கதை கேளு — கடன்
அப்பா, மகன் இருவரும் ஒரு நாள் உரையாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் குடும்பம் மிகவும் ஏழை. மகன் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு, அடுத்து என்ன செய்யவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறான். அவனது தந்தை, அவனை அழைத்து நீ என்ன செய்யலாம் என நினைக்கிறாய் என கேட்க. அவன் நான் தகவல் தொழில் நுட்பங்கள் சார்ந்த வேலையை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு நமது குடும்பத்தை கொண்டு செல்லலாம் என கூறுகிறான்.
அவனது தந்தை அடுத்த பத்து வருடங்களில் நீ எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அதற்கான வேலையை இப்போதே ஆரம்பித்து செய், காத்திருக்காதே என்கிறார். உடனே மகன் சொல்கிறான், நான் வீடு, தோட்டம், கார் என ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும். இதற்காக நான் அனைத்தும் செய்வேன்.
தந்தை எப்படி நம்மால் 10 வருடங்களில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் ?
மகன் , அப்பா எனக்கு நல்ல வேலை கிடைத்தால் ஒரு சில வருடங்களில் வங்கியில் கடன் தருவார்கள் அதை சுலபமாக 5 முதல் 20 வருடங்கள் மாத தவணையில் கட்டி விடலாம் .
20 வருடங்கள் ? உன் வாழ்நாளில் பாதி போய்விடும் . 20 வயதில் வேலை?
அதாவது …
17 வயதில் கல்வி கடன்
25 வயதில் கல்யாணக் கடன்
30 வயதில் வீட்டு கடன்
50 வயதில் மகன்/மகள் கல்வி (அ) திருமண கடன்
இப்படியே முடிந்து விடும் வாழ்க்கை கடன்.
அப்பா வேற எப்படி வாழ்க்கையில் உயர முடியம் ?
கடன் வாங்கி அடையும் பலன் உயர்வு கிடையாது. சம்பாதித்து செலவு செய்த காலம் போகி, இப்போது முதல்ல கடன்வாங்கி செலவு செய்துவிட்டு அதை அடைக்க வாழ்க்கை முழுவதும் சம்பாதிக்க வேண்டும்.
இதற்குப் பெயர் உயர்வு கிடையாது, கடனாளி. வாழ்க்கை முழுவதும் கடனாளியாக இருக்கிறதுக்கு, இருக்கிற வாழ்க்கையில இருக்கிற மாதிரி வாழ்வது நிம்மதி.
அப்போ உங்களுக்கு முன்னேற ஆசை இல்லையா? அதனாலதான் நம்ம குடும்பம் இன்னும் ஏழ்மையில் இருக்கிறோமா? இப்படி நீங்க என்னையும் கடன் வாங்க விட மாட்டேங்கறீங்க? அப்ப நாம என்னதான் பண்றது?
மகனே!! கடனாளியா பணக்காரனாய் இருக்கிறதை விட, கடன் இல்லாமல் ஏழையாக இருக்கிறது தான் உண்மையான பணக்காரன். நிம்மதியா தூக்கம் வரும். யாருக்கும் பயந்து ஓட வேண்டியதில்லை.
அப்ப கடன் வாங்குறது தப்புன்னா, எதற்கு அரசாங்கம் வங்கிகள் என தொடங்கி கடன் கொடுக்குது?
மகனே!! அத்தியாவசிய தேவைக்காக கடன் வாங்கு, கிடைக்கிறதே என்பதற்காக கடன் வாங்காதே . ஆசைக்காக கடனை வாங்கிவிட்டு பிறகு, ஒவ்வொரு மாதமும் பல ஆசைகளை தியாகம் செய்வதற்கு பெயர் தான் கடன்.
சரியாக பார் கடந்த இருபது வருடங்களில் நமது நாட்டில் குடும்ப நிதி நிலைமை சீர் அழிவதற்கு முக்கிய காரணங்கள்.
1. விடுமுறைகளில் வெளிநாடு / வெளியூர் செல்வது சமூக அழுத்தம் காரணமாக.
2.சமூக அந்தஸ்துக்காக கார் வாங்குதல்
3.குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஸ்மார்ட் போன் வாங்குதல்
4.வீட்டு உணவை தவிர்த்து, வெளியில் உணவு உட்கொள்ளுதல்
5. துணி, சலூன் கடைகளுக்கு கூட பிராண்ட் உணர்வு
6.பிறந்த நாள், கல்யாண நாள் விருந்துகள்
7. பிரம்மாண்டமான திருமணம் மற்றும் குடும்ப விழாக்கள்
இந்த தேவைகளுக்கு எல்லாம் வங்கிகளில் கடன் வாங்குவது, இல்ல கிரெடிட் கார்டு உபயோகம் பண்ணி செலவு செய்வது. பின்னால அதை கட்ட அந்த வருடம் முழுவதும் கடன கட்டுவது .
அப்பா!! தெளிவாக புரிந்தது. கடனே இல்லாதவன் பணக்காரன்.
கதை கருத்து:
கடன், பகை, நோய் இந்த மூன்றும் இல்லாமல் குடிசையில் வாழ்ந்தாலும், அவனே கோடீஸ்வரன். யாரிடமும் கடன் கேட்கக்கூடாது. கொடுத்தாலும், வாங்கினாலும் பிரச்சினைதான். கொடுத்தால் உறவு கெடும், வாங்கினால் மரியாதை கெடும். வரவிற்கு ஏற்ற செலவு செய்து, கடன் இல்லாமல் வாழ்வது நல்லது .
உண்மையான பணக்காரர்கள்……
கடனே இல்லாதவன் பணக்காரன்!!
நோயே இல்லாதவன் லட்சாதிபதி!!
கோபமே இல்லாதவன் கோடீஸ்வரன்!!
இன்றைய கடன்கள் அன்பை மட்டும் முறிப்பதல்ல, வாழ்க்கையே முறித்து விடுகிறது. வாழ்க்கை வாழ்வது மிக எளிது, அடுத்தவர்கள் போல் வாழ்வது தான் கடினம். அதனால் உங்கள் வழியில் வாழ்க்கையை நடத்துங்கள் கடன் இல்லாமல்.