கதை கேளு — கலங்காதே

Sankar sundaralingam
2 min readDec 18, 2021

--

பேருந்திற்க்காக இளைஞன் ஒருவர் காத்துக்கொண்டு, அருகில் இருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்தான். முதலில் ஒரு பேருந்து வந்தது. தேநீர் கடைக்காரர் தம்பி நீங்க சொன்ன ஊருக்கு இந்த பேருந்து போகும் , நீங்க இதில ஏறிக்கலாம் என்றார். அதற்க்கு அந்த இளைஞன் இந்த பேருந்து கொஞ்சம் அழுக்கா இருக்கு, இதில நான் ஏற மாட்டேன். கடைக்காரருக்கு ஒரே வியப்பு . தம்பி துபாய்ல இருந்து வந்திருப்பாரா?

கொஞ்ச நேரம் கழித்து அடுத்த பேருந்து வந்தது , முன்பை காட்டிலும் நல்ல பேருந்து , குளிர் சாதன வசிதியுள்ள பேருந்து. கடைக்காரர் கண்ணசைத்து காட்டினார். இளைஞன் பேருந்தை சுற்றி பார்த்து அதன் பதிவு எண் எனக்கு ராசி இல்லை என்றான்.

என்னடா எவன் ஏறுகிற வண்டிக்கு எல்லாம் ஜோசியம் பார்க்கிறான் , நமக்கு வேலைக்கு ஆகாது . நாம் நம்ம வேலைய பார்ப்போம் என்று தேநீர் போடுவதில் கவனம் செலுத்தினார்.

மூன்றாவது வண்டி வந்தது, அதில் வயதான முதியர்கள் நிறைய பேர் இருந்தனர். அந்த வாலிபன் இந்த பேருந்திலும் ஏறவில்லை. பொழுது சாய்ந்தது பேருந்து அதற்க்கடுத்து வரவே இல்லை. சற்று தயங்கி, கலங்கி தேநீர் கடைக்காரரை அணுகினான் . அடுத்த பேருந்து எப்போ என்று, கடைக்காரர் சொன்னார் நாளை காலை தான் என்று. அவன் முகம் வாடியது , கண்கள் கலங்கி கண்ணீர் வந்தது .

தம்பி கலங்காதே, என்னாயிற்று ஏன் கலங்குறாய்? நீதானே பேருந்து அழுக்கா இருக்கு , பதிவு எண் சரியில்லை , முதியவர்கள் இருங்காங்கனு.

ஆமாம் அண்ணே, நான் இதை விட்டா நல்ல பேருந்துகள் வருமென்று, மற்ற பேருந்துகளை தெரியாமல் தவற விட்டேன் , நான் நேர்காணலுக்கு சென்றிருக்க வேண்டும். இவ்வளவு நேரம் காத்திருந்து நேர்காணலை கோட்டை விட்டுட்டேன் .

தேநீர் கடைக்கு பக்கத்தில் இருந்த மளிகை கடைக்காரர் , இந்த வயசு பயலுகளுக்கு திமிரு அதிகம், பொறுப்பே கிடையாது . இரு உன் அப்பா கிட்ட கூப்பிட்டு சொல்றேன் என்றார் .

மளிகை கடைக்காரரே அமைதியாய் இரும் , ஒன்னும் செய்ய வேண்டாம்.

தம்பி! சரி பரவாயில்லை , கலங்காதே .

வாய்ப்பு வரும் பொழுதே அதை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் , வேற நல்ல வாய்ப்பு வரும் என்று இருப்பதை கோட்டை விட கூடாது .

உண்மை அண்ணேன், இப்ப என் எதிர்காலமே போய்விட்டது. மிகவும் கலங்கி நின்றான்.

தம்பி , தண்ணீர் கலங்கினால் என்னவாகும் ?

சற்று நேரம் கழித்து தெளிந்து விடும் , அது போல தான் வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்தால் சிறிது நாட்களில் மறைந்து விடும்.

சாதனை செய்வாய் கலங்காதே , எதற்காகவும் , எங்கேயும் கலங்காதே, மன தைரியதுடன் இரு. உலகமே உன்னுள் உறங்குகிறது , உன் நாள் வரும், உன்னால் மட்டுமே முடியும் . அடுத்த வாய்ப்பை தவற விடாதே.

குழப்பத்தில் இருக்கும் பொழுது , சற்று அமைதியாக இரு. அமைதியாக இருந்தால் தெளிவு பிறக்கும். தெரிந்தே தவறு செய்திருந்தாலும் புலம்பி பலனில்லை, இனி நடக்காமல் பார்க்க வேண்டும்.

நம்பிக்கையோடு உழை , வாழ்க்கை வசப்படும் .

நீ வேண்டுமானால் என் கடையை வாங்கி கொள்கிறாயா ? நான் வெளியூர் செல்கிறேன் என் மகனுக்கு வெளியூரில் வேலை கிடைத்து விட்டது , அவன் என்னை அவனுடன் வர சொல்கிறான். சரி அண்ணே , நான் தங்கள் வியாபாரத்தை தொடர்கிறேன், மாதம் தோறும் உங்கள் தவணையை கொடுத்து விடுகிறேன் .

கதை கருத்து :

மகிழ்ச்சியாக இரு, மனம் வருந்தாதே !

காயப்படுத்துபவர்களுக்கிடையே, காயம் ஆற்றும் அன்பானவர்களும் உண்டு.

“வலிக்கின்றதா சொற்கள்,

பிரிகின்றதா உறவுகள்,

காயப்படுத்துகின்றதா செயல்கள்,

இழக்கின்றதா சொத்துக்கள்,

கலங்காதே இப்போதுதான் நீ செதுக்கப்படுகிறாய வைரமாக.”

--

--

No responses yet