கதை கேளு — ஆரோக்கியம்
ஊரடங்கு காலம் துரித உணவகங்கள் செயல்படவில்லை, கணினி நிறுவன பணியாளர் சாப்பிடுவதற்கு ரொம்ப சிரமப் பட்டார், அப்பொழுது அவரது கண்களுக்கு இட்லி கடை தென்பட்டது, பாட்டி இட்லி விற்றுக் கொண்டிருந்தார், அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது, ஆனந்தமாக அருகில் சென்றார். இட்லி கடையில் கூலி தொழிலாளிகள் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அதை பார்த்த உடன் அவருக்கு அங்கு சாப்பிட மனம் வரவில்லை இருந்தாலும் வேறு வழியில்லாமல் வீட்டிற்க்கு வாங்கி சென்று சாப்பிடலாம் என முடிவெடுத்து பாட்டியிடம் 5 இட்லி, கோழி குழம்பு கட்ட சொன்னார். கட்டிய பொட்டலங்களை கொடுத்த பாட்டி 4 இட்லி ரூபாய் 200, கோழி கரி குழம்பு 200 மற்றும் சேவை வரி 10% என கூறி ரூபாய் 440 கேட்டார் .
கணினி பணியாளருக்கு ஒரே வியப்பு, பாட்டியை மேலும் கீழும் பார்த்துபடி இட்லி ஒன்னு 50 ரூபாயா ? அநியாய விலையாக இருக்கே பாட்டி?
நமக்கே விலை அதிகமா தெரியுதுன்னா, இவர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள் இந்த விலைக்கு ? மெல்லமாக அருகில் இருந்தவரிடம் கேட்டார் ஒரு இட்லி 50 ரூபாயா ?
அங்கு உணவருந்தியவர்கள் , எங்களுக்கு ஒரு இட்லி 2 ரூபாய் என்றனர். பின்பு அவன் பாட்டியிடம் முறையிட்டான். அநியாய விலை, எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு விலை.
ஆரோக்கிய உணவுக்கு விலை அதிகமாக தெரிகிறதா! நான் உன்னை பல தடவை அருகிலுள்ள துரித உணவகங்களில் பார்த்திருக்கிறேன். துரித உணவு உடம்பை கெடுக்கிறது, அதற்க்கு வரிசையில் நின்று அதிக விலை கொடுக்கும் பொழுது தெரியவில்லையா? நம்மளுது நாட்டு கோழி கறி , மத்த கறி மாதிரி கிடையாது. நீ எப்பயாவுது துரித உணவகங்களில் பேரம் பேசியதுண்டா ?
ஆரோக்கிய உணவிற்க்கு அதிக விலை கொடுத்து வாங்க மனசு வரலை , நாகரீகம் என்ற பெயரில் விஷத்தை கொடுத்தாலும் கேள்வி கேட்காம பணம் கொடுக்கிறிங்க . என்ன ஆளுங்கப்பா நீங்க.
அதற்க்கு கணினி பணியாளர் பாட்டிகிட்ட சொன்னார் , என்ன பண்ணுவது இருக்கிற இடத்துக்கு தகுந்தாற் போல மாறிக்கிடணும், இல்லைனா நம்மள குழுவில் சேர்த்துக்க மாட்டாங்க , பட்டிக்காட்டணு சொல்லிடுவானுங்க பாட்டி.
அட போயா ! இப்படி அடுத்துவங்களுக்காக வாழ்ந்து நம்மை வாழ்க்கை ஆரோக்கியத்தை இழக்கிறோம் . ஆரோக்கியம் என்பது உண்மையான நட்பு , இழந்த பின் தான் அதன் அருமை தெரியும். ஆரோக்கியத்தை இளமையில் தக்க வைத்து கொள்ள வேண்டும். ஆரோக்கியம் சீர்கெட்டால் , ஆவலுடன் வெளியேற துடிக்கும் ஆன்மா.
உடல் நலம் மற்றும் மனநலம் ஒரு சேரப் பெற்றிருந்தால் அது ஆரோக்கியம். நல்ல உடல் நலம் இருந்ததால் தான் மன நலம் இருக்கும் . நல்ல உடல் நலத்திற்க்கு நல்ல உணவுகளை உண்ண வேண்டும். துரித உணவுகளை தவிருங்கள் .
இன்று ஆரோக்கியம் என்பது சாப்பிட்ட பின் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது என்றாகிவிட்டது. செயற்க்கை மாத்திரைகள் விளைவு புற்றுநோய் . அன்றோ வெத்தலை பாக்கு ஜீரணத்துக்கு, எந்த பின் விளைவுகளும் இல்லை . இயற்கையே ஆரோக்கியம்.
நீ பணம் ஏதும் தர வேண்டாம் தம்பி , இனிமேலாவது நல்ல உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு உன் உடம்பை ஆரோக்கியமா வைத்திரு, கொஞ்சம் பருமனை குறை.
கதை கருத்து:
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் — பழமொழி
மனிதனின் சந்தோஷத்தின் அஸ்திவாரம் ஆரோக்கியம். நல்ல ஆரோக்கியம் தானாக கிடைக்காது, நல்ல உணவு முறையை பின்பற்றி உண்ண வேண்டும் .
இன்று நாம் ஆரோக்கியத்தை தொலைத்துவிட்டு தேடுகிறோம், தொலை தூரம் கடந்து பின்! ஆரோக்கியத்தின் தொடக்கம் உணவு பழக்கம். பாரம்பரியத்தை மறந்து துரித உணவு (பீட்சா, பர்கர், வறுத்த கோழி), பேக் செய்யப்பட்ட உணவு என ஏராளமான வகைகள் கூடவே உடல் பருமன். அப்பறம் அப்படி ஆரோக்கியம் இருக்கும் ?
தொடக்கம் சரியாக இருந்தால்தான் முடிவு சரியாக இருக்கும்.
துரித உணவுக்கு அடிமை ஆகாமல் இருக்க வேண்டும்
ஆரோக்கியம் அதிகரித்து, நோய் தவிர்க்க.