கதை கேளு- சாத்தியம்

Sankar sundaralingam
2 min readJun 19, 2021

--

ஒரு செல்வந்தர் வாழ்ந்து கொண்டு இருந்தார், அவருக்கு 3 மகன்கள். ஒரு நாள் செல்வந்தர் நோய்வாய் பட்டு இறந்தார். அவர் சிகைச்சைகாக சொத்தை விற்று செலவழித்தனர். பின்னர் குடும்பத்தை காப்பாற்ற 3 மகன்கள் வேலைக்கு செல்ல வேண்டிய நிபந்தனை.

வீட்டின் தலைமகன் வேலைக்கு செல்வதெல்லாம் மிக கடினம் . செல்வந்தர்களாய் வாழ்த்த நமக்கு யாரும் வேலை தரமாட்டார்கள். அப்படியே தந்தாலும் கூலி வேலை தான் தருவார்கள், நாம் படித்த படிப்பிற்க்கு. அதனால் வீணாக அலைந்து நேரத்தை தொலைக்காமல் அப்பா வைத்துள்ள மிச்ச சொத்துகளை வித்து நாம் இருக்கும் காலம் வரை வாழ்த்து கொள்ளலாம்.

இரண்டாவது மகன் இருக்கும் சொத்துக்களையெல்லாம் விற்றால், எத்தனை நாள் அதை வைத்து நம்மால் இவ்வாழ்க்கை வாழ முடியும். அதனால் நாம் நம் சொந்த பந்தங்களிடம் பணம் வாங்கி வாழலாம். அவர்களுக்கு அப்பா நிறைய உதவிகள் செய்திருக்கிறார். அதனால் நான் சொந்த பந்தங்களிடம் கேட்கிறேன் .

இதனை கவனித்த இளைய மகன், நாம் எப்படி அப்பா சம்பாதித்த சொத்துக்களை விற்று சாப்பிடுவது. இது முற்றிலும் தவறு. மேலும் சொந்தபந்தங்கள் இடம் போய் பணம் கேட்டால் நமக்கான மதிப்பு போய்விடும். எப்படி கொடுத்து உதவியதை திருப்பி கேட்பது. உதவி செய்தது அப்பத்தானே .

அண்ணன்கள்:அப்படியென்றால் என்ன செய்ய சொல்கிறாய்?

நாம் எப்படி வாழ்வது, எப்படி குடும்பத்தை நடத்துவது.

அண்ணன்மார்களே உங்களுக்கு யாரும் வேலை தரவில்லை என்றால் சொந்தமாக தொழில் ஆரம்பிக்கவும், இல்லையென்றால் வெளியூர் சென்று வேலை செய்வோம். நமக்கு பல வழிகள் உண்டு. எதுவும் சாத்தியமே.

வெளியூர் சென்று அலைந்து ரொம்ப கஷ்டப்பட்டு உழைப்பதெல்லாம் சாத்தியமே கிடையாது . வெளியூர் சென்றாலும் நமக்கு தங்க இடம் இல்லை. எல்லாமே அங்கேயே செலவாகிவிடும். பின் எப்படி குடும்பத்தை நடத்துவது. தொழில் தொடங்கலாம் என்றால் நம்மை நம்பி பணம் கொடுக்க மாட்டார்கள்.

இளைய மகன் தான் முயற்சிக்கலாம் என்று தனக்கான வேலையை தேடி கண்டுபிடித்தான். மேலும் சிறு தொழில் தொடங்கவும் முடிவு செய்தது, தொழிலை ஆரம்பித்தான். சிறிது காலம் கழித்து தொழில் படிப்படியாக வளர்ந்தது . தன் சகோதரர்களுக்கும் உதவி செய்தான்.

அவனது சகோதர்கள் அவனைப் பார்த்து உன்னால் எப்படி இது சாத்தியப்பட்டது என கேட்க , அவன் ரொம்பச் சின்ன விஷயம் தான் . ஒரு எண்ணத்தை சிந்தித்த உடன் கவலை வருவது சாத்தியம் என்றால் வேறு என்னத்தை சிந்தித்து மகிழ்ச்சி அடைவது சாத்தியமே. அது நம்ம சிந்திக்கிற கூடிய தோரணை பொருத்தது.

முயற்சிகள் எதுவும் சுலபமில்லை ஆனால் எல்லாம் சாத்தியம் தான் சாத்தியம் என நம்புவர்களுக்கு. அனைத்தும் சாத்தியமே எந்த உலகில்.

முடியாது என்று யோசித்து மூலையில் முடங்கி கிடைப்பதைவிட, முடியுமென முயற்சித்து பார்த்தாள் அனைத்தும் சாத்தியமே. முடியாது என்பதற்கு பல விவாதங்களை முன் நிறுத்துகிறோம், அனால் முடியும் என்பதற்கு ஒரு சில உதாரணங்களைக் கொண்டு வர மறுக்கிறோம். மாற்ற வேண்டியது நம் மனநிலையை தான், செயலை கிடையாது.

சாத்தியம் படுத்தியவர்கள் எப்பொழுதும் தோல்விகளைக் கண்டு பயந்தது கிடையாது. மின்சாரத்தை கண்டுபிடிக்க முடியாது என்றிருந்தால் இன்று நமக்கு மின்சாரம் இருந்திருக்காது . வானத்தில் பறக்க சாத்தியமில்லை என்று சொல்லி முயற்சிக்காமல் இருந்தால் இன்று விமானம் இருந்திருக்காது. இப்படி பல உதாரணங்கள். இவர்கள் அனைவருமே சாத்தியம் என முயற்சித்து தான் இந்த வெற்றிக்கான பயணத்தை அடைந்தார்கள் .

தம்பி எங்களை மன்னித்துவிடு. நாங்கள் முன்னிருந்து உன்னை வழி நடத்தி இருக்க வேண்டும். ஆனால் இன்று நீ எங்களை வழி நடத்துகிறார். நாங்கள் திருந்தி விட்டோம். முயற்சித்து வாழ்ந்து காட்டுவோம். அனைத்தும் சாத்தியமே.

கதை கருத்து:

ஒரு பலசாலி என்றும் நம்புவது தன்னம்பிக்கை மட்டுமே யாதும் சாத்தியமே உன் மனதில் வலிமை இருந்தால்.

ஒரு துளிக்குள் மறைந்திருக்கும் பெருங்கடல் நீ , துவண்டு விடாதே . முயற்சி செய் .

அனைத்தும் சாத்தியமே துணிவு உன்னிடத்தில் இருந்தால்.

சரித்திரம் உன்னை ஒருமுறை சொல்ல வேண்டுமெனில் நீ பலமுறை என்னிடம் வர வேண்டும்-சாத்தியம்.

--

--

Responses (1)