கு மாற்றும் சக்தி உண்டு.அன்பு காட்டினால் ஆரோக்கியம் வளரும்!!

--

--

No responses yet