கதை கேளு — புகழ்
அழகான பெண் ஒருவர் முகநூல் , புலனம் நிலை , படவரியில் தனது புகைப்படங்களை பதிவிடுதல் , தனது நிலைகளை வலைத்தளங்களில் பதிவிட்டு அதற்க்கான விருப்பங்கள் மற்றும் கருத்துகளை எதிர்பார்ப்பது . இதை கவனித்த அவளுடைய இளைய சகோதரி, நீ ஏன் எப்படி சமூக வலைதள பைத்தியமாக இருகிறாய் ?
மூத்த சகோதரி :உனக்கு என் புகழ் மேல் கோபம் . எனக்கு ஏராளமான சமூக ஊடக நண்பர்கள் அதிகம் , அதனால் உனக்கு பொறாமை .
இளைய சகோதரி :அக்கா இது உண்மையான புகழ் கிடையாது. இதில் உள்ள நண்பர்கள் உனக்கு ஆபத்து என்றால் உடனடியாக வர முடியாது.
மூத்த சகோதரி :நம்ம பேரு, புகழ் உயர நான் தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன் படுத்திகிறேன். இது இல்லை என்றால்,அப்ப எது உண்மையான புகழ் ?
இளைய சகோதரி: நமது கவனம் முழுவதும் விளம்பர புகழின் மீது அதிகமாய் இருந்தால், எப்ப பார்த்தாலும் சமூக வலைதளத்தில் மூழ்கி கொண்டு நமது நேரத்தை கழித்துவிடுவோம்.
மூத்த சகோதரி: அப்படியென்றால் புகழ் கூடாது என்கிறாயா? புகழ் நல்லதா அல்லது கெட்டதா ?
இளைய சகோதரி : புகழ் வேண்டும் ஆனால் அந்தப் புகழ் நமது தொடர் திறமைகள் மற்றும் சாதனைகள் மூலம் வர வேண்டுமே தவிர, சமூகவலைதள பதிவிடும் விளம்பரம் மூலம் அல்ல. எப்படி அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகுமோ அதுபோலத்தான் புகழும். புகழ் நம்மை தேட வேண்டும், நாம் அதை தேடி அடைந்தால் இகழ் தான் கிடைக்கும் இறுதியில்.
உதாரணம் கூறுகிறேன் கேள். காளைமாடு ஒன்று எவராலும் அடக்க முடியாது. அதன் ஜல்லிக்கட்டுவை காண மாநில அளவில் மக்கள் கூடி வருவார்கள். அந்த காளைமாட்டுக்கு பெரிய புகழ். காலப்போக்கில் அது திமிராக மாறியது. அதனுடன் பலர் புகைப்படம் எடுக்க ஆ சைப்புடுவதும், அதை சமூக வலைத்தளங்களில் போடுவதும் வழக்கம். காளைமாட்டின் உரிமையாளர் புகைப்படம் எடுப்பவர்களிடம் பணம் வாங்கினார். மாட்டை பார்க்க வருபவர்களிடம் கட்டணம் என பணம் சம்பாதிக்க ஆசை பட்டார். சிறிது காலம் கழித்து மீண்டும் ஜல்லிக்கட்டு வந்தது. அந்த காளைமாட்டை அடக்க முயற்சித்து சிலர் அடிப்பட்டனர், ஒரு மெலிந்த நபர் அலைப்பேசியை காண்பித்தவுடன் காளை மாடு புகைப்படம் எடுக்க தனது முகத்தை காட்டியது, அப்போது அவன் அணியை சேர்ந்தவர் மாட்டை அடக்கினார். காளைமாடு தோற்றது, அதன் புகழ் இகழாக மாறியது.மக்கள் அனைவரும் சிரித்தனர், இந்த காளை மாடு சரியான நகைச்சுவை துண்டு. அதன் உரிமையாளர் தலை குனிந்து அங்கிருந்து சென்றார்.
முயற்சிக்கு அடிமையாகு, வெற்றி உன் மடியில்.
பணிவுக்கு அடிமையாகு, புகழ் உன் மடியில்.
இதை மாற்றாக செய்தால் வாழ்க்கை தலைகீழாகும். புகழ் எனும் போதை நல்ல பண்புகளை மட்டுமல்ல, நம்மை நேசிக்கும் உறவுகளை இழக்க செய்துவிடும். குடிபோதையை விட விளம்பர புகழ் போதை ஆபத்தானது . இது (பணம், பதவி ,புகழ் இவை மூன்றுமே ) நீராவி போன்று வந்த வேகத்தில் வேகமாக மறைந்து விடும். எப்படி காளைமாடுவும் அதன் உரிமையாளரும் புகழ் போதையில் மாட்டி இகழ் அடைந்தனர்.
வந்தார்கள், சென்றார்கள் என்று இல்லாமல், இந்த இரண்டு வார்த்தைகளுக்கு நடுவில் வென்றார்கள் என்று இருக்க வேண்டும். பிறர் புகழ் பாடுவதை நிறுத்தி விட்டு நாம் இழந்த சிந்தனையை மீட்டு நமக்கான வெற்றியை உருவாக்க வேண்டும். வாழ்க்கையில் இகழ் வரும்போது நிதானம் தேவை , வானுயர்த்த புகழ் வரும் பொது கவனம் தேவை .
மூத்த சகோதரி: இப்போ புரிந்து விட்டது , புகழ் நல்லது, அது நம்மை தேடி வேறவேண்டும், நம் உழைப்பின் மூலமாக. நாம் அதை தேடி போக தேவை இல்லை . நன்றி சகோதரி .
கதை கருத்து
புகழுடன் வாழவேண்டுமெனில் நற்செயல்களை செய்ய வேண்டும். புகழ் நிலைத்து நிற்க்க வேண்டுமெனில் இழிவான செயலிகளை தவிர்க்க வேண்டும்.
பேரும்,புகழும் உன்னை தேடி வரவேண்டுமெனில் உண்மை, உழைப்பு நிலைத்து நிற்க்க வேண்டும். பணம், பதவியில் கிடைக்கும் புகழ் அது இருக்கும் வரைக்கும் தான் ஆனால் குணத்தால் கிடைக்கும் புகழ் இந்த உலகம் இருக்கும் வரை.
புகழ் எனும் போதையில் சிக்கி கொள்ள வேண்டாம் . அது உங்கள் வளர்ச்சியை தடுக்கும் . கடுமையா உழையுங்கள் , உண்மையாக இருங்கள் , நட்பினை நேசியுங்கள், கவனம் கொள்ளுங்கள் , சுயமரியாதையுடன் வாழுங்கள் . புகழ் வரும் கண்டுகொள்ளாதீங்க….