கதை கேளு — சுறுசுறுப்பு
காட்டை கைப்பற்ற வேண்டும் என ஒரு கும்பல் முடிவெடுத்து வேட்டை ஆயுதங்களுடன் காட்டிற்குச் சென்றனர், ஆனால் அவர்களது முயற்சி தோல்வியுற்றது. சென்றவர்கள் எல்லாம் கடிகளோடு திரும்பினர். ஏன் இப்படி நடந்தது என்று அவர்களால் அறிய முடியவில்லை. பின் ஒரு நாள் அந்த காட்டிலுள்ள ஒரு நபரை சந்தித்து அந்த காட்டில் என்ன உள்ளது. ஏன் எங்களால் உள்ளே செல்ல முடியவில்லை என்று துருவித் துருவி கேட்டனர்?
அதற்கு அந்த காட்டு மனிதன் அந்தக் காட்டில் எறும்புகள் அதிகம் உள்ளது. அதனால்தான் உங்களால் உள்ளே செல்ல முடியவில்லை என்றார். உடனே அவர்கள் அனைவரும் சிரித்தனர்.
அதற்கு அந்த காட்டு மனிதன் சொன்னான், இப்படித்தான் பல நாட்களுக்கு முன் நீங்கள் காட்டை தாக்க வருவீர்கள் என்ற தகவல் அறிந்து, காட்டு விலங்குகள் அனைத்தும் ஒரு கூட்டம் கூட்டியது. அந்தக் கூட்டத்தில் இந்த காட்டை காக்க சுறுசுறுப்பானவர்கள் மற்றும் ஒழுக்கமானவர்கள் நமக்குத் தேவை, நம் விலங்கினங்களில் எவர் அதை சரியாக செய்வார் என்று கூட்டத்தில் விவாதித்தனர். அப்போது கூட்டத்தில் உள்ள யானை இதற்கெல்லாம் சரியான ஆட்கள் எறும்புகள் என்றது. உடனே அனைத்து விலங்குகளும் முணுமுணுத்தன , என்ன இந்த யானைக்கு வளர்ந்த அளவுக்கு அறிவு இல்லையா?
எறும்புகளால் யாரை தாக்க முடியும் ? மனிதனை விட 10000 மடங்கு சிறியது.
யானை கூறியது , ஆளை பார்த்து எடை போடாதே . வலியர்கள் உதவி தேவை, பலமான சிங்கம் , புலி , சிறுத்தை மற்றும் நம் அனைவரையும் தாக்கும் ஆயுதம் மனிதர்களிடம் உள்ளது. நாம் அசந்து தூங்கும் பொது நம்மை சிறு நொடிகளில் தாக்கி விடுவார்கள் . எறும்பு தூங்காமல் வேலை பார்ப்பவை, மிகுந்த அறிவு கொண்டது.
எறும்புகளிடம் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும் . எறும்புகள் சுறுசுறுப்பின் சின்னம் மற்றும் ஒழுக்கத்திற்க்கு புகழ் பெற்ற உயிரினம், மிகுந்த அறிவு கொண்டது. எறும்புகளில் 8000 வகை உண்டு. உடலை விட தலை பெரியது. பிரிந்து போன எறும்பு 6 மாதம் கழித்து வந்தாலும், மற்ற எறும்புகள் அதை அடையாளம் கொண்டு கொள்ளும் . எறும்பு வரிசை வரிசையாக வேகமாகச் செல்வதைப் பார்த்திருக்கலாம். வேகமாகச் சென்றாலும் ஒன்றன் மீது ஒன்று மோதிக்கொள்ளாமல் செல்வது வியப்பிற்குரியதே! அந்த அளவிற்க்கு ஒழுக்கம். உழைப்பதில் எறும்புகளுக்கு ஈடு இணை எதுவும் வராது.
அதனால் ஆயுதங்களுடன் வரும் மனிதர்களை தாக்க எறும்பு தான் சரியான ஆட்கள். சுறுசுறுப்பாக அவர்களை தாக்க முடியும். எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்கள், அது போல தன்னைவிட 20 இருபது மடங்கு எடைகளை தூக்கும் சக்தி கொண்டது.
இப்படி யானையின் அறிவுரைகளை கேட்டு, அனைத்து விலங்குகளும் ஒன்றாக சம்மதித்து எறும்புகளின் உதவியை நாடி. அவைகள் நீங்கள் எதிர்பார்க்காத விதத்தில் உங்களை கடித்து உங்களை காட்டை விட்டு ஓட செய்தது.விலங்குகள் சுறுசுறுப்பு என்ற வெற்றி குதிரையில் பயணம் செய்து வெற்றி அடைந்தனர்.
அப்படியா , உடனடியாக எறும்பினை அழிக்கும் மருந்துப் பொடியைத் தூவி, அதை வீழ்த்தி விடலாம்.
மீண்டும் முட்டாள் தனமான சிந்தனை , அப்படி செய்தாலும் வீழ்ந்து அழிந்து போகாமல் வேறு இடத்திற்குச் சென்று தம் இனம் அழியாமல் காத்துக் கொள்ளும்.
ஆம்,ஆம் ஒப்புக்கொள்கிறோம். ஓரறிவு எறும்பு ஆறறிவு உள்ள மனிதர்களுக்கு கற்றுத் தரும் பாடங்கள் உழைப்பு, சேமிப்பு, சுறுசுறுப்பு.
கதை கருத்து:
சுறுசுறுப்பாக வாழ்வதற்கு எறும்புகளை நாம் எடுத்துக்காட்டாகக் கூறுவோம். மிகச்சிறிய உயிரினமான எறும்பிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. சுறுசுறுப்பாய் இருப்பவர்களை நோக்கி வெற்றி ஓரடி வேகமாக எடுத்து வைக்கிறது.
சுறுசுறுப்பாக இருங்க, நொண்டி சாக்கு சொல்லாதிங்க.
எறும்பை போல தன்னிலை அறிந்து சுறுசுறுப்பாய் இரு. சுறுசுறுப்பாக வாழ்வோம். வாழ்வில் வெற்றி அடைவோம், மகிழ்ச்சியாய் வாழ்வோம்.