கதை கேளு — நெருப்பு
மின்சாரம் துண்டிக்கப்பட்ட தருணம் ,வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. சுமார் எட்டு வயது மதிக்கத்தக்க குழந்தை பாட்டில் விளக்குடன் விளையாடிக்கொண்டிருக்க , அவள் அம்மா கவனமாக விளையாடு , நெருப்பு மிக ஆபத்தானது என எச்சரிக்கிறார். குழந்தைக்கு நெருப்பு என்ன செய்து விடும்? அது சிறு பாட்டில்களில் தான் எரிகிறது. அவளுக்குள் பல கேள்விகள். அவளது தந்தை பணி முடிந்து வீடு திரும்புகிறார் . உடனே மகள் தந்தையிடம் சென்று அப்பா மின்சாரம் இல்லை . கடந்த சில மணி நேரமாக இந்த பாட்டில் விளக்கு தான் நமக்கு இப்போ வெளிச்சம் தருகிறது. ஆனால் அம்மா என்னை நெருப்புடன் விளையாடும் போது எச்சரிக்கிறார். ஏன் எச்சரிக்கிறார் ?
தந்தை மகளுக்கு பின்வருமாறு நெருப்பின் குணத்தை விளக்குகிறார்.
நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்று. நம்மை பிரமிக்க வைக்கும் தன்மை கொண்டது. அது ஆதவன் குணம் கொண்டது. தள்ளி இருந்து பார்த்தால் அழகு, வெளிச்சம், கிட்டப்போனால் சுடும்.
நெருப்பு சாதிக் கலவரத்திற்கும், அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு நாச வேலைகளுக்கு துணை நிற்கும். சாதாரண தொண்டன் மாய்வதற்கு உடந்தையாக இருக்கும் என அதை எதிர்மறை எண்ணத்தோடு கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
நெருப்பினால் பெரிய உலோகங்களின் தன்மையை மாற்ற இயலும்.தங்கம், இரும்பு , செம்பு வெள்ளி போன்ற உலோகங்களை உருக்க முடியும். நெருப்பு ஒளிதரும். கோயில்களில் நெருப்பு பிம்பம் நேர்மறை எண்ணங்களை வளர்க்க உதவும். கார்த்திகை தீபம் நெருப்பு குழம்பினால் நல்லது நடக்கும் என நம்பிக்கை. பழையன கழிதலும் நெருப்பின் மூலம் தான் செயல்படுத்துகிறோம். நெருப்பு என்பதை தீமையை அழித்து நன்மையை சேர்ப்பதற்காக நம்மால் நம்பப்படும் கலாச்சாரம் . திருமணம் உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு நெருப்பை பயன்படுத்துகிறோம்.
நெருப்பு சூறாவளி போன்றது. இயற்கையாக உருவாகும் நெருப்பினால் காட்டை அழிக்க முடியும்.
நெருப்பு என்பது பொதுவாக ஆபத்து கிடையாது அதை சரியாக கையாள வேண்டும். கையாளப்படுகின்றவர் குணத்தை பொறுத்துதான் அதன் தன்மை அமையும்.
கதை கருத்து : வெளித்தோற்றத்தில் நெருப்பில் இருக்கும் நன்மை , தீமைகள் அதை நாம் கையாளும் விதத்தில உள்ளது. அது போல உள் நிலையில் இருக்கும் நெருப்பும் அப்படித்தான் . நாம் கையாளும் திறனில் தான் நம் வாழ்க்கையும் இருக்கும் . ஆபத்து என ஒதுங்கிவிட கூடாது. சரியான முறையில் நல்ல செயல்களுக்கு உள் நிலை நெருப்பை பயன்படுத்த வேண்டும். சூழ்ச்சிகளுக்கும் கால்ப்புணர்ச்சிகளுக்கும் அல்ல . அப்படி பயன்படுத்தினால் அது நம்மை அழித்துவிடும்.