கதை கேளு — சிரிப்பு
அனைவருக்கும் மே 5 சிரிப்பு தின வாழ்த்துக்கள்.
கல்லூரி மதிய உணவு இடைவெளி நேரம், 5 கல்லூரி மாணவிகள் கூட்டமாக நின்று வாய் விட்டு சிரித்து கொண்டிருந்தனர். அந்த வழியாக ஒரு இளம் உதவி பேராசிரியை ருக்மணி கடந்து சென்றார். அவர் மாணவிகள் தன்னை பற்றித்தான் சிரித்து பேசுகிறார்கள் என்று அவர்களை கோபமாக பார்த்து சென்றார்.
அங்கிருந்து சென்ற அவர் தலைமை பேராசிரியயை சந்தித்து, சற்று தொலைவில் உள்ள 5 மாணவிகள் தன்னை பற்றி தவறாக பேசி சிரிக்கிறார்கள். தாங்கள் உடனடியாக தலையிட்டு அவர்களை கண்டிக்க வேண்டும். தலைமை பேராசிரியை அப்படியென்றால் நான் கட்டாயம் கண்டிப்பேன். அவர்கள் என்ன பேசினார்கள் என்று உனக்கு தெரியுமா என்று கேட்டார்?
என் காதுகளில் சரியாக கேட்க வில்லை. ஆனால் அவர்கள் என்னை பார்த்து கொண்டே பேசினார்கள். நீங்கள் அவர்களை கூப்பிட்டு விசாரியுங்கள். அதெல்லாம் தேவையில்லை, தான் அவர்களிடத்திலே சென்று விசாரிக்கிறேன். நீ இங்கேயே அமர்ந்திடு.
தலைமை பேராசிரியை தன் அறையிலிருந்து மாணவிகள் இருக்குமிடம் நோக்கி சென்றார். அருகில் செல்லும் போது மாணவிகள் பேசுவது அவர் காதில் கேட்டது. மாணவிகள் அவர்களுக்குள் அரட்டை அடித்து பேசிக்கொண்டிருந்தனர். தலைமை பேராசிரியை நானும் கலந்து கொள்ளலாமா உங்கள் சிரிப்பில் என கேட்க. அவர்கள் கட்டாயமாக வாங்க. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும், நாங்கள் தினமும் எங்களுக்குள் சிரிப்பை பகிர்ந்து கொள்வோம் அரட்டை அடித்து. சபாஷ் பாராட்டுகள், இப்படித்தான் உத்வேகமாக இருக்க வேண்டும். உதவி பேராசிரியயை பார்த்தீர்களா , இல்லை அம்மா நாங்கள் பேசி, சிரித்து கொண்டிருந்ததில் யாரையும் கவனிக்க வில்லை.
தலைமை பேராசிரியை அங்கிருந்து விடை பெற்று தனது அறைக்கு சென்று, ருக்மணி நடந்ததை கவனித்தாயா? ருக்மணி ஆமாம் கவினித்தேன். நீங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டீர்கள்.
அட போடி முட்டாள். அவர்கள் நீ கடந்து வந்ததேயே பார்க்க வில்லை. நீயே அவர்கள் இடத்திற்கு சென்றிருந்தால் புரிந்திருக்கும்.
உனக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மை தான் இதற்க்கு காரணம். நீ வகுப்பறையில் கூட கடுமையாக இருப்பதாகவும், யாரிடமும் சிரித்து பேசுவதில்லையாம்.
சிரிப்பவர்களை பார்த்து குறை சொல்லாதே. சிரிப்பு மனதை திறக்கும் சாவி.சிரிப்பு சாவியை துலைத்து விட்டால் , வாழ்க்கை எனும் வீட்டு பூட்டை திறக்க முடியாது. துன்பத்தை பிறர் நமக்கு கொடுத்தாலும் / கொடுக்க நினைத்தாலும், உண்மையான சிரிப்பை நாம் பிறர்க்கு கொடுப்போம் .
நீயும் சிரி மற்றவர்களையும் சிரிக்க வை. சிரிப்பு மனக்களைப்பை நீக்கும் மருந்து. உன் முகத்தின் அழகு சிரிப்பு முடிந்த வரை அனைவரையும் சிரிக்க வை. சிரிப்பு என்ற பொக்கிஷத்தை பயன்படுத்து, அதன் பலன் எண்ணிலடங்காதது.
நன்றி அக்கா, நான் இனி கட்டாயம் அனைவரையும் சிரிக்க வைப்பேன், யார் மனதையும் துன்புறுத்த மாட்டேன், கடுமையான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன். மிக அழகாக இருக்க செய்ய வேண்டியது சிரிப்பு, அதை இங்ஙனமே புரிந்து கொண்டேன்.
கதை கருத்து :
உன் மனம் வலிக்கும் போது சிரி ,
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை. — சார்லி சாப்ளின்
எந்த சூழலிலும் சிரிக்க கற்றுக்கொண்டவன், அனைவரின் மனதை கவர்ந்தவனாக இருப்பான். சிரிப்பை விலை கொடுத்து வாங்க முடியாது. சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவை மாதிரி. பறவைக்கு அழகு சிறகு, மனிதனுக்கு அழகு சிரிப்பு.
ஒரு சிரிப்பு எந்த ஒரு மொழியையும் மொழிபெயர்ப்பு செய்துவிடுகிறது.
சிரியுங்கள், வயிறு வலிக்க சிரியுங்கள் .