கதை கேளு-இயற்கை

Sankar sundaralingam
2 min readJun 4, 2021

--

புயல் காரணமாக இரண்டு நாட்களாக பலத்த மழை, ஊரே வெள்ளக் காடாய் அடித்துச் சென்றது. வெள்ளத்தில் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆல மரத்தடியில் ஒதுங்கி, அதன் வேர்களின் மூலம் தாங்கிப் பிடித்து உயிர் தப்பினான். அன்று பொழுது விடிந்தது, வெள்ள நீர் சற்று தணிந்தது, சிறுவன் ஊருக்குள் சென்று பார்த்தான். வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன, மரண ஓலங்கள் அவனால் அதை தாங்க முடியவில்லை. மீண்டும் ஆல மரத்திடம் வந்தான்.

ஆலமரத்தை பார்த்து ஏன் என்னை மட்டும் காப்பாற்றினாய்? என் நண்பர்கள், உறவினர்கள் இறந்துவிட்டார்கள் பலர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. ஏன் இயற்கை எங்களை இப்படி புரட்டிப் போடுகிறது என அழுது புலம்பினான்.

அவன் அழுகையை கேட்ட ஆலமரம். அவனிடம் சிறுவனே! நீங்கள் உங்கள் ஆடம்பர மற்றும் செயற்கை வாழ்க்கை வாழ இயற்கையை அழித்தீர்கள். நீங்கள், இயற்கை உங்களுக்கு கிடைத்த வரம் என்று அறியாமல், அதை அழிக்கிறீர்கள். இயற்கையை அழிக்க, அழிக்க அழியப் போவது இயற்கை அல்ல மனித இனம் தான்.

சிறுவன்: நாங்கள் வாழ்வதற்காக மரங்களை வெட்டி வீடு கட்டுகிறோம். காடுகளை அழித்து நகரங்களை உருவாக்குகிறோம். உபோயோகமற்ற ஏரி , குளங்களை சமன் செய்து மக்கள் வாழ வழி செய்கிறோம். இல்லையென்றால் நாங்கள் எப்படி,எங்கு வாழ்வது? இது என்ன பழிவாங்கும் செய்யலா?

ஆலமரம்: அப்படி எதுவும் கிடையாது. நான் கூறுவதை சற்று உண்ணிப்பாக கேளு, உனக்கு புரிந்துவிடும்.

நாங்கள் (மரங்கள்) உங்களுக்கு என்ன செய்கிறோம் தெரியுமா? மரம் விடும் மூச்சு காற்றில்தான் மனிதன் வாழ்கிறான். மரத்தை வெட்டுவது உங்களை நீங்களே வெட்டி கொள்வதற்கு சமம்.

அரச மரம் : அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும்.

ஆலமரம் ,புளிய மரம் : புயல் வேகத்தை தடுக்கும்.

வேப்பமரம் :விஷத்தை முறியடிக்கும்.

தென்னை மரம் : மண்ணரிப்பைத் தடுக்கும்.

பனைமரம் : நிலத்தடி நீரை பாதுகாக்கும்.

இப்படி பட்ட மரங்களை வெட்டி உங்கள் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தினால், எப்படி பேரிடர்களில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும்.

அரச மரத்தை வெட்டினீர்கள் இன்று ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மனித உயிர்களை இழக்கின்றீர்கள். தென்னை மரத்தை பாதுகாக்காததால் மண்சரிவு பல இடங்களில். ஆலமரமும், புளிய மரமும் இல்லாததால் வெள்ளம், புயலில் அடித்துச் செல்லப்படுகிறீர்கள். வேப்பமரத்தை வெட்டினீர்கள் இன்று ஊருக்குள் பல கொடிய நோய்கள்.

ஒரு மரம் என்பதை விட பல பறவைகளின் வீடு என்பதை நினைவில் கொள் .

நாங்கள் உங்களிடம் என்ன கேட்கிறோம்? எங்களை வாழ வையுங்கள், உங்களை வாழ வைக்கிறோம் என்று தானே.

½ அடி தோண்டி செடி நட்டு இருந்தால், இன்று 1000 அடி தோண்டி ஆழ்துளை கிணறுகளை போடும் நிலைமை ஏற்பட்டிருக்காது. பல நிலநடுக்கங்களையும் தடுத்திருக்கலாம்.

சிறுவன்: ஆழ்துளை கிணறுக்கும், நிலநடுக்கத்திற்கும் என்ன சம்பந்தம்?

ஆலமரம்: இயற்கையை நீ அழிக்க முயன்றால் , அது முடியாது. அதற்கு மீண்டுவர சக்தி இருக்கிறது. அப்படித்தான் நீங்கள் போடும் ஆழ்துளை கிணறுகளால் பூமியில் அடியில் மாற்றம் நிகழ்ந்து நிலநடுக்கமாகிறது, வறட்சி ஏற்படுகிறது. காலப்போக்கில் பூமி தன்னை சரி செய்து கொள்கிறது. ஆறு குளம் வழித்தடங்களை ஆக்கிரமித்து வீடு கட்டினால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும், வழித்தடங்களைமீண்டும் ஏற்படுத்திக் கொள்கிறது . இப்படி இயற்கை தன்னை மீண்டு வர ஆய்தம் ஆக்கிக் கொள்ளும்.

இயற்கை உணவுகளை மறந்து செயற்கை உணவுகளுக்கு சென்றீர்கள். உங்களின் ஆரோக்கியம் காணாமல் போனது, ஆயுட்காலம் குறைந்தது.

சிறுவன்: எனக்கு புரிந்தது. இயற்கையோடு சேர்ந்து வாழாமல் மனிதன் அடைந்தது பெரும் இழப்பு, பலரது பேராசைகளும் உடைந்தது. எவரேனும் இனி இயற்கையோடு வாழ்பவர்களை காட்டுவாசிகள் என்றோ, காட்டில் வாழ்பவர்களை கிராமத்தான் என்றோ கேலி செய்தாள் தைரியமாகச் சொல்லுவேன். நாங்கள் இயற்கையோடும், ஆரோக்கியத்தோடும் வாழ்கிறோம் என்று பெருமிதத்துடன்.

கதை கருத்து:

இயற்கை ஒரு அற்புதம். அர்த்தமுள்ள இயற்கை மனித வாழ்வுக்கு தேவையானவற்றை வழங்குகிறது.

இயற்கையின் நிகழ்வுகள் இன்பம், செயற்கை செயல்கள் வேதனை. இந்த உலகில் நிரந்தரமானவர்கள் எவரும் கிடையாது, இயற்கையும், இயற்கை நிகழ்வுகள் மட்டும்தான் நிரந்தரம் என்பதை மறவாதே.

விடியல் உங்களுக்கு எவராலும் தர இயலாது. உங்களுக்கான விடியலை உங்களால் மட்டும் தான் பெற இயலும், இயற்கை எனும் அற்புதத்தால்.

இயற்கை அன்னையை நேசிப்போம், பாதுகாப்போம். நமது வளத்தை நாமே பெருக்கிக் கொள்வோம்.

அனைவருக்கும் உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்!!!

--

--

Responses (1)