கதை கேளு — கோபம்
மகன் மிக அதிகமான கோபக்காரன். அவனது தந்தை அவனுக்கு பல சிகிச்சைகள் அளித்தும் கோபம் குறையவில்லை. போகாத இடம் இல்லை, பார்க்காத மருத்துவர் இல்லை. ஒருநாள் யோகா பயிற்சியாளரை சந்திக்க நேர்ந்தது, அவரிடம் தனது மகனின் கோபங்களை விளக்கிக் கூறினார். யோகா பயிற்சியாளர் உங்கள் மகனை இங்கு ஒரு வாரம் விட்டுச் செல்லுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறினார். இதை ஒப்புக் கொண்ட தந்தை மகனை ஒரு வாரம் இங்கே தங்கும்படி கூறிவிட்டு சென்றார்.
மகனுக்கு விருப்பமில்லை, மீண்டும் கோபம் தலைக்கேறியது. அன்று இரவு தங்கினான், மறுநாள் காலை கோபத்திலிருந்தவனிடம் யோகா பயிற்சியாளர் ஒரு பலகையை தந்தார். அதில் ஒருபுறம் முற்றிலும் மறைக்கப்பட்டு இருந்தது. மற்றும் சுத்தியல் பல ஆணிகளையும் தந்தார் அடுத்த மூன்று நாட்களில் கோபம் வரும்போதெல்லாம் இந்த பலகை மீது ஆணி அடிக்குமாறு கூறினார்.
முதல் 12 மணி நேரத்தில் 30 ஆணிகளை அடித்தான், அடுத்த 12 மணி நேரத்தில் 20 ஆணிகளை அடித்தான். இரண்டாவது நாள் முதல் 12 மணி நேரம் 10 ஆணிகள், இரண்டாவது 12 மணி நேரங்கள் 5 ஆணிகள், மூன்றாவது நாள் காலையில் 10 ஆணிகள் என குறைந்தது. சுத்தியலை மற்றும் மீதமுள்ள ஆணிககளை யோகா பயிற்சியாளர் இடம் ஒப்படைத்து, எனக்கு கோபம் வராது, சுத்தியல் தேவைப்படாது என ஒப்படைத்தான்.
யோகா பயிற்சியாளர் ஆணிகளை பெற்றுக்கொண்டு, இளைஞரிடம் சுத்தியலை கொடுத்து கோபம் இல்லாத நேரத்தில் ஆணியை பிடுங்கிவிடு எனக் கூறினார். கூறிய அடுத்த 12 மணி நேரத்தில் அனைத்து அணிகளையும் பிடிங்கி விட்டான்.
இதை கவனித்த யோகா பயிற்சியாளர் அந்த இளைஞரிடம் சென்று உனக்கு இப்பொழுது கோபம் இல்லை. ஆணிகளை அனைத்தும் பிடுங்கி விட்டாய். இந்த பலகையை பார் இதில் எத்தனை ஓட்டைகள், மறைக்கப்பட்ட பலகையின் பின்பகுதியை காண்பித்தார். அதில் “அன்பு” என எழுதப்பட்டிருந்தது, ஆணி அடித்ததில் ஏகப்பட்ட தாக்கங்கள், ஓட்டைகள். இதை காண்பித்து கோபம் பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? இப்பொழுது ஆணிகளை பிடுங்கி விட்டாச்சு அதில் உள்ள ஓட்டைகளை எப்படி அழிப்பாய்?
கோபத்தின் தாக்கத்தை அறிந்து விட்டே,ன் இனி நான் கோபப்பட மாட்டேன் என யோகா பயிற்சியாளரிடம் உறுதியளித்தான்.
கதை கருத்து
நம்மை யார் தோற்கடிப்பது என்று பார்த்தால், வேறு யாராகவும் இருக்க முடியாது. நம் கோபம் தான் நம்மை தோற்கடித்து இருக்கும். கோபம் வந்தால் அறிவை மங்கச் செய்யும், அதன் விளைவுகள் உறவுகளை இழக்க செய்யும்.
எல்லா சூழ்நிலைகளிலும் பொருந்தக்கூடிய அமைதியை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த சூழ்நிலையிலும் பொருந்தாத கோபத்தை தூர விலகி வையுங்கள்.
கோபம் வேண்டாம், கோபம் எனும் இருட்டில் விழுந்து விடாதீர்கள்.