கதை கேளு — நேர்மை

Sankar sundaralingam
2 min readSep 4, 2021

--

நேர்மை என்றால் என்ன? நேர்மை கிலோ எவ்வளவு? அது எங்கு கிடைக்கும் என்று கேட்பவர்களின் மத்தியில், ஒரு மளிகைக் கடைக்காரரின் நேர்மையை இங்கு பார்க்கப் போகிறோம்.

ஒரு பெரிய மளிகைக்கடையில் இரண்டு சிறுவர்கள் ( முத்து , சிவா ) பத்து வருடங்களாக வேலை செய்து, பத்து வருடங்களுக்குப் பிறகு தாங்கள் சொந்தமாக மளிகை கடை தொடங்கலாம் என முடிவெடுத்து, அந்த பெரிய மளிகை கடை உரிமையாளரிடம் ஆசிர்வாதம் பெற்று, அவர்கள் சொந்த ஊரில் இரண்டு மளிகைக்கடை தனித்தனியாக ஆரம்பித்தனர்.

முத்துவின் மளிகை கடையில் வியாபாரம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. குறைந்த விலையில் அந்த ஊர் மக்களுக்கு மளிகை சாமான்களை விற்று வந்தான், அவனுக்கு அதிக லாபம் கிடைத்தது , ஆனால் சிவாவின் மளிகை கடையில் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் இல்லை. சிவாவின் மளிகை கடையில் பொருட்கள் முத்துவின் மளிகை கடை பொருட்களை விட சற்று விலை அதிகம். இதற்கு சிலர் சிவாவிடம் கேட்டதற்கு எனது பொருள் தரமானது, என்னால் இந்த விலைக்குத்தான் விற்க முடியும். இதற்கு குறைந்து என்னால் விற்க இயலாது என்று கூறினான். கோபப்பட்ட ஊர்மக்கள் அவனிடம் பொருள் வாங்குவதை நிறுத்தி விட்டனர்.

பக்கத்து ஊரிலிருந்து சிலர் சிவாவின் கடையில் பொருட்களை வாங்கி வந்தனர். அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி பொருளின் அளவிலும், தரத்திலும். சிவா எப்பொழுதும் கொடுத்த வாக்கு தவறுவதில்லை. பொருளில் தரத்தில் எந்த ஒரு சமரசம் செய்வதில்லை . நேர்மையாக தொழிலை நடத்தினான் . நாளடைவில் இதை அறிந்த உள்ளூர் ஊர்மக்கள் முத்துவின் மளிகை கடைக்கு போவதில்லை , சிவா கடையின் வடிக்கையாளரானார்கள் .

முத்து தனது மளிகை கடையை அபிவிருத்தி செய்தான் ஆனால் வாடிக்கையாளர்கள் அவன் கடைக்கு வருவதில்லை . பெரிய நஷ்டம். தனது குருவை ( பெரிய மளிகை கடை உரிமையாளர்) சந்திக்க சென்றான் .

நடந்தவற்றைக் கூறி, ஏன் எனக்கு இந்த சூழ்நிலை ஏற்பட்டது என்று கேட்டான்.

அதற்கு அவனது குரு, நீ! நேர்மை வழி அறியாத மூடன். அதனால் தான் உனக்கு இந்த நிலை.

குருவே! நான் நேர்மையுடன் தானே நடந்து கொண்டேன். நான் பொருளை வாங்கி எனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில், எனக்கு நல்ல லாபம் பார்க்க நுணுக்கத்துடன் வியாபாரம் செய்தேன். ஏமாற்றும்நுணுக்கத்தை புத்திசாலித்தனம் என்று கூறாதே.

எனக்கு புரியவில்லை குருவே .

முத்து! உன்னை உயர்த்தும் அதிசயம் நேர்மை, ஏழ்மையிலும் நேர்மை வேண்டும்.சின்னச்சின்ன செயலிலும் நேர்மை வேண்டும். நேர்மை அழியாத சொத்து, காலம் செல்ல செல்ல தான் அதன் மகிமை தெரியும். அதுதான் சிவாவுக்கும் நடந்தது. சிவாவின் கடையில் ஆரம்பத்தில் மக்கள் போகவில்லை, ஆனால் காலம் போகப் போக அவர்கள் உனது பொருளின் தரத்தை உணர்ந்து, சிவா கடையின் பொருளின் தரத்தில் மகிமையை உணர்ந்தார்கள்.

முத்து ,சிவாவின் குருநாதர் சிவாவை அங்கு வரச் சொன்னார். அங்கு வந்து சிவாவை பார்த்து முத்து உன்னுடன் ஒரு சந்தேகத்தை கேட்க வேண்டுமாம்.

முத்து, சிவாவிடம் நேர்மையாக இருந்து என்ன சாதித்து விட்டாய்? சிவா: நேர்மையாக இருப்பதே பெரிய சாதனை என்பதை நான் உரக்கச் சொல்கிறேன்.

குருநாதன் சிவா உன்னைப் பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். முத்து, ஒருவர் நேர்மையானவராய் வாழ்ந்தாரா இல்லையா என்பதை அவரது பரம்பரையினரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ( ஆம், குறள் 112 ல் கூறியபடி, நேர்மையோடு ஒருவர் வாழ்ந்திருந்தால் அது அவரது பரம்பரையை எளிமையாக வாழவைத்தாலும் அழியவிடாமல் காத்திருக்கும். நேர்மையற்று வாழ்ந்தவரின் பரம்பரையோ பேராசையால் கெட்டு அழிந்திருக்கும். )

நன்றி குருநாதர், சிவா நேர்மையை உரக்கச் சொன்னதற்கு.

கதை கருத்து:

நேர்மையாக இரு நேரத்திற்குத் தகுந்தாற்போல் வாழாதே. நேர்மைக்கு கிடைக்கும் பரிசு கம்பீரம். நேர்மை ஒரு அருமையான பொக்கிஷம். பொய் பேசி, பொய்யுடன் வசதியாக வாழ்வதற்கு, மெய் பேசி மெய்யுடன் கம்பீரமாக வாழ்வதே மிக சிறந்தது.

உண்மையும், நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால். அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்.

- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நிம்மதி நிழல் தொடர, நேர்மை என்ற வெளிச்சம் தேவை…தொடரட்டும் உந்தன் நேர்மை பயணம்….

--

--

No responses yet