கதை கேளு — ஆர்வம்
ஆர்வக்கோளாறு, முந்திரி கொட்டை என ஆர்வம் உள்ளவர்களை நாம் திட்டுவது வழக்கம், திட்டுவது மட்டுமல்லாமல் அவர்களை கேலி செய்து விரக்தி அடையச்செய்வது. இந்தக் கதையை கேட்டபின் இனி அப்படியாரையும் திட்டாதீர்கள், அவர்களை ஊக்க படுத்துங்கள். இப்படி பட்டவர்களால் தான் அறிவியல் புதுமைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்று மனிதற்களுக்கு பயன்படக்கூடிய விஷயங்கள். அவர்கள் இல்லையேல் மின்சாரம் இல்லை, தொலைபேசி இல்லை, விமானம் இல்லை. சற்று நினைத்துப் பாருங்கள் இவைகள் இல்லாமல் இருந்தால் நம் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்குமா?
கதைக்கு போகலாம்…..
நாட்டில் மக்களுக்கு கேள்வி கேட்கும் அதிகாரம் கிடையாது, அது சர்வாதிகாரி நாடு. ஆர்வ மிகுதியால் யாராவது அரசருக்கு யோசனை கூறினால் அவருக்கு பிடிக்காது , அவர்களை நாடு கடத்திவிடுவார் . அப்படி கடத்தப்பட்டவர்கள் ஒரு காட்டில் விட்டு விடுவார் .
அதனால் அவருக்கு பயந்து, யாரும் யோசனைகள் கூறவும், ஏன் என கேள்வி கேட்க மாட்டார்கள், மக்களின் ஆர்வமும் நாட்டின் மீது குறைந்து விட்டது.
அந்த நாட்டில் மழை வெள்ளம் எப்பொழுதும் ஆர்பரித்துக்கொண்டு இருக்கும். சர்வாதிகாரியால் மழை வெள்ளத்தை கட்டுப்படுத்தி (சரியான ஏரி, குளங்கள் அமைக்கவில்லை) மக்களை காக்க இயலவில்லை . ஒவ்வொவரு வருடமும் பலர் இறந்து போனார்கள்.
ஒரு வருடம் மழை முன்பை விட அதிகமாக இருந்தது, சர்வாதிகாரியின் கோட்டையும் மழை வெள்ளம் தாக்கியது, இயற்க்கைக்கு பாகுபாடு கிடையாதல்லவா? மழை வெள்ளத்தில் சர்வாதிகாரி அடித்துச் செல்லப்பட்டார். அப்படி அடித்து செல்லப்பட்டவர், மரக்கட்டையை பிடித்து கொண்டு உயிர் தப்பி காட்டில் தஞ்சம் அடைந்தார்.
தஞ்சமடைந்த சர்வாதிகாரி நாடு கடத்தப்பட்ட தனது மக்கள் சிலரை சந்திக்கிறார். அவருக்கு ஒரே ஆச்சரியம், இவர்கள் எப்படி எத்தனை நாட்கள் காட்டில் உயிரோடு வாழ்ந்தார்கள்! விவசாயம் வேற எந்த காட்டில் செய்கிறார்கள். அவரை காட்டில் உள்ள தங்களது நவீன நகரத்திற்கு அழைத்து செல்கிறார்கள். அவரை பார்த்து அங்கிருந்தவர்கள் பயப்பிடாமல் ஒரே புகழாரம், உங்களால் தான் நாங்கள் இவ்வளவு சாதனைகள் சாதிக்க முடிந்தது .
என்ன சாதனைகளா? என்னப்பா சொல்றீங்க? உங்க வாழ்க்கை நிலையே உயர்ந்து இருக்கு .
நான் என்னவோ நீங்க ஆர்வ கோளாறு காரணமா கேள்வி கேட்கிறிங்கனு காட்டிற்க்கு அனுப்பினா, நீங்க என்னடான இங்க நவீன நகரத்தை உருவாக்கிருக்கிங்க.
ஆர்வம் , ஏன் என்கிற கேள்விக்கு இவ்வளவு சக்தியா ?
ஆம்! ஆர்வம் என்பது அறிந்து கொள்ளுதல். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னதை நினைவில் கொள்வோம் என்னிடம் தனித்திறமை ஏதுவுமில்லை, என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே. ஆர்வம் என்பது இயற்கையுடன் இணைந்த நீக்க முடியாத, வளர்ந்து வரக்கூடிய குணாதிசயமாகும்.
அங்கிருந்த மக்கள், நீங்கள் எப்பவுமே பிறரது யோசனையை கேட்க மாட்டீர்கள். அப்படி ஆர்வ மிகத்தியால் யோசனை கூறினாலோ அல்லது பேசினாலோ அவர்கள் உங்களை மதிக்க வில்லை என்று கருதி நாடு கடத்திவிடுவீர்கள்.
ஆனால் நாங்கள் எங்கள் ஆர்வத்தை கைவிடவே இல்லை. காடாக இருப்பினும், அவற்றின் சிறந்த நகரமாக மாற்றினோம். இங்கு எங்களுக்கு அனைத்து வசதிகளும் உள்ளது.
சபாஷ் ! எனது பாராட்டுகள். முடியாது, திறமையில்லை என்று சொன்னவன் முன்னே , முடியும் என்று ஆர்வமாகப் பயிற்சிகள் செய்து , வெற்றி சாத்தியமே என்று நிரூபித்துள்ளீர்கள் !
நான் சற்று செவி கொடுத்து கேட்டிருந்தால், நம் நாடு வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுருக்கும்.
கவலை வேண்டாம் , நாங்கள் இருக்கிறோம். எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அதை ஆர்வத்தோடு அணுக வேண்டும் . அப்படி அணுகினால் எப்படி பட்ட பிரச்சனைகளாக இருந்தாலும் தீர்க்க முடியும்.
கதை கருத்து :
கதை தொடக்கத்திலே சொன்னேன் ஆர்வம் உள்ளவர்களை ஊக்கப்படுத்துங்கள், ஒதுக்காதீர்கள். ஆர்வத்தின் உளவியல் உண்மை அறிவோம். ஆர்வம் இருக்கட்டும் ஆனால் அவசரம் வேண்டாம். கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே முன்னேற்றத்திற்கு முதல் படி.
“கண்கள் தேடுது உனை,
உதடுகள் பாடுது உன் வரவை,
கைகள் உயர்த்தி இசைக்க,
கால்கள் தரையில் துடிக்க,
மனம் எதிர்பாக்கும் பட்டாம்பூச்சி!
ஆர்வமாய் வா என் ஆர்வமே !”
நீங்கள் அனைவரும் வெற்றியாளாக விரும்புகிறீர்களா?
ஆமாம் அல்லவா? அப்படியென்றால் ஆர்வம் தேவை வெற்றியடைய. வாருங்கள் அச்சம் அகற்றி ஆர்வம் பெருக்குவோம்.
ஆர்வம் நம் ஆணிவேர்! மறந்திடாதீர் .