கதை கேளு — தலைமை குணங்கள்

Sankar sundaralingam
2 min readApr 24, 2021

--

பயிற்சியாளர்கள் மூன்று பேர் ஒன்றாக இணைந்து தலைமை குணங்கள் பற்றி பயிற்சி வகுப்புகள் நடத்த விவாதித்துக் கொண்டிருந்தனர்.

இப்படி விவாதித்துக் கொண்டிருக்கையில் அதில் ஒருவர் சற்று மாறுபட்ட கருத்துக்களை விவாதித்தார். அது, தலைமை குணங்கள் எப்படி இருக்குனும் என்பதை பற்றி நிறைய மேலாண்மை மாநாட்டு மேடைகளில், புத்தகங்களில், பள்ளிகளில், பதிவுகளில் பெரும்பாலும் பேசப்பட்டுக் கொண்டுருக்கிற ஒரு விஷயமா இருக்கு. இந்த குணங்கள் எல்லாத்தையும் பட்டியலிட்டு பார்க்கும்போது, இத்தனை குணங்கள் உள்ள தலைமை கிடைப்பார்களா என்பது எனக்கு ஒரு பெரிய வியப்பா இருக்கு?

தலைமை குணங்கள் பட்டியல் சில:

· நேர்மறை அணுகுமுறை

· எடுத்துக்காட்டாக வழிநடத்துவது

· தொலைநோக்கு சிந்தனை

· நல்ல கேட்கும் திறன்

· அணி கட்டுபவர்

· மக்கள் மேலாண்மை திறன்கள்

· அணுகக்கூடியவர்

· மக்களை மேம்படுத்துதல்

· ஆர்வம் மற்றும் இயக்கி

· பச்சாத்தாபம்

· உணர்வுசார் நுண்ணறிவு

· சிறந்த தொடர்பாளர்

· நேர்மை

· மரியாதை

· கற்றல் சுறுசுறுப்பு

· ஊக்குவித்தல் மற்றும் செல்வாக்கு

எப்படி ஒரு மனிதன் எல்லா குணங்களும் சேர்ந்து இருக்க முடியும்? எனக்கு தெரிந்து கடவுளால் கூட அப்படி எல்லா குணங்களும் சேர்ந்து இருக்க முடியாது. அதனால் தான் நாம் கடவுள்களை கூட சிவா, விஷ்ணு, பிரம்மா என பிரித்து ஒவ்வொரு குணங்களுடன் ஒப்பிடுகிறோம். சிவா அழித்தல், விஷ்ணு காத்தல் , பிரம்மா படைத்தல். இப்போது வரை நாம் வரலாற்றில் பார்த்ததில்லை, எந்தவொரு தலைவரும் எல்லா குணங்களையும் கொண்டிருந்ததாக . அவர்கள் உள்ளார்ந்த சில குணங்களுடன் அதிகம் ஈர்க்கப்பட்டனர்.

· மகாத்மா காந்தி மிகவும் சக்திவாய்ந்த மற்றும் தொலைநோக்குத் தலைவராக இருந்தார்.

· நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஒரு தைரியமான தலைவராக இருந்தார்

· சுவாமி விவேகானந்தர் எழுச்சியூட்டும் நபர்

· நெல்சன் மண்டேலா பணிவு மற்றும் பச்சாத்தாபம் கொண்டவர்.

· ஆபிரகாம் லிங்கன் ஒரு சிறந்த தொடர்பாளர் மற்றும் நல்ல கேட்கும் திறன் கொண்டவர்.

மேலே குறிப்பிட்டுள்ள பெரிய தலைவர்கள் எவருக்கும் தலைமைப் பண்புகளின் நீண்ட பட்டியல் இல்லை. ஆனால் அவர்களால் ஒரு மகத்தான மாற்றத்தையும் எழுச்சியையும் கொண்டுவர முடிந்தது, ஏனெனில் அவர்கள் உள்ளார்ந்த தலைமையை அறிந்திருந்தார்கள், அதை அடைய முழு மனதுடன் உழைத்தார்கள்.

அவருடைய மாறுபட்ட சிந்தனையை மற்ற இரு பயிற்சியாளர்களும் முழுமையாக ஒப்புக் கொண்டனர். ஆமாம், நாம் இதுவரை புத்தகங்களில் மற்றும் நிர்வாக மேலாண்மை மாநாடுகளில் அறிந்த விஷயங்களை பயிற்சி வகுப்புகள் எடுத்துக் கொண்டு வந்தோம். அவர்களுக்குள் உள்ள உள்ளார்ந்த குணங்களை அடையாளம் கண்டு செயல்பட ஒருபோதும் கூறியது கிடையாது.

கதை கருத்து:

உங்களுக்குள் இருக்கும் உங்கள் உள்ளார்ந்த குணங்களை அடையாளம் கண்டு அவற்றில் கவனம் செலுத்துங்கள், இதன் மூலம் உங்கள் தலைமைப் பண்புகளைக் காட்டுங்கள்.

--

--

No responses yet