கதை கேளு — துணிவு

Sankar sundaralingam
2 min readSep 5, 2020

--

இரண்டு நண்பர்கள் ஒன்றாக படித்து வளர்ந்து வந்தார்கள் . அவர்களில் ஒருவர் நல்ல படிப்பாளி , அறிவாளி ஆனால் பயந்தாங்கோலி , எதையும் துணிச்சலாக அவரால் செய்ய இயலாது . மற்றொரு நண்பர் படிப்பில் சுமார் ஆனால் பெரிய தைரியசாலி எத்தகைய பிரச்சனைகளையும் துணிச்சலோடு எதிர் கொள்பவர் . இப்படி இருவரும் தங்களது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து, வேலையில் சேர்ந்து பணியாற்ற நகர்புறம் வருகிறார்கள். படிப்பில் கெட்டிக்காரரான நண்பரால் வேலையில் சாதிக்க முடியவில்லை, அதைக் கண்ட மற்றொரு நண்பர் மிகுந்த வருத்தத்துடன் தனது நண்பரை எப்படியாவது மாற்றவேண்டும் என பல முயற்சிகளை எடுக்கிறார், ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

ஒருநாள் தனது நண்பரை மனோதத்துவ மருத்துவரிடம் கலந்தாய்வுக்கு அழைத்துச் செல்லலாம் என முடிவெடுத்து, அவரை அழைத்துச் செல்கிறார். தனது நண்பரின் பலம் மற்றும் பலவீனங்களை மருத்துவரிடம் எடுத்துக் கூறுகிறார்.

மருத்துவர் அந்த நபரிடம் நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? எதையும் துணிச்சலாக செய்யமுடியவில்லை என்று கூறுகிறீர்கள், எது உங்களை தடுத்து நிறுத்துகிறது என்று கேட்க. அந்த நபரோ எப்போ எந்த விஷயம் செய்தாலும், எனக்குள் ஒரு பய உணர்வு, நாம் தோற்று விடுவோமோ அல்லது தப்பாகி விடுவோமோ என்று தோன்றுகிறது.

மருத்துவர் சரி உங்களுக்கு புலி மற்றும் மான் வேட்டை ரகசியத்தை சொல்கிறேன்.

புலி, மான்: இதில் எது அதிகமாக ஓட முடியும்?

உடனே அந்த நபர் புலி என்று கூற, மருத்துவரோ இல்லை. இது நம் அனைவரின் எண்ணம்.

அப்புறம் எப்படி புலியால் மானை துரத்தி பிடித்து வேட்டையாட முடியும்?

மருத்துவர் நல்ல கேள்வி

மான் ஒரு மணி நேரத்திற்கு 48 கிலோமீட்டர் வரை ஓட முடியும். குறைந்த தூரத்திற்கு இன்னும் வேகமாக ஓடலாம் ,அவ்வாறு ஓடினால் அது புலியிடமிருந்து தப்பிக்க முடியும். ஆனால் பெரும்பாலான சமயங்களில் மான் மாட்டிக்கொள்ளும். காரணம் தெரியுமா?

நண்பர் தெரியாது

புலி ஒரு மணி நேரத்தில் 49 கிலோ மீட்டர் ஓட முடியும். மான் ஓடும் போது பயத்துடன் மற்றும் பின்னால் திரும்பி பார்த்து ஓடும், பின்னால் திரும்பி பார்த்து ஓடும்போது அதன் துணிச்சல் குறைந்து, வேகம் குறைந்து புலியிடம் மாட்டிக் கொள்ளும். இதனால் மான் புலிக்கு இரையாகி விடும். மான் மட்டும் துணிச்சலுடன் மற்றும் திரும்பிப் பார்க்காமல் அதன் மேலுள்ள திறமையால் சிறிது வேகமாக ஓடினால், அதனுடைய உயிரை பாதுகாத்துக் கொள்ள முடியும். அதுபோலத்தான் நீங்கள் எவ்வளவு பெரிய பலசாலியாக, அறிவாளியாக , படிப்பாளியாக கூட இருக்கலாம் ஆனால் துணிச்சல் இல்லை எனில் உங்களால் எதையும் சாதிக்க, எதிர்கொள்ள இயலாது என மருத்துவர் எடுத்துரைத்தார்

கதை கருத்து: பயந்தால் எதையும் சாதிக்க இயலாது. துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை. துணிவு தரும் தைரியத்தை கொண்டு துன்பங்களை எதிர் கொள்ளுங்கள், பயந்து ஒழிந்து கொள்ள வேண்டாம் . எதிர்கொள்ளும் துணிவு பெற்று விட்டால் போதும் துன்பமும் காணாமல் போய்விடும்

--

--

Responses (1)