கதை கேளு — தீப ஒளி
தீபாவளி நாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தனர் . 8 வயது சிறுமி தனது தந்தையிடம் சென்று அப்பா நாம் எதற்காக தீபாவளி கொண்டாடுகிறோம் என கேள்வி கேட்டால்.
அதற்கு அவளது தந்தை , தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்த கெட்டவனாக நரகாசுரனை கிருஷ்ணர் எனும் அவதாரமெடுத்துக் கொன்று விட்டார். நரகாசுரன் இறக்கும் தருவாயில், ‘தான் கொடுமைகள் பல புரிந்து விட்டதால், தான் இறந்த பிறகு இந்நாளை மக்கள் தீபம் ஏற்றி கொண்டாடி மகிழ வேண்டும்’ என கேட்டுக் கொள்ள, ‘அப்படியே ஆகட்டும்’ என்றாராம் கிருஷ்ணர்.
அப்பா , நரகாசுரன் கெட்டவன் என்றால் ,ஏன் தீபங்களை ஏற்றி வைத்து மக்கள் மகிழ்வோடு இருக்க வேண்டும் என கேட்டார்? அவர் பட்டாசு கொளுத்தி மகிழ வேண்டும் என்று சொல்லியிருக்க முடியாது, ஏனெனில் பட்டாசை கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். நரகாசுரன் இருந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் பட்டாசு இல்லை. இந்த புராணக் கதைக்கு சரியான முகாந்திரம் இல்லை .
அப்பாவிடம் சரியான விடை கிடைக்காத மகள் தாயிடம் போனாள். அவள் அம்மா கூறினால் , பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தை முடித்த இராமன், இராவணனை வதம் செய்து மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் அயோத்திக்கு திரும்பிய நன்நாளே இந்நாள் என நம்பப்படுகிறது மற்றும் எள்ளின் மகிமையை உணர்ந்த மன்னன் பகுவன் எள்ளினை பெருமளவில் விளைவித்து, நெய்யெடுத்து தன் நாட்டு மக்களை வரவழைத்து தலைநகரின் அருகில் ஓடிய “தீபவதி” ஆற்றில் அவர்களை எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்னான். நல்லெண்ணெய் கண்டுபிடித்த நாளான ஐப்பசி மாதம் சதுர்த்தி நாளை தீபவதி ஆற்றில் குளித்ததோடு இணைத்து, தீபவதி குளியல் நாள் என வழங்கி வந்தார்கள் என்ற கண்டுபிடிப்பை அயோத்திதாசப் பண்டிதர் வெளிப்படுத்தினார்.
அம்மா எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது, ஒரு சரியான பதில் இதற்கு கிடைக்க மாட்டேங்குது.
தனது பாட்டியை பார்த்தால்.அதற்க்கு அவளது பாட்டி , பேத்தி எனக்கு உன்னை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது , உன் வயது பிள்ளைகள் புது துணி , பட்டாசு , இனிப்பு என கொண்டாடி கொண்டு இருக்கு , உனக்கு இதன் மேல் உள்ள ஆர்வம் உன் அறிவு பசியை காட்டுகிறது , அதனால் தான் நான் உன்னை கண்டிக்கவில்லை , தீபாவளிக்கு பல கதைகள், சரித்திரங்கள், வரலாறுகள், பின்னணிகள் உள்ளன. நம் முன்னோர்கள் பல அறிவியல் சார்ந்த விஷயங்களை நமக்கு புராண கதைகளுடன் தொடர்பு படுத்தி கூறியுள்ளனர் . காரணம் நாம் அதை தவறாமல் கடை பிடிக்க வேண்டும் என்று .
தீபம் ஏற்றுவது, புற இருளை நீக்கி வெளிச்சம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. நாம் ஏற்றும் தீபம் நமது அக இருளையும் அழிக்க ஆற்றல் பெற்றது . சாஸ்திரங்களில் கூறப்பட்ட திரவியங்கள் தீப ஒளியுடன் கலந்து, ஒருவித அதிர்வுகளை ஏற்படுத்தி, நம் மனத்தையும் அங்கு இருக்கக் கூடிய சுற்றுப்புறச் சூழலையும் நல்ல நிலையில் அமைக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. தீய குணத்தை எரித்து விடும் தீப ஒளி திருநாள். நாமும் தீபாவளித் திருநாளில், நம் வீடுகளில் தீபங்களை ஏற்றி வழிபட்டு, ஒளிமயமான வாழ்க்கைக்குப் பிரார்த்திப்போம்.
ஆமாம் பாட்டி காரணத்தை நொண்டி தேடுவதை விட அதில் இருக்கும் நல்லதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கதை கருத்து :
தீபம் ஞானத்தின் சின்னம். அறிவைப் பகிர்ந்து கொடுப்பதன் மூலம் ஞானம் வளருகிறது. ஒரு விளக்கின் ஒளியிலிருந்து பல தீபங்களை ஏற்ற முடியும். இருளை விரட்டி ஒளியைக் கொடுக்கும் சக்தி கொண்டது தீபம்.
அன்பெனும் விளக்கில் அறிவெனும் சுடர் ஒளிரட்டும்!
தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல் நம் அனைவரின் வாழ்வில் மகிழ்ச்சி எனும் ஒளி பரவட்டும்.