கதை கேளு — உழைத்த காசு தான் ஒட்டும் , கொள்ளையடித்த காசு தேளாகவந்து கொட்டும்
அடர்ந்த காடு, காட்டில் அனைத்து வகையான விலங்கினங்களும் வாழ்ந்து வந்தன. காட்டின் நடுவே அழகிய நதி. இந்த காட்டில் உள்ள புலிகள் வேட்டையாடி உண்பதில் மிகவும் கை தேர்ந்தவை. இப்படி இவை திறமையாக வேட்டையாடி கொண்டு வருபவகளை அந்த காட்டில் உள்ள நரிகள் தந்திரமாக ராஜா சிங்கத்திற்க்கு பகிர வேண்டும் என்று கூறி மாமிசங்களை வாங்கி, நரிகள் தங்களுக்கு பதுக்கி வைத்துக் கொள்ளும். இப்படி பல தடவை நரிகள் கேட்கும் பொழுது புலிகள் காட்டு ராஜாவுக்கு பகிர்ந்து கொடுக்கிறது, ஆனால் நரிகள் ஒரு தடவை கூட சிங்கத்திடம் கொடுப்பதில்லை.
நரிகள் இதற்கு மாறாக சிங்கத்திடம் சென்று ராஜா ராஜா நம் காட்டில் உள்ள விலங்குகளை புலிகள் மட்டுமே வேட்டையாடுகின்றன, எங்களை வேட்டையாட அனுமதிப்பதே இல்லை. இதனால் நாங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறோம், பசியால் வயிறு வாடுகிறது. புலம்பலை கேட்ட ராஜா சிங்கம் தான் வேட்டையாடிய உணவுகளை தந்து கூறியது எனது ராஜாங்கத்தில் யாரும் பட்டினியாக இருக்க கூடாது, புலிகளை கண்டிக்க வேண்டும். ராஜா சிங்கத்திடம் உணவுகளை வாங்கி நரிகள் ஒழித்து வைத்து கொண்டது. மேலும் ராஜா சிங்கத்திடம் கூறியது நாங்கள் புலிகளிடம் தகவலை தெரிவிக்கின்றோம் என்று. காலங்கள் கடந்தன நரிகள் தங்கள் தந்திரத்தை தொடர்ந்து நடத்தி வந்தன.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் மான்களை வேட்டையாடும் போது புலிகளுக்கும், சிங்கத்திற்கும் இடையே சண்டை. அப்போது புலிகள் சிங்கத்திடம் கூறியது, நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள். நாங்கள் வேட்டையாடி உங்களுக்கு உண்டானதை பகிர்ந்து அளிக்கிறோம். அப்போது அங்கிருந்த ராஜா சிங்கம், என்ன? நீ வேட்டையாடி எங்களுக்கு பகிர்ந்தளிக்கிறாயா? நீங்கள் வேட்டையாடி, நீங்கள் மட்டும் உண்ண வேண்டும் என்று நினைக்கிறீர்கள், மற்றவர்களுக்கு வாய்ப்பே தருவதில்லை. இது முற்றிலும் தவறு, நான் பலமுறை நரிகள் மூலமாக உங்களுக்கு எனது கண்டிப்பை தெரிவித்தேன். ஆனால் அதை பொருட்படுத்தாமல் உமது தவறை தொடர்ந்து செய்கிறீர்கள்.
புலிகள்: காட்டு ராஜா நீ கூறுவது முற்றிலும் தவறு , உன்னிடம் உண்மைகள் மறைக்கப்பட்டன , சற்று இங்கு மறைந்திருக்கவும் நரிகள் வரும், நீரே பாரும் என்ன நடக்கிறது என்று .
வேட்டை சத்தத்தைக் கேட்ட நரிகள் , அங்கு வந்தது சரி ராஜ சிங்கத்தரிக்கான பங்குகளை கொடுங்கள் என்று கேட்டது. புலிகள் தருகிறோம் , நாங்கள் தருவதெல்லாம் ராஜா போய் சேருகிறதா? ராஜா என்ன சொல்கிறார்?
நரிகள் : ராஜா மிகவும் சந்தோஷம், நீங்கள் மிகவும் நல்லவர்கள் என்று அடிக்கடி எங்களிடம் கூறுவார் என்று கூறியது.
உடனே மறைந்திருந்த சிங்கம் வெளியே வந்து, நரிகளை பார்த்து கதைத்தது. சிங்கத்தின் கோபத்தை பார்த்து அங்கிருந்து தப்பி ஓடியது.
இரவு பலத்த மழை, நரிகள் பதுங்கி வைத்திருந்த உணவுகள் மழையினால் வந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த மாமிசத்தை பின்தொடர்ந்து நரிகள் ஓடியது. ஆற்றிலிருந்த முதலைகளிடம் அந்த மாமிசத்தை பிடித்து தருமாறு கூறியது. அதற்கு முதலைகல் தரையில் உன்பாதுகாப்பில் இருக்கும் போது அது உன்னுடையது, ஆற்றில் வந்தவுடன் அது பொது முடிந்தால் நீயும் புடி என்று கூறி, அந்த மாமிசத்தை தின்றது. சேர்த்து வைத்திருந்த உணவுகளை இழந்து, காட்டு ராஜாவிடம் சென்றது . சென்று முதலைகள் மீது சரமாரியாக புகார் கொடுத்தது. அதற்கு ராஜா “நீ அடுத்தவர்களுக்கு எதைக் கொடுக்கிறோயோ, அதையே வட்டியும், முதலுமாக ஆண்டன் உனக்கு தருகிறான். அது அன்பாக இருந்தாலும் சரி, துரோகமாக இருந்தாலும் சரி.”
சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் நம்பியவர்களை ஏமாற்றாதே. கஷ்டத்திலும் நேர்மையாக இரு. நீ ஏமாற்றப் பட்டாலும் பிறரை ஏமாற்றாதே. உனது நற் கர்மா தான் உன்னை காப்பாற்றும்.
ஓசியில் கிடைக்கிற சொத்துக்களை விட, உழைப்பினால் கிடைக்கிற ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம். உழைத்த காசு தான் ஒட்டும் , இப்படி கொள்ளையடித்து , ஏமாற்றி சேர்த்தால் முதலை வடிவில் தேளாக வந்து கொட்டும்.
நரிகள், ராஜா எங்களை மன்னித்து விடுங்கள். இனிமேல் நாங்கள் இவ்வாறு செய்யமாட்டோம் என்று கூறி விடை பெற்றது.
கதை கருத்து :
உன்னை நம்பியவரை ஏமாற்றாதே — குர்ரான்
உனக்கு உதவி செய்தவரை வாழ்க்கையில் மறக்காதே — பகவத் கீதை
உன்னை நேசித்தவரை வெறுக்காதே — பைபிள்
இப்படி இந்த மூன்று மதங்களும் நமக்கு கற்றுத் தரும் பாடம், சொல்லித் தரும் விஷயம் “நேர்மை, உழைப்பு.”
உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே! என்று அன்றே தனது படத்தில் பாடினார் மக்கள் திலகம். பிறரை மிதித்து வாழ்ந்திடாதே,மதித்து வாழ். ஏமாற்றி சம்பாதிக்காதே.
உயிர் இருக்கும் வரை உழைத்து வாழ் , உன் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் !!