கதை கேளு — நகைச்சுவை மன்னர்கள்
இக்கதையை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைத்த, இன்னும் நம்மை திரையில் சிரித்து வைத்துக்கொண்டிருக்கும் நமது மறைந்த நகைச்சுவை மன்னர்களுக்கு (நடிகர் நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சார்லி சாப்ளின், சந்திரபாபு, கிரேசி மோகன், மனோரமா, ஜனகராஜ், விவேக் மற்றும் பலர்) சமர்ப்பணம்.
கணவன்-மனைவிக்கிடையே சின்ன வாக்குவாதம், ஒருவருக்கு ஒருவர் இரண்டு நாட்களாக பேசிக்கொள்ளவில்லை. தவறை உணர்ந்த மனைவி கணவனை எப்படியாவது சமாதானப்படுத்தி பேசிவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறாள். அம்முயற்சியில் நகைச்சுவை நடிகர்களின் நகைச்சுவை தொகுப்பை தொலைக்காட்சியில் பார்க்கும்படி செய்கிறாள். அந்த நகைச்சுவை காட்சியில் கணவன் மனைவி சண்டை காட்சி இடம்பெறுகிறது. இந்த காட்சியை பார்த்து கணவன் சிரிக்கிறான். மனைவி உடனே கணவருடன் பேச தொடங்குகிறாள், இருவரும் சற்று சமாதானம் அடைந்து நமக்கு எவ்வளவு கவலைகள் இருந்தாலும் நகைச்சுவை காட்சிகளை பார்த்தால் அத்தனையும் ஒரு நிமிடத்தில் பறந்து போகிறது.
மனைவி கேட்கிறார், இவர்களுக்கு பிரச்சனைகளை இருக்காதா? எப்போதும் சந்தோஷமாக இருப்பதால் தான் இவர்களால் அடுத்தவர்களை சிரிக்க வைக்க முடிகிறது அல்லவா?
கணவன் கூறுகிறான் ,அப்படி ஒன்றுமில்லை அவர்களுக்கும் மறுபக்கம் இருக்கிறது மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான பிரச்சினைகள். பிரச்சனை இல்லாத வாழ்க்கையே கிடையாது. நான் பல நகைச்சுவை நடிகர்களின் சொந்த பிரச்சினைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். சிலசமயம் சிந்தித்து கூட பார்த்திருக்கிறேன். எப்படி இவர்களால் தன் கஷ்டங்களை மறந்து மனதில் அடக்கிக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைக்க முடிகிறது. உண்மையிலே வியப்பாகத்தான் உள்ளது. நம்மால் நம் கவலைகளை மனதில் அடக்கிக் கொண்டு அடுத்தவர்களை சிரிக்க வைக்க முடியவே முடியாது.
இதைப் பற்றி சில வல்லுனர்களிடம் கேட்டபோது, நகைச்சுவை என்பது திரைப்படத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். நாம் ஒவ்வொருவரும் பிரச்சினைகளின் சூழல் அல்லது மனம் குழப்பத்தில் இருக்கும்போது நகைச்சுவைகளை பார்த்தாலோ அல்லது செய்தாலோ மனம் சற்று அமைதி அடையும். நகைச்சுவை நடிகர்கள் தங்கள் பிரச்சினைகளை மறந்து, மக்களை சிரிக்க வைக்க எப்பவும் சிந்திப்பார்கள். உதாரணமாக, சார்லி சாப்ளின் சோகத்திலும் சிரித்த அந்த உன்னத கலைஞன். அவனின் அறியப்படாத மறுபக்கங்கள் பல உள்ளது. ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமல் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் இந்த வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும்.
நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இந்த நகைச்சுவை நடிகர்களை ரசிகர்கள் பலதடவை கேலி, கிண்டல்கள் செய்து சில கமெண்டுகளை மைம்ஸ் மூலமாக சமூக ஊடகங்களில் பதிவிறக்கம் செய்து இழிவு செய்வது முற்றிலும் தவறு. அவர்களையும் மனிதர்களாக மதியுங்கள், உங்கள் சிரிப்பில் அவர்களது பங்கு மிக அதிகம்.
மனைவி ஆமாம் அவர்களை போற்ற வில்லை என்றாலும் பரவாயில்லை, இழிவுபடுத்த வேண்டாம். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மனதை புண்படுத்தக் கூடாது.
கதை கருத்து:
நகைச்சுவை நடிகர்களில் சிலரதுபெயரைக் கேட்டாலே சிரிப்பு தான் நினைவிற்கு வரும். அப்படி அவர்களின் நகைச்சுவை நம் மனதில் ஆழமாக பதிந்துள்ளது இன்று அவர்கள் சிலர்இவ்வுலகில் இல்லை என்றாலும் அவர்களின் சிரிப்பு நம் மனதில் என்றும் இருக்கும்.