கதை கேளு — தடைகள்

Sankar sundaralingam
2 min readNov 20, 2021

--

துறவி ஒருவர் காட்டில் கடும் தவம் செய்து கொண்டிருந்தார் அவர் தவம் செய்து கொண்டிருக்கையில் அவரது சிஷ்யர்கள் அவருக்கு எதிரில் அமர்ந்து அவர்களும் தவம் செய்தனர். இவர்களது தவத்திற்கு பலதடைகள் வந்தது, துறவி எந்த தடைகளையும் பொருட்படுத்தாமல் தனது தவத்தை தொடர்ந்து செய்தார் ஆனால் சிஷ்யர்களால் முடியவில்லை . தவம் முடிந்து துறவி கண்விழித்து பார்க்கையில், அவரது சிஷ்யர்கள் எங்களை மன்னியுங்கள் , உங்களால் மட்டும் எப்படி இந்த தடைகளுக்கு நடுவில் இவ்வளவு கட்டுக்கோப்பாக தவம் செய்ய முடிந்தது. நாங்கள் உங்களைப் பின் தொடர்ந்து தவம் செய்தோம் ஆனால் எங்களால் இந்த தடைகளுக்கு நடுவில் முடியவில்லை. நல்ல இடம் பார்த்து அமர்த்திருக்க வேண்டும் என நினைக்கின்றோம்.

இருக்கலாம் , அங்கேயும் எதாவது தடைகள் வந்தால் ?

அப்படியும் வந்தால் சோதனை காலம் , நேரம் சரியில்லை என்று தான் அர்த்தம்.

துறவி :நம்மால் தடைகளை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் பழியை வேறு எதன்மேலாவது போடுவது .

நாம் செல்கின்ற பாதையில் தடைகள் இருந்தால் தகர்த்து விட்டு தான் செல்லவேண்டும் என்பதில்லை அதை பொருட்படுத்தாமலும் / தவிர்த்து விட்டும் செல்லலாம் எறும்பை போல.

தடைகளை பற்றியும், அதை எதிர்கொள்ளும் கல்வியை முதலில் படியுங்கள்.

தடைகள் உன்னை தடுப்பதற்கு அல்ல, தாண்டிச் செல்வதற்கு, உன் உயரத்தை கூட்டுவதர்கு. தடைகள் உனக்கு தடையல்ல, நீ தடையென ஆகாதபோது. தடைகள் எத்தனை இருந்தாலும் வலியுடன் கூடிய வழி பிறக்கும்.

தடைகள் எப்பொழுதும் நன்மையில் முடியும் அதை நாம் சரியாக கையாண்டால் , தடையே நமக்கு சிறந்த தீர்வுகளையும் தரும். சாதனையாளர்கள் அனைவரும் தடைகளை தாண்டி தான் வந்தார்கள்.

தடுமாற்றத்தை தடை என கருத வேண்டாம் .

தயக்கம் உள்ளவர்களிடம் தான் தடைகள் பெரிதாக தெரியும்.

துணிவு உள்ளவர்களிடம் தடைகள் துரும்பாக தெரியும்.

துணிவுடன் எதை செய்தாலும் செய்யுங்கள். தயக்கமே வேண்டாம்.

வாழ்க்கை பாதையில் இருக்கும் சிறு இடைஞ்சல்களை கண்டு அஞ்சி விலகி விடாமல், வெற்றிக்கு தடையாக இருக்கும் தடைகளை கண்டறிந்து நீக்கிவிட்டால் வெற்றி உறுதி.

தைரியமாக இருந்து தடைகளை கையாளுங்கள். வாழ்க்கை தடைகள் நிறைந்தது , மன வலிமை இருந்தால் தடைகளை கடக்கலாம்.

சின்ன சின்ன தடைகளுக்கு மனதை போட்டு குழப்ப வேண்டாம் , தைரியுமாக கையாளுங்கள் , தடைகள் தவிடு பொடியாகும் . எத்தனை தடைகள் வந்தாலும் உடைத்தெறிந்து தொடர வேண்டும் நமது தவம் .

துறவியின் அறிவுரையை கேட்ட சிஷ்யர்கள் கண்டிப்பாக இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூறி நன்றி தெரிவித்தனர்.

கதை கருத்து :

தடைகளை தாண்டினால்தான் சாதனை . யானைகள் எப்படி தடைகளை தகர்த்து தானாகவே தனது வழித்தடத்தை மீட்கிறதோ , அதுபோலத்தான் மனிதர்களாகிய நாமும் தடைகளை தகர்த்து நமக்கான வழித்தடத்தை மீட்க வேண்டும்.

தடைகளைத் தாண்டி பாயும் நதியை போல, வாழ்க்கையை தடைகளைத் தாண்டி நீங்களும் பயணிக்க வேண்டும்.

தடைகள் ஆயிரம் வந்தாலும் என்ன ? அடி எடுத்து வைத்து முன்னேறி விடு, வானமும் உன் வசப்படும்.

மோதிப்பார்,

முட்டிப்பார் ,

முயன்றுபார்

கடந்துப்பார்,

திறக்கவில்லை என்றால் உடைத்துவிடு தடைகளை. தடைகள் படிக்கட்டாக மாறும். தடைகளை கண்டு அஞ்சாதே.

தடை அதை உடை புது சரித்திரம் படை!!!

--

--

No responses yet