கதை கேளு —ஆசிரியரா/ பாடமா?

Sankar sundaralingam
2 min readOct 10, 2020

--

ஆசிரியரா/ பாடமா?

காட்டு ராஜாவான சிங்கத்திடம், யானை நரியின் மீது புகார் கொடுத்திருந்தது. ராஜா சிங்கம் அதை விசாரிப்பதற்காக காட்டில் உள்ள அனைத்து விலங்குகளையும் அழைத்திருந்தது. விசாரணை தொடங்கியது.

யானை: ராஜா நான் மிகப் பெரிய பலசாலி, அனைவரிடமும் நன்றாக பழகுவேன். என்னிடம் ஒளிவு மறைவு கிடையாது. நான் உருவத்தில் பெரியவன், ஆனால் குணத்தில் நல்லவன். எனக்கு இதுவரை நம் காட்டில் உள்ள புலி, கரடி, மாடுகள் என அனைத்தும் எனக்கு உண்மையாக உதவியுள்ளன. அவர்களை நான் என்றும் மதிக்கிறேன், பாதுகாக்கிறேன்.

சில நாட்களுக்கு முன் நான் நரியிடம் எனக்கு ஒரு உதவி கேட்டேன். நான் செய்கிறேன் என்று நரி ஒப்புக்கொண்டது.

ராஜா: அப்படி என்ன உதவி கேட்டீர்கள்?

யானை: நான் காட்டைவிட்டு உணவு தேட வெளியே செல்லலாம் என யோசித்து, நரியிடம் வழியில் யாரேனும் யானை குழிகளை தோண்டி உள்ளனரா என பார்த்து கூறும்படி கூறினேன்.

ராஜா: நரி ஒப்புக்கொண்டதா?

யானை :ஆம், ஒப்புக்கொண்டது.ஆனால் குழி தோண்டியவர்களிடம் உணவை வாங்கிக் கொண்டு தந்திரமாக என்னிடம் வந்து குழிகள் எதுவும் இல்லை. தான் காடு முழுவதும் சோதனை செய்ததாக கூறியது. அதன் பேச்சை நம்பி நான் உணவு தேட புறப்பட்டுப் போன போது குழியில் மாட்டிக் கொண்டேன். குழியில் அப்போது நரி அங்கே வந்தது, நானும் என்னை காப்பாற்று என்று நினைத்தேன். ஆனால் இல்லை, நரி, நான் சரியாக குழியில் விழுந்தனா அல்லது இல்லையா? என பார்த்து வேட்டைக்காரரிடம் தகவல் சொல்வதற்காக வந்தது. நான் நரியிடம் கேட்டேன் ஏன் இவ்வாறு செய்தாய் என? அது தன் பக்கம் உள்ள நிறைகளை கூறி நியாயப்படுத்த முற்படுகிறது. அதனால் நான் குழியில் அடைபட்டுக் கொண்டேன் என சிறு அச்சுறுத்தலும் இல்லை, சுயநலத்துடன் அங்கிருந்து சென்று வேட்டைக்காரரிடம் தகவல் கொடுத்தது.

இதைக் கேட்ட வேட்டைக்காரன், நரியைப் பிடித்து கூண்டில் அடைத்து பொருட்காட்சிக்கு அனுப்ப உத்தரவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத நரி, என்ன வேட்டைக்காரரே எனக்கு துரோகம் செய்கிறீர்களா?

வேட்டைக்காரன் நரியைப் பார்த்து, நீ யானைக்கு என்ன செய்தாயோ அதுவே உனக்கு எனக் கூறினான்.

அந்த வழியாக வந்த மாடுகள், என்னை குழியில் இருந்து காப்பாற்றினர். பின் நான் அந்த மாடுகளுக்கு நன்றி தெரிவித்து. அந்த வேட்டைக்காரன் இடத்திற்கு சென்று, வேட்டைக்காரனை தாக்கி நரியை விடுவித்தேன். இதுதான் நடந்தது ராஜா. நரியிடம் எனது அனுபவம் இது மட்டுமல்ல இதற்கு முன்பு இந்த மாதிரி தந்திர வேலைகளை செய்து உள்ளது. நீங்கள் தான் அதற்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்.

ராஜா சிங்கம் : நரியைப் பார்த்து நடந்தவை அனைத்தும் உண்மையா என கேட்க, நரி ஆம் என கூறி தலையை கீழே குனிந்தது.

இறுதியாக ராஜா சிங்கம் யானையை பார்த்து, நீ நரியிடம் ஏற்கனவே பாடம் கற்று விட்டாய், மீண்டும் அதன் உதவி நாடுவது உந்தன் தவறு, எவருடைய குணத்தையும் மாற்ற இயலாது. நரி தவறு செய்தும், நீ அதை காப்பாற்றினாய், இது உந்தன் குணம், பெருந்தன்மை. மாடுகள் மாதிரி நண்பர்களிடம் உதவி கூறுங்கள், நரி மாதிரியான நண்பர்களிடம் மீண்டும் மீண்டும் பாடம் கற்காதீர்கள் தாங்க மாட்டீர்கள்.

நரி யாருக்கும் உதவி செய்யவில்லை என்றாலும் சரி உபத்திரம் கொடுக்காதே, உன்னால் உன் வார்த்தையை காப்பாற்ற முடியவில்லை என்றால் அதை செய்யாதே.

கதை கருத்து: நாம் வாழ்க்கையில் பலரை சந்திக்கிறோம் ,

சந்திக்கும் பலரில்,

ஆசிரியராக சிலர்

பாடமாக சிலர்.

ஆசிரியராக சிலர் என்பவர்கள் தக்க காலத்தில் உதவிகள் அல்லது நல்ல யோசனைகளை வழங்குகிறவர்கள்.

பாடமாக சிலர் என்பவர்கள் நாம் எதிர்பாராத விளைவுகளை, துரோகங்களை நமக்கு வழங்குபவர் அதில் நாம் கற்றுக்கொள்ளும் பாடம், பாடமாக அமையும். அவர்களை ஒரு தரம் படித்தால் போதும் மீண்டும், மீண்டும் பாடமாக வேண்டாம்.

நமக்கு ஆசிரியர் தான் தேவை. புரிந்து செயல்படுங்கள். தந்திர சொற்களை நம்பி ஏமாறாதீர்கள்.

--

--

Responses (1)