கதை கேளு — பேராசை
நாய் ஒன்று ரொம்ப நாட்களாகவே கடும் கவலையிலிருந்தது. அதன் கவலை எல்லாம் மக்கள் நம்மை பார்க்கும்போது நாம் குரைத்தால் நம்மை மக்கள் கல்லெடுத்து எறிகிறார்கள், தடியால் துரத்துகிறார்கள். ஆனால் தொலைக்காட்சியில் புலியை பார்த்தாலே பயப்படுகிறார்கள். எப்படியாவது நான் புலியாக மாறி இவர்களை பயப்படுத்தவேண்டும் என்று அதற்கு ஒரு தீராத ஆசை இருந்தது. இந்த ஆசை நாளடைவில் பேராசையாக மாறியது.
ஒரு நாள் அதன் கண்ணில் ஒரு வீட்டில் புலித்தோல் இருந்தது தென்பட்டது. அதை உடனடியாக அந்த உரிமையாளருக்கு தெரியாமல் நாய் கைப்பற்றியது. அந்த தோலை உடுத்திக் கொண்டது. தான் எங்கு செல்கிறதோ அங்கிருந்த மக்கள் இது புலி என நினைத்து அதைக் கண்டு பயந்து ஓடினார்கள். நாளடைவில் அது தன்னை புலி எனக் கருதிக் கொண்டு அனைவரையும் பயமுறுத்தி கொண்டிருந்தது.
ஒருநாள் இரவு அது தூங்கி கொண்டிருக்கும் போது திடீரென கேட்ட சத்தத்தில் குரைக்க ஆரம்பித்தது. இதன் சத்தத்தை கேட்ட அந்த தெருவாசிகள் இது புலி இல்லை. புலித்தோல் பொத்திய நாய் என தெரிந்து கொண்டார்கள், அந்த நாயை துரத்தி பலமாக கல்லாலும், தடியாலும் அடித்தனர். அதற்கு பலத்த காயம் ஏற்பட்டது.
காயத்துடன் இருந்த நாயை ஒரு பெரியவர் காப்பாற்றி வைத்தியம் பார்த்தார். அவருக்கு அந்த நாய் நன்றி கூறியது . என்னை அடித்தவர்களை நான் பலி வாங்குவேன். நான் எப்படியாவது புலியாக வேண்டும் .
அதற்க்கு அந்த பெரியவர் அத்தனைக்கும் ஆசை படு அனால் பேராசை படாதே.
பேராசையா? அப்படி என்றால் என்ன?
இன்னும் இன்னும் வேண்டும் என்று பெருகும் ஆசை தான் பேராசை. நிம்மதியைய் தொலைக்க வைக்கும் எந்த ஒரு ஆசையும் பேரசைத்தான். அளவுக்கு மேல் உண்டால் அமிர்தம் கூட விஷம் தானே? அது போல தான் பேராசை. இது ஒரு பெரும் வியாதி. உனக்கு ஏற்பட்ட காயத்திற்கு சுலபமாக மருந்து போட்டு குணப்படுத்தமுடியும். பேராசை வியாதிக்கு உன் புரிதல் தான் மருந்து.
உன் பலத்தை மற்றவர்களுக்கு காட்ட வேண்டுமென்றால் உன்னுள் உள்ள திறமையை அறிந்திடு. அந்த திறமையை அறிந்து, அதை நீ முழுமையாக வெளிப்படுத்தினால் கண்டிப்பாக உன் பலத்தை அனைவரும் அறிவர். அதை விட்டுவிட்டு மற்றவர்களைப் போல் வேடமிட்டு உன் பலத்தை நீ காட்ட வேண்டும் என்று நினைத்தால், அது உன் அழிவுக்கு தான் கொண்டு செல்லும்.
நீ மட்டுமல்ல மனிதர்களும் கூடத்தான் பேராசையால் அழிந்துவிடுகிறார்கள். ஒரு நகைச்சுவை சொல்கிறேன். ஆசைக்கும், பேராசைக்கும் என்ன வித்தியாசம் என்று.
திருமணம் ஆக வேண்டும் என்பது ஆசை!
திருமணத்திற்குப் பிறகு சண்டை இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைப்பது பேராசை!
இதைவிட என்னால் எளிமையாக கூற முடியாது.
பேராசை பெரு நஷ்டம் எல்லா நேரத்திலும் . பேராசையில் நிச்சயம் அழிவு உண்டு . பேராசை வாழ்க்கை பாதையை அடைத்து விடுகிறது
பெரியவரின் அறிவுரையை கேட்ட நாய், ஆம் நான் கண்ட ஆசை பேராசை தான். இனிமேல் இதுபோன்ற தவறுகளை நான் செய்யமாட்டேன். என்னுள் உள்ள திறமைகளை அறிந்து அதற்கேற்றார் போல், எனது பலத்தை கூட்டி கொள்வேன். நன்றி வணக்கம் என்று விடை பெற்றது.
கதை கருத்து:
கண்ணதாசன் சிந்தனை வரிகள் — பேராசைகள் பிடித்து அலையத்திருந்தால் பெரும்பான்மையானோர் சிறிய முயற்சிகளில் கூட வெற்றியை காண்பார்கள்.
பேராசை கொள்ளாதே!! பேராசை இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து பார். வாழ்க்கையின் அழகான அர்த்தம் புரியும்.
பேராசை கொண்ட மனிதனின் மனதில் பயமும் வேதனையும் குடிகொண்டிருக்கும் .
பேராசை முடிகின்ற இடத்தில் பேரின்பம் தொடங்குகிறன்றது !!!